• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-24 20:34:58    
தலைநகர் இடம் பெயர்ந்தது

cri
1421ம் ஆண்டு பிப்ரவரி 2ம் நாள் மிங் வம்ச ஆட்சி அதிகாரப்பூர்வமாக தன் தலைநகரை பெய்ஜிங்கிற்கு இடம் பெயர்ந்தது. 1368ம் ஆண்டு மிங் படைகள், யுவான் வம்சத்தின் DA DU நகர் மீது படையெடுத்து கைப்பற்றி அதற்கு பெய் பிங் என பெயர் சூட்டியது. காவல் புரிய துணைபுரியும் பொருட்டு, நகரின் வடபகுதி சுவருக்குத் தெற்கில் சுமார் 2.5 கிலோமீட்டர் தூரத்தில் புதிய மதில் ஒன்றை கட்டியமைத்தது. மிங் வம்சக்காலத்தின் பெய்ஜிங் நகரின் வட எல்லையான அமைந்துள்ளது. அதனிடையில் யுவான் வம்சக்காலத்தின் செல்வாக்கை அழித்தொழிக்கும் வகையில், DA DU நகரில் இருந்த அனைத்து அரண்மனைகளையும், அது அகற்றியது. 1402ம் ஆண்டு டிசெம்பர் 18ம் நாள் மிங் வம்சத்தின் அரசர் ZHU LI தலைநகரை பெய்ஜிங்கிற்கு இடம் மாற்றுவதென முடிவு எடுத்தார். 1407ம் ஆண்டு மே திங்கள் முதல், தொழிலாளர்களும், ராணுவத் தொழிலாளர்கும் விவசாயத் தொழிலாளர்களும் ஆக மொத்தம் 3 லட்சத்துக்கு மேலானோர் அணிதிரட்டப்பட்டனர். இவர்கள் பெய்ஜிங்கில் சுறுசுறுப்பாக அரண்மனைகளைக் கட்டியமைத்து, நகரை சீரமைத்தனர்.

14 ஆண்டுகளுக்குப் பின் அதாவது 1420ம் ஆண்டு அதன் முழு சீரமைப்புப் பணி நிறைவேறியது. 1421ம் ஆண்டு பிப்ரவரி 2ம் நாள் அரசர் ZHU LI யின் அதிகாரப்பூர்வமான கட்டளையில் தலைநகரம் பெய்ஜிங்கிற்கு இடம் பெயர்ந்தது. அக்காலத்து பெய்ஜிங் நகர், உட்புறத்திலிருந்து வெளிப்புறமாக தடுக்கப்பட்ட நகரம், அரச நகரம், உள் நகரம், வெளி நகரம் என 4 அடுக்குகளாக பிரிக்கப்பட்டிருந்தது. 8 கிலோமீட்டர் நீளமுடைய சாலை ஒன்று தெற்கிலிருந்து வடக்காக குறுக்காக அமைந்தது. பல்வகைக் கட்டிடங்கள் சாலையின் இரு மருங்கிலும் ஒழுங்கான முறையில் அமைக்கப்பட்டன. மிங் வம்சக்காலத்து பெய்ஜிங் நகர் அக்காலத்து நாட்டின் அரசியல் மற்றும் பண்பாட்டு மையமாக திகழ்ந்தது.