|
1982ம் ஆண்டு பிப்ரவரி 15ம் நாள் சீனா முதலாவது தொகுதி வரலாற்று பண்பாட்டு நகர பட்டியலை முதன்முதலாக வெளிப்படுத்தியது. சீனா நீண்டகால வரலாறுடைய நாகரீகமுடைய புராதன நாடாகும். பல வரலாற்றுப் பண்பாட்டு நகரங்கள் சீனாவின் வெவ்வேறான காலக்கட்டங்களில் வேறுபட்ட பிரதேசங்களின் அரசியல் பொருளாதார மற்றும் பண்பாட்டு மையங்களாக திகவ்ந்தன. சில நகரங்கள், நவகால புரட்சி இயக்கங்கள் மற்றும் முக்கியமான வரலாற்று நிகழ்ச்சிகள் நிகழந்த முக்கிய நகரங்களாகவும் விளங்கின. இந்தப் புகழ்பெற்ற வரலாற்றுப் பண்பாட்டு நகரங்களிலும் தரைக்கடிகளிலும் பெருவாரியான வரலாற்று மற்றும் புரட்சிகரத் தொல் பொருட்கள் சேமிக்கப்பட்டிருக்கின்றன. இவை, சீனத் தேசத்தின் நீண்டகால வரலாற்றையும் புகழ்பெற்ற புரட்சிகர பாரம்பரியங்களையும் ஒளிமயமான பண்பாட்டையும் பிரதிபலிக்கின்றன.
இந்த வரலாற்று பண்பாட்டு நகரங்களை பேணிக்காத்து செவ்வனே நிர்வகிப்பதென்பது, சோஷலிச தார்மீக நாகரீகத்தை உருவாக்குவதிலும் சீனாவின் சுற்றுலாத் துறையை வளர்ப்பதிலும் முக்கிய பங்காற்றுகின்றது. பெய்ஜிங், செங் தே, தா தொங், நான் ஜிங், ஹாங் சோவ், ச்சுவான் யி, யென் ஆன், சியுஃபு, லோ யாங் ஆகிய நகரங்கள் முதந்முதலாக வெளியிடப்பட்ட வரலாற்று பண்பாட்டு நகரங்களாகும்.
|