• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-01 11:58:58    
சொர்க்கத்திற்கு வழி

cri

"சொர்க்கத்திற்கு எல்லோராலும் போக முடியாது. அதனால, பாதித்தொலைவு வரையாவது நான் போகணும். பாதிவானத்தை எட்டக் கூடிய ஒரு பிரம்பாண்டமான கோபுரத்தைக் கட்டி அதிலே ஏறி சொர்க்கத்தைப்பார்க்கப் போறேன். என்னோட இந்த முடிவு உறுதியானது. இதை மாற்றும்படி யாராவது என்னை வற்புறுத்தினால் தலையை வெட்டி விடுவேன்" என்று மன்னன் வெய் தனது அரசவையில் கூறிவிட்டான். பாதி சொர்க்கக்கோபுரம் கட்டுவதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்யும்படி உத்தரவிட்டான். பற்பல திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆனாளுக்கு ஆயிரம் ஆலோசனைகள் சொன்னார்கல். அப்போது கையில் மண்வெட்டியும் முதுகில் மண்ணை கூடையுமாக அமைச்சர் சு வான் வந்து நின்றார்.

"அமைச்சரே! இது என்ன புதுக் கோலம்?" என்று ஆச்சரியத்துடன் வினவினான் அரசன்.

"மன்னா, சொர்க்கத்திற்குப் போக பாதிவழிவரை நீங்க கோபுரம் கட்டும் போது என்னாலான வேலை செய்ய வேண்டாமா? அதுதான்."

"உங்களால மண்வெட்டியைத் தூக்கக் கூட முடியாதே! இந்த வயோதிகத்துல என்ன வலிமை இருக்கு உங்ககிட்டே?"

"மன்னா, என் உடம்பிலே வறு இல்லாம இருக்கலாம். ஆனால் மூளையிலே இருக்குது. கோபுரம் கட்ட உங்களுக்குத் திட்டம் போட்டுத் தருவேன்."

"சரி, உங்கள் திட்டத்தைச் சொல்லுங்க." என்று மன்னன் சொன்னதும் அமைச்சர் விவரிக்கத் தொடங்கினார்.

"அரசே! வானகத்துக்கும் வையகத்துக்கும் இடையே உள்ள தொலைவு 15000 லி என்று கேள்விப்பட்டேன். அதிலே பாதித் தொலைவுக்கு நீங்க கோபுரம் கட்டப் போறீங்க. அப்படின்னா, 7500 லி உயரத்துக்குக் கட்டணும். அவ்வளவு உயரமான கோபுரம் கட்டுறதுக்கு, குறைஞ்சது 8000 லி சுற்றுப்பரப்புக்கு அஸ்திவாரம் போடணும். அதுக்கு உங்ககிட்ட இருக்கிற எல்லா நிலத்தையும் வேர்த்தால் கூட போதாது. பக்கத்து நாடுகளைத் தாக்கினால் 5000 லி நிலம் கிடைக்கும். ஆனால் அதுவும் போதாது. நாலா திசைகளிலும் வெகுதொலைவில் வசிக்கிற காட்டு பிராண்டிப் பழங்குடிகளை விரட்டியடிச்சா ஒருவேளை உங்களுக்கு மொத்தம் 8000 லி நிலம் கிடைக்கும். அப்போது அஸ்திவாரம் போட்டுவிடலாம். ஆனா, அதுவ ஒரு பிரச்சினை. எட்டாயிரம் லி சுற்றுப்பரப்புல அஸல்திவாரம் தோண்டுனா அந்த மண்ணைக் கொண்டு போய் கொட்டுறதுக்கு நிலம் வேணுமே. அப்புறம் கட்டுமானப் பொருட்கள். தொழிலாளர்கள், அவர்களுக்கு உணவு இதுக்கு எல்லாம் கோடிக்கணக்கான யுவான் தேவை.

தொழிலாளர்கலுக்கு உணவு அளிக்க தானியம் விளைவிக்கணும் அதுக்காக எட்டாயிரம் லி சதுர பரப்புக்கு அப்பால் தனியாக வயல்கள் வேணும். இதுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துட்டால், கட்டட வேலையைத் தொடங்கிறலாம்" என்று அமெச்சர் தனது திட்டத்தை விவசித்ததும் மன்னன் வாயடைந்துப் போனான்.