• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-26 15:56:08    
மங்கோலிய இன நடையுடை பாவனைகளை உணர்ந்து கொள்ளுங்கள்

cri

உள்மங்கோலிய தன்னாட்சி பிரதேசம், சீனாவின் வடபகுதியில் அமைந்துள்ளது. இங்கே, பரந்துபட்ட பாலைவனம், முத்து மதிப்புக்குரிய ஏரிகள், ஏராளமான தொல் பொருட்கள், பண்டைய காட்சி மண்டலங்கள் ஆகியவை உள்ளன. மங்கோலிய இனம், ஹன் இனம், ஹுவை இனம், மஞ்சு இனம் உள்ளிட்ட 49 சிறுப்பாண்மை தேசிய இனங்கள் இதில் வசிக்கின்றன. இதில், மங்கோலிய இனத்தவரின் மக்கள் தொகை, 40 லட்சத்தைத் தாண்டியுள்ளது. பயணியர்கள், உள்மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்தில் மங்கோலிய இன நடையுடை பாவனையை உணர்ந்து கொள்ள வேண்டுமெனில் கண்டிப்பாத புல்வெளிக்குச் செல்ல வேண்டும். சிலின்கொரே, ஹுரென்பேர், கொல்சின் முதலிய பெரிய புல்வெளிகள் மிகவும் புகழ்பெற்றன. உள்மங்கோரியாவின் புல்வெளி குறித்து, பெய்ஜிங்கிலிருந்து வந்த பயணி வாங் யீ கூறியதாவது:

 
புல்வெளியில், இயற்கை சூழல், மேய்ப்பர்கள் உள்ளிட்ட பல விடயங்கள், என் மனதில் ஆழப்பதிந்துள்ளன என்றார் அவர்.
வாங் யீயின் மனதில், பெரிய புல்வெளியில் அழகான இயற்கைக் காட்சியும், மங்கோலிய இனத்தவரின் விருந்தோம்பல் மனப்பான்மையும், மிகவும் ஆழப்பதிந்துள்ளன. விருந்தினர்கள் மேய்ப்பர்களின் வீட்டில் நுழைந்தவுடன், வீட்டுத்தலைவி, மங்கோலிய இனத்தின் பழக்கவழக்கத்தின் படி, பால் கலந்த தேனீர், ஆட்டிறைச்சி ஆகியவற்றை உடனடியாக சமைத்து வழங்குகிறார். சாப்பிடும் போது, குடும்பத்தலைவர்கள், பால் மது நிறைந்த வெள்ளிப் பாத்திரத்தைக் கையில் கொண்டு, மங்கோலிய இனத்தவர் விருந்தளிக்கும் மிக உயர் கண்ணிய நடத்தையான மது வாழ்த்து பாடல் பாடி, தாம் தயாரித்த பால் மதுவை, விருந்தினருக்கு வழங்குகின்றனர்.
பரந்துப்பட்ட புல்வெளியில், வெள்ளை ஆட்டுக்கூட்டம், மஞ்சள் மாட்டுக்கூட்டம், தங்க ஒட்டகக்கூட்டம் ஆகியவற்றையும், வெண்ணிற மங்கோலிய கூடாரங்களையும் காணலாம். நகரத்தில் வசிப்பவர்களைப் பொறுத்தவரை, உள்மங்கோரியாவின் புல்வெளியில், மங்கோலிய இன நடையுடை பாவனையை உணர்ந்து கொள்வது, சிறப்பான அனுபவமாகும். உள்மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்தின் சுற்றுலா பணியகத்தின் துணை இயக்குநர் YUN DA PING கூறியதாவது:


பெய்ஜிங்கிலிருந்து ஹுகுஹாத் நகரத்துக்கு செல்வதற்கு, விமானம் மூலம், 45 நிமிட நேரம் தேவை. உயர்வேக நெடுஞ்சாலை மூலம், நான்கு அரை மணி நேரம் தேவை. தொடர்வண்டி மூலம், 11 மணி நேரம் போதும். ஹுகுஹாத் நகரத்திலிருந்து புல்வெளிக்குச் செல்லும் போக்குவரத்து, மிகவும் வசதியானது என்றார் அவர்.
உள்மங்கோரியாவின் சிலின்கோரேவிலுள்ள குங்பாவ்ராக் புல்வெளி, பெய்ஜிங்கிலிருந்து சுமார் 3 மணி நேர தொலைவு ஆகும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், அழகான குங்பாவ்ராக் புல்வெளி, ச்சிங் வம்ச அரசர்களின் சிறப்பு குதிரைப் பண்ணையாக விளங்கியது. அரசர் குடும்பத்துக்கு குதிரைகளையும், மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியையும், இப்புல்வெளி சிறப்பாக வழங்கியது. கடந்த சில ஆண்டுகளில், உள்மங்கோரியாவின் புல்வெளியில் மேய்ப்பர் குடும்பச் சுற்றுலா, படிப்படியாக வளர்ச்சியடைந்தது. பயணியர்கள்,

மேய்ப்பர் குடும்பத்தினருடன் தங்கியிருந்து, மேய்ப்பர் வாழ்க்கையை உணர்ந்து கொள்ளலாம். மேய்ப்பர் ச்சிலின்தொல்ஜி கடந்த சில ஆண்டுகளுக்கு முன், குங்பாவ்ராக் புல்வெளியில் 5 மங்கோலிய கூடாரங்களை கட்டியமைத்து, பயணிகளை வரவேற்றார். ஒவ்வொரு கோடைக்காலத்திலும், குங்பாவ்ராக் புல்வெளியில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள வரும் விருந்தினர்கள் மிகவும் அதிகம் என்று, அவர் கூறினார்.