• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-20 10:50:03    
சாய் சௌ சியூ

cri

சீனாவின் தென் மேற்கில் யூனான் மாநிலம் அமைந்துள்ளது. இம்மாநிலத்தின் சான் யீ மாவட்டத்தில் ரோ ஜூ சாங் என்னும் கிராமம் இருக்கிறது. கிராமத்தில் நுழைந்ததும், பல வீடுகளின் வெளிச் சுவர்களில் ஓவியங்களை காணலாம. அந்த ஓவியங்கள் ஆழமான உள்ளடக்கம் வாய்ந்த கிராம வாழ்க்கையுடன் தொடர்புடையவை. சிலவற்றில் அழகான மலை மற்றும் நீல் நிலைகள் இருக்கின்றன. சிலவற்ரில் சுறுசுறுப்பான விளை நிலக்களில் உழைக்கும் காட்சிகள் வெளிகாட்டப்படுகின்றன. சிலவற்றில் விவசாயிகள் கலை நிகழ்ச்சியில் ஈடுபடும் காட்சி திட்டப்படுகின்றன. இந்த ஓவியங்கள் கிராமத்தை அழகாக அலங்கரித்துள்ளன. சாதாரன ஒரு கிராமத்தில், இந்த அழகான காட்சி இருக்கின்றது என்பதை கண்டு நாம் நம்ப முடியாது. இந்த ஐயத்துடன் நாம், கிராமத்தின் ஒரு பெண்மணியிடம் கேள்வி கேட்போம்.


உங்களுடைய வீட்டின் வெளிச் சுவரில் இத்தகைய ஓவியங்கள் தீட்டப்பட்டதா
ஆமாம், அதிக ஓவியங்கள் இருக்கின்றன. அழகானது அவர் கேள்விக்கு பதிலளித்தார்,
யார் இவற்றை வரைந்த ஓவியர் என்று நாம் மேலும் கேள்வியைக் கேட்டோம்.
ஓ, சாய் சௌ சியூ தான் இவற்றை வரைந்தார். இது எல்லோருக்கும் தெரியும் என்றார் அவர்.
சாய் சௌ சியூ என்பவர், 40 வயதுக்கு மேலானவர். அளவான உடலும் நல்ல திறமையும் கொண்டார்.
சுவர்களில் ஓவியங்களை தீட்டும் காரணம் என்ன எனும் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் கூறியதாவது
தாட்டாவின் செல்வாக்கில் இள வயதிலிருந்தே எழுத்துக்களும், ஓவியங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். அப்போது முதல் எடுத்துகளும் ஓவியங்களும் என் வாழ்க்கையுடன் இணைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

 
சிறிய வயதில், அவருடைய மனதில் ஒரு கனவு இருந்தது. ஒரு ஓவிய ஆசிரியராக மாற விரும்பினார். 1985ம் ஆண்டு இடை நிலை கல்வி முடிந்த பின், தன் விருப்பப்படியே உள்ளூரின் பள்ளியில் ஓவிய ஆசிரியராக மாறினார். பின்னார். அவர் சீன ஓவியத்துறை தொடர்பான பல்கலைகழக பட்ட சான்றிதழை பெற்றார். அபோதைய கிராமங்களில் உயர் கல்வியறிவு பெற்றவர்கள் குறைவு, குறிப்பாக உயர் கல்வி பெற்ற பெண்மணிகள் மிகமிகக் குறைவு. இதனால், 1987ம் ஆண்டு கிராம செயல் கமிட்டி, செயலாளர் வேலையில் ஈடுபடுமாறு அவரை அழைத்தது. இதனால், கடந்த 20 ஆண்டுகளாக அவர் செயலாளராக பணிபுரிந்துள்ளார்.
சாய் யீ மாவட்டத்தில், 2005ம் ஆண்டு முதல் புதிய கிராமத்தை உருவாக்குவதில், பல்வேறு கிராமங்களிடையிலான பாதைகள் கட்டியமைக்கப்பட்டு கிராம வீடுகளின் வெளி சுவர்கள் தூய்மையாக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளையான சுவர்களை பார்த்த போது, எழுத்துக்கள், ஓவியங்கள் முதலியவற்றை இவற்றில் வரைய முடியுமா என்று சாய் சௌ சியூயோசித்தார். கிராம செயல் கமிட்டியின் ஆதரவை அவர் பெற்றார். 2005ம் ஆண்டு முதல், இந்த கிராம பெண்மணி, சுவர்களில் ஓவியங்கள் வரைய துவங்கினார். ஒரு திங்களுக்குள், பல விவசாயிகளின் வீட்டுச் வெளிச் வீட்டின் சுவர்களில் 30க்கு அதிகமான ஓவியங்களை அவர் வரைந்தார்.