ஜெங் நகரத்தில் வசித்த ஒரு மனிதர் ஒரு நாள் தமக்கு தோல் காலணி வாங்க கடைக்குப் போனார். போவதற்கு முன் பாதத்தை ஒரு தானில் வரைந்து அளவெடுத்தார். ஆனால் போகும் அவசரத்தில் அந்தத் தாளை எடுத்துப் போக மறந்துவிட்டார்.
கடைக்குப் போய் காலணியை தெரிவு செய்த பிறகு, அது தனது காலுக்குப் பொருந்துமா என தெரியவில்லை. உடனே வீட்டுக்குத் திரும்பினார். பாதத்தின் அளவு வரையப்பட்ட தாளை எடுப்பதற்காக. அவர் திரும்பி வருவதற்குள் கடை காலியாகிவிட்டது. எல்லா காலணிகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. அப்போது கடையில் இருந்த பணியாள் கேட்டான்.
"ஐயா, நீங்க செருப்பை எடுத்ததுமே உங்க காலிலே மாட்டி அளவு பார்த்திருக்கலாமே."
"தம்பி, நான் என்னையே நம்ப மாட்டேன். நான் எடுத்த அளவைத் தாள் நம்புவேன்."
|