• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-25 16:59:35    
மக்களின் இசைஞர் NIE ER

cri

1912ம் ஆண்டு பிப்ரவரி 14ம் நாள் மக்களின் இசைஞர் NIE ER,குவன்மிங் நகரில் பிறந்தார். சிறு வயதிலேயே இசை மீது பெரும் நாட்டம் காட்டிய அவர், 1918ம் ஆண்டு குவன் மிங் ஆசிரியர் பயிற்சி பள்ளியைசே சேர்ந்த துவக்க பள்ளியில் கல்வி பயிலத் துவங்கினார். அப்போது அவர் அடிக்கடி ஒய்வு நேரத்தில் தேசிய இசைஞர்களிடம் புல்லாங்குழல் வாசிக்கவும், ஹு ச்சின், சான் சியென், யே ச்சின் உள்ளிட்ட தேசிய இசை வடிவங்களை பழகலானார்.

1928ம் ஆண்டு அவர் சுறுச்சுறுப்பாக புரட்சிகர இயக்கங்களில் பங்கெடுத்து, சீன கம்யூனிச இளைஞர் அணியிலும் சேர்ந்தார். 1932ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் இடதுசாரி நாடக ஆசிரியர் தியென் ஹான் மூலம், அவர் இடதுசாரி கலை இலக்கிய வட்டாரங்களுடன் தொடர்பு கொண்டார்.

தியென் ஹான்னுடனான நட்பும் ஒத்துழைப்பும் அவருடைய கலைச்சாதனைகளுக்கு ஆழந்த செல்வாக்கை ஏற்படுத்தின. 1933ம் ஆண்டு, அவர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அக்காலத்தில் அவர் இடதுசாரி இசை, நாடகம், திரைப்படம் ஆகிய பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டார். ஜப்பானின் இசை நாடகம் திரைப்படம் ஆகிய துறைகளைச் சோதித்து ஜப்பானின் கலை இலக்கியத் துறைகளிடம் சீன இசையின் புதிய வளர்ச்சியை அறிமுகப்படுத்தும் வகையில், அவர், 1935ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் ஜப்பானுக்குச் சென்றார். அதற்கிடையில் அயல் மொழியையும் இசைக் கலையையும் அவர் மும்முரமாக கற்றார். ஜுலை 17ம் நாள் கடற்கையில் நீச்சலடித்து போது, துர திருஷ்டவசமாக நீரில் மூழ்கி மாண்டார். அப்போது அவருக்கு வயது 23 தான். NIE ER,மொத்தம் 37 பாடல்களை இயற்றி இசை அமைத்தார்。