• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-21 17:06:24    
சீனாவின் கிராமிய தொழில் நிறுவனங்கள்

cri

இவ்வாண்டின் முற்பாதியில், சீனாவின் கிராமிய தொழில் நிறுவனங்கள் சீராக செயல்பட்டு வந்தன. அவை பெற்ற மதிப்பு கூடுதல், 3 லட்சத்து 10 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 13 விழுக்காடு அதிகரித்துள்ளது.

சீன வேளாண் துறை அமைச்சகத்திலிருந்து எமது செய்தியாளர் இதை அறிவித்தார்.
ஏற்றுமதியில், இவ்வாண்டின் முற்பாதியில், கிராமிய தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதித்தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட சுமார் 20 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது, இத்தொழில் நிறுவனங்களின் வேகமான வளர்ச்சியைத் தூண்ட, குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது. தவிர, இவ்வாண்டின் முற்பாதியில், இத்தொழில் நிறுவனங்களின் தொழில் கட்டமைப்பு சரிப்படுத்தல், தங்கு தடையின்றி முன்னேறியுள்ளது. சுற்றுலாத் துறையை பிரதிநிதியாகக் கொண்ட சேவை தொழில், விரைவாக வளர்ந்து வந்துள்ளது.

தற்போது, கிராமிய தொழில் நிறுவனங்கள், சீனப் பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரத்தூண்ணாக மாறியுள்ளன. கிராமங்களில், மிஞ்சிய உழைப்பு ஆற்றல் வாய்ந்தோருக்கு வேலை வாய்ப்பு வழங்குவது பற்றிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இவை முக்கிய பங்காற்றியுள்ளன.