• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-23 11:18:24    
ஆசிய கோப்பை கால்பந்து போட்டி

cri

பெய்சிங் நேரப்படி ஜூலை திங்கள் 18ம் நாள், ஆசிய கோப்பை C குழுவின் ஆட்டத்தில், சீன அணியும் உஸ்பெகிஸ்தான் அணியும் மோதின. உஸ்பெகிஸ்தான் அணியின் வீரர்கள், Shatskikh, Kapadze, Geynrikh ஆகியோர் அடித்த 3 கோல்களை கொண்டு, சீன அணியை 3-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தான் தோற்கடித்தது. சீன அணி C குழுவில் மூன்றாவது இடம் பெற்றதால் கால் இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை. 1980ம் ஆண்டுக்கு பின், ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் கால் இறுதி ஆட்டத்துக்குச் சீன அணி முன்னேறாதது இதுவே முதன் முறையாகும்.

இதர C பிரிவு போட்டியில், ஈரான் அணி, மலேசிய அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ஈரான் அணியும் உஸ்பெகிஸ்தான் அணியும் ஆசிய கோப்பையின் கால் இறுதி ஆட்டத்தில் நுழைந்தன.

தவிர, ஈராக், ஆஸ்திரேலியா, ஜப்பான், வியட்நாம், சௌதி அரேபியா, வட கொரியா ஆகியவையும் ஆசிய கோப்பையின் கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.