சூங் சான் வனப்பூங்கா, பெய்ஜிங்கின் யான் ச்சிங் மாவட்டத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. பெய்ஜிங்கின் நகரப் பகுதிக்கான தூரம், சுமார் 90 கிலோமீட்டர் ஆகும். 4660 ஹெக்டர் பரப்பளவுடைய இந்தக் வனப்பூங்காவைச் சேர்ந்த, கடற்மடத்திலிருந்து 2199 மீட்டர் உயரமான ஹெய் தோ மலை, பெய்ஜிங்கில் 2வது உயரமான மலையாகும். 1986ம் ஆண்டு, சூங் சான் வனப்பூங்கா, சீன அரசவையால், நாட்டு நிலை இயற்கை பாதுகாப்பு மண்டலமாக கருதப்பட்டது. பெய்ஜிங்கின் பின் பூங்கா என பெயர்ப்பட்டுள்ளது.

இப்பூங்காவில் நுழைந்த பயணிகள், பச்சை மலையையும் நீரையும் பார்த்து மகிழ்வதோடு, பசுமையான காற்றையும் உணர்கின்றனர். சூங் சான் இயற்கைக் காட்சி பிரதேசம், எடுத்துக்காட்டு மலை கால நிலையாகும். இங்கு குளிராக இருக்கிறது. பொதுவாக, சராசரி வெப்பம், சுமார் 7 டிகிரி செல்சியஸ், பெய்ஜிங் நகரப்பகுதியை விட, 4 டிகிரி செல்சியஸ் குறைவு. வெப்ப காலநிலையில், குளிரான இடங்களைத் தேடும் பொருட்டு, பல பயணிகள், கோடைக்காலத்தில் சிறப்பாக இங்கு வருகை தருகின்றனர்.
|