• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-24 10:35:51    
Nan kai பல்கலைக்கழகம்

cri

நேயர்களே, Nan kai பல்கலைக்கழகம் சீனாவின் தியேன் சின் மாநகரில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாகும். திறமைசாலிகளை உட்புகுத்தும் பொருட்டு, அண்மையில் இது விளம்பரம் மூலம் வேலைக்கான விண்ணப்பங்களை வரவேற்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. மருத்துவயியல் கல்லூரி, உயிரின அறிவியல் கல்லூரி, இயற்பியல் கழகம் உள்ளிட்ட பல முக்கிய கல்லூரிகள் புதிய தலைவர்களையும் உயர் நிலை நிர்வாகப் பணியாளர்களையும் அமர்த்தியுள்ளன. 88 ஆண்டு கால வரலாறுடைய இந்தப் பல்கலைக்கழகத்தில் விளம்பரம் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டிலிருந்து உயர் நிலை பணியாளர்களின் வேலைக்கான விண்ணப்பங்களை வரவேற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறையாகும்.


மார்சு திங்களின் ஒரு நாளில், Nan kai பல்கலைக்கழகத்தின் மருத்துவயியல் கல்லூரின் ஆசிரியர்கள் கூட்ட அறையில் புதிய தலைவரை வரவேற்கக் காத்திருந்தனர். காலை 9 மணிக்கு 48 வயதான திரு Xing rong வந்திருந்தார். வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட கல்லூரி தலைவராக நியமிக்கப்பட்ட 9 திறமைசாலிகளில் அவர் ஒருவராவார்.
1992ம் ஆண்டு, ஷாங்காய் மாநகரின் 2வது மருத்துவவவியல் பல்கலைக்கழகத்தின் செல் உயிரியர் மற்றும் ஆய்வுச் செல்லியல் பிரிவில் அவர் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர், அமெரிக்காவின் கலிபோஃனிய ஸ்கிரிப்ஸ் ஆய்வு கழகத்தில் நோய் தடுப்பு பிரிவின் துணை பேராசிரியராக அவர் பணி புரிந்தார். Nan kai பல்கலைக்கழகத்தின் தேர்வு பற்றி அவர் கூறியதாவது

 
கடந்த ஆண்டு, நான் அமெரிக்காவின் ஆய்வகத்தில் பணி புரிந்தேன். Nan kai பல்கலைக்கழகம் உலகில் திறமைசாலிகளை வரவழைப்பது பற்றிய செய்தியை நண்பர் ஒருவர் மூலம் அறிந்தேன். பின்னர், இணையம் மூலம் நான் விண்ணப்பம் செய்தேன். Nan kai பல்கலைக்கழகம் சீனாவில் முதல் தரப் பல்கலைக்கழகமாகும். தியேன் சின்னும் நாட்டின் முக்கிய நகரமாகும். இங்கே பணி புரிவதன் மூலம் எனக்கு மேலும் அதிக வளர்ச்சி வாய்ப்பு கிடைக்கலாம் என்றார் அவர்.

 
Nan kai பல்கலைக்கழகம் சீனாவின் முக்கிய பன்னோக்கப் பல்கலைக்கழகமாகும். சீனாவின் முதலாவது தலைமை அமைச்சர் சோ என் லேய் உள்ளிட்ட தலைசிறந்த திறமைசாலிகள் இங்கே வளர்ந்தனர். சீனத் தேசத்தின் மறுமலர்ச்சி மற்றும் வளத்துக்கு அவர்கள் முக்கிய பங்கு ஆற்றியுள்ளனர். மறுபுறம், தியேன் சின் மாநகரின் வளர்ச்சி Nan kai பல்கலைக்கழகத்திலிருந்து பிரிக்கப்பட முடியாதது. தியேன் சின் வடக்குச் சீனாவின் பெரிய நவீன துறைமுக நகரமாகும்.

சீனப் பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சி போக்கில் இது மென்மேலும் முக்கிய பங்கு ஆற்றும். குறிப்பாக, தியேன் சின் புதிய Binghai மண்டலம் சீனாவின் முக்கிய வளர்ச்சி மண்டலங்களில் சேர்க்கப்பட்டப் பின், தியேன் சின் மாநகரின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் தெளிவாகி வருகின்றது. முன் கண்டிராத வளர்ச்சி வாய்ப்பை எதிர்நோக்கும் Nan kai பல்கலைக்கழகம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு திறமைசாலிகளை உட்புகுத்துவதில் கவனம் செலுத்துகின்றது.