• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-24 10:25:28    
தேயிலையின் கதை

cri

நம்ம வாணி தில்லியில் தமிழ் கற்றதால், அவருக்கு இந்த மசாலா சாய் மிகவும் விருப்பம். சரி, தேனீரை அப்புறம் குடிக்கலாம். இப்போது தேயிலையின் கதையைக் கேட்போம்.


சீனாவிலே வகைவகையான தேயிலைகள் உள்ளன. அவற்றிலே மிக முக்கியமானவை 10 வகைகள். லோங் ஜிங்-டிராகன் கிணறு;குவா பியன் (Gua Pian)-மெலன் துண்டு; யின் ஷென் (Yin Shan)-வெள்ளி ஊசி; மாவ்பெஃங் (Mao Beng)-ரோமத்தின் நுனி; மாவ் ஜியான் (Mao Jian)-ரோம நுனி; ஹுகுவெய் (Hou Kuei)-குரங்குத் தலை;யுன்வு (Yun Wu)-மூடுபனியும் மேகமும்; கன்லு (Gan Lu)-இனிய பனி;ஜிசுன் (Zi Sun)-இளஞ்சிவப்பு மூங்கில் குருத்து;பிலு வோச்சுன் (பச்சை நத்தைச் சுருள்). இந்தத் தோயிலை வகைகளைக் கொண்டு பச்சைத் தேனீர், கருப்புத் தேனீர், கரும்பச்சை தேனீர், வெள்ளைத் தேனீர், வாசனைத் தேனீர் என்று வெவ்வேறு சுவைகளில் தேனீர் தயாரிக்க முடியும். ஒவ்வொரு வகைத் தேயிலையின் பின்னணியிலும் அதன் வரலாறு பற்றி ஒரு சுவையான கதை இருக்கிறது.


பண்டைக்காலத்தில் துங்த்திங் (Dong Ting) என்ற இடத்தில் கிழக்கு மலை அடிவாரத்தில் தய்ஹு (Taihu) ஏரியை ஒட்டி ஒரு மீனவக்குடும்பம் வசித்து வந்தது. அந்தக் குடும்பத்தில் அழகான, அன்பான ஒரு இளம் பெண் இருந்தாள். அவள் பெயர் பிலுவோ (Biluo). அவள் விறகு பொறுக்குவதற்காக மலைக்குப் போவது வழக்கம். ஒரு நாள் அவள் மலையேறிக் கொண்டிருந்த போது, திடீரென ஒரு நறுமணம் அவள் மூக்கைத் துளைத்தது. வாசனை வீசிய திக்கை நோக்கிச் சென்ற அவள், பச்சைப்பசேல் என்று அடர்ந்த ஒரு தேயிலை மரத்தைக் கண்டாள். அதில் இருந்து ஒரு இலையைப் பறித்து முகர்ந்து பார்த்தாள். அதனுடைய இனிமையான நறுமணத்தால், அவள் உடம்பில் எப்போதும் வீசிக் கொண்டிருக்கும் மீனின் கவுச்சி வாசனை மறைந்தது. உடனே அந்த தேயிலைச் செடியை வேரோடு பெயர்த்து எடுத்து வந்து வீட்டு முற்றத்தில் நட்டுவைத்தாள்.

ஒரு நாள் மீன்பிடித்து விட்டு, களைத்துப் போய் திரும்பிய அவள், முற்றத்தில் இருந்த ஜாடியில் இருந்து தண்ணீர் குடித்தாள். அந்தத் தண்ணீரின் சுவை இனிமையாக இருந்தது. குடித்ததுமே புத்துணர்ச்சி பிறந்தது. இது வழக்கமாகக் குடிக்கும் தண்ணீர் இல்லை என்பதைப் புரிந்து கொண்டாள். தண்ணீர் ஜாடியைப் பார்த்த போது, அதில் தேயிலைச் செடியின் சில இலைகள் விழுந்து கிடப்பதைக் கண்டாள். உடனே சில இலைகளைப பறித்து, நீரில் கொதிக்க வைத்து, அந்தப் பானத்தை ஊரில் உள்ள அனைவருக்கும் பருகக் கொடுத்தாள். மக்கள் அந்தத் தேனீரைக் குடித்து மகிழ்ந்து, அந்தத் தேயிலைக்கு அவருடைய பெயரையே சூட்டினார்கள். அன்றில் இருந்து பிலுவோச்சுன் தேயிலை உருவெடுத்தது.