• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-26 10:49:48    
தமிழ் ஒலிபரப்பின் 44வது ஆண்டு நிறைவுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு

cri
தமிழ் ஒலிபரப்பின் 44வது ஆண்டு நிறைவுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு

கலை.........வணக்கம் நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம்.

கிளீ.......உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. கலை இன்றைய நிகழ்ச்சியில் புதியவர் ஒருவர் நம்முடன் இணைந்து நிகழ்ச்சியை வழங்குவார் என்று கேள்விப்பட்டேன்.

கலை........ஆமாம். உங்களை பொருத்தவரை அவர் புதியவர் இல்லை.

செல்வம்.......வணக்கம் கிளீடஸ்.

கிளீ........வணக்கம் செல்வம். தொலை பேசி மூலம் உங்கள் குரலை கேட்டு மிக மகிழ்ச்சி யடைகின்றேன்.

கலை.....நானும் மகிழ்ச்சியடைகின்றேன்.

செல்வம்.......இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியின் மூலம் என்னால் இயன்ற உதவியை நேயர்களுக்கு வழங்குவதில் நானும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

..........................இசை.............

கலை........சரி. இன்றைய நிகழ்ச்சியில் முக்கியமாக இரண்டு விடயங்கள் பற்றி விவாதிக்க வேண்டும்.

செல்வம்........இவ்விரண்டு விடயங்கள் நமது தமிழ் ஒலிபரப்புடன் தொடர்புடையவை என்று நினைக்கின்றேன்.

கிளீ.......ஆமாம். கலை இவற்றை பற்றி நான் குறிப்பிடலாமா?

கலை..........நீங்கள் சொல்லுங்கள். நான் சரியா என்று பார்க்கின்றேன்.

கிளீ........முதலில் கண்டிப்பாக தமிழ் ஒலிபரப்பின் 44வது ஆண்டு நிறைவு பற்றி குறிப்பிட வேண்டும்.

செல்வம்.......உங்கள் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றேன்.

கலை...... நீங்கள் சொன்னது சரிதான். தமிழ் ஒலிபரப்பின் 44வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் எந்த வகை நிகழ்ச்சிகள் தயாரிக்க வேண்டும்?

செல்வம்........நான் கிளீடஸுக்காக பதிலளிக்கலாமா?

கலை.......சொல்லுங்கள் செல்வம்.

செல்வம்..........உங்களுக்கு நினைவு இருக்கிறதா?பாண்டிச்சேரி என் பாலக் குமார் ராட்சத பாண்டாவின் ஊரான ஸ்ச்சுவான் மாநிலம் பற்றிய பொது அறிவு போட்டியில் சிறப்பு பரிசு பெற்று சீனாவில் இலவசப் பயணம் மேற்கொண்ட போது சேந்த மங்கலம் எஸ் எம் இரவிச்சந்திரன், 30 பள்ளிப் பட்டி தமிழ் தென்றல் நேயர் மன்றத்தின் தலைவர் பி. ஆர். சுப்ரமணியன், பெருந்துறை பல்லவி கே பரமசிவன், ஆரணி கங்காயாஞ்சி நேயர் மன்றத் தலைவர் பொன் தங்கவேலன், பெரம்பலூர் கலைவாணன் ராதிகா ஆகியோர் தமிழ் ஒலிபரப்பின் 44வது ஆண்டு நிறைவுக்காக நேயர்களின் குரலை பதிவு செய்து நிகழ்ச்சியை உருவாக்கி ஒலிநாடாவை தனித்தனியாக பால குமாரிடம் ஒப்படைத்தனர்.

கலை........ஆமாம். அந்த ஒலி நாடாக்களைப் பெற்று அதை தொகுத்துக் கொண்டிருக்கிறோம்.

கிளீ.........ஓ கலை கடந்த வாரத்தில் நீங்கள் அலுவலகத்திற்கு வந்தவுடன் பதிவு அறையில் ஒலி நாடாவில் இருக்கின்ற நிகழ்ச்சிகளை கணிணியில் மீண்டும் பதிவு செய்து கொண்டிருந்தவை நேயர்கள் ஒப்படைத்த நிகழ்ச்சிகளா?

கலை........ஆமாம். இப்போது அவர்கள் அனுப்பிய ஒலி நாடாக்களில் இருக்கின்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் கணிணியில் பதிவு செய்து சேமித்துள்ளோம்.

கிளீ........உங்களுக்கு ஏற்கனவே வேலைகள் அதிகம். தனியாக இந்த வேலையை நிறைவேற்ற முடியுமா?

கலை..... நான் மட்டுமே இந்த நிகழ்ச்சிகளை உருவாக்குவது கண்டிப்பாக முடியாது.

செல்வம்..........ஏற்கனவே இருக்கின்ற நிகழ்ச்சிகள் நேயர் மன்றத்தின் அடிப்படையில் பகுதிப் பகுதியாக மற்ற பணியாளர்களிடம் ஒப்படைக்கலாமா?

கலை.......நீங்கள் குறிப்பிட்டதும் நான் செய்ததும் ஒற்றே.

கிளீ.......அப்படியிருந்தால் லட்சுமி, வாணி, கலைமகள், மீனா, வான்மதி ஆகியோரும் உங்களுடன் இந்த வேலையில் பங்கெடுக்கிறீர்கள். அப்படிதானே.

கலை......ஆமாம். தமிழ் ஒலிபரப்பின் 44வது ஆண்டு நிறைவை கோலாகலமாகக் கொண்டாடும் வகையில் இந்த முறை நேயர் மன்றத் தலைவர்கள் தயாரித்து அனுப்பிய நிகழ்ச்சிகள் செழுமையானவை.

கிளீ........அப்படியிருந்தால் நிகழ்ச்சிகளின் அம்சங்களை பற்றி முன்கூட்டியே நேயர்களுக்கு அறிமுகப்படுத்தலாமே. செல்வம்...........கலை இப்போது இது பற்றி விபரமாக அறிமுகப்படுத்தலாமா?

கலை.........மகிழ்ச்சிதான். நேயர் மன்றத் தலைவர்கள் தயாரித்து அனுப்பிய நிகழ்ச்சிகளில் தொலை பேசி மூலம் நேயர்களிடமிருந்து பாடல்கள் கதை கவிதைகள் ஆகியவற்றை பதிவு செய்த நேயர் மன்றம் சேந்த மங்கலம் நேயர் மன்றம். பெருந்துறை கொங்கு பண்பலை வானொலி வழங்கிய நிகழ்ச்சிகள், தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி முக்கிய அம்சமாக கொண்ட கங்காயாஞ்சி நேயர் மன்றத்தினரின் சிறப்பு நிகழ்ச்சி, ஈரோடு நேயர் மன்ற பொறுப்பாளர்களுடன் தொலை பேசி மூலம் நடத்திய உரையாடல் நிகழ்ச்சி முதலியவற்றை இந்த முறை தமிழ்ப் பிரிவின் 44வது ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் மூலம் கேட்கலாம்.

கிளீ.........அப்படியிருந்தால் கொண்டாட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் எத்தனை நாட்கள் நீடிக்கும்?

கலை......குறைந்தது 10 நாட்கள். அதாவது ஜுலை திங்கள் 30ம் நாள் முதல் ஆகஸ்ட் திங்கள் 8ம் நாள் வரை சிறப்பு நிகழ்ச்சிகள் நீடிக்கும். செல்வம் இது பற்றி உங்கள் கருத்து என்ன?

செல்வம்..... நிரப்புங்கள்

கிளீ..........செல்வம் நீங்கள் சொன்னது சரியானது. இந்த முறை 44வது ஆண்டு நிறைவுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் தரமானவை. ரசனையுடையவை என்று நம்புகின்றேன்.

கலை.......ஆமாம். நேயர்களே இந்த சிறப்பு நிகழ்ச்சிகளை கேட்ட பின் எங்களை போலவே உங்களுக்கும் மனநிறைவு ஏற்படும் என்று நம்புகின்றோம்.

செல்வம்.........நான் முன்கூட்டியே தமிழ் ஒலிபரப்பின் 44வது ஆண்டு நிறைவுக்காக நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றேன். நேயர்களின் சார்பில் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

கலை.........நன்றி தெரிவிப்பதை கேட்டு மகிழ்ச்சியடைகின்றோம். இங்கே தமிழ்ப் பிரிவின் பணியாளர்களின் சார்பில் உங்களுக்கும் நேயர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

கிளீ........ஆமாம். கடந்த 44 ஆண்டுகளில் தமிழ்ப் பிரிவின் பணியாளர்கள் தலைமுறை தலைமுறையாக உற்சாகத்துடன் அயராமல் பணி புரிந்து தமிழ் ஒலிப்பரப்பை இன்று 1 மணி நேரம் என்ற அளவில் வளர்த்துள்ளீர்கள். லட்சியத்தின் வேகமான வளர்ச்சியுடன் தமிழ்ப் பிரிவின் வேலையும் இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஆகவே இன்னொரு நிபுணர் எங்களுக்கு உதவும் வகையில் வருவார்.

கலை.......ஆமாம். சென்னையில் பணிபுரிகின்ற திரு மைக்கல் ஜுலை 26ம் நாள் நண்பகல் அதாவது நாளை பண்பகல் பெய்சிங்கிற்கு வருவார்.

செல்வம்.......புதிய நிபுணரின் பங்கு தமிழ் ஒலிபரப்பின் வளர்ச்சிக்கு துணை புரிய வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.

கலை........மிக்க நன்றி. நாம் அனைவரும் ஒன்றுபட்டு தமிழ் ஒலிபரப்பின் வளர்ச்சிக்காக நன்றாக ஒத்துழைப்போம்