• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-31 15:13:02    
ஒரு வகை ஐஸ் கிரீம் தயாரிப்பு

cri

வாணி -- க்ளீட்டஸ், பொதுவாகக் கூறின், ஜுன், ஜுலை, ஆக்ஸ்ட், செப்டெம்பர் ஆகியவை பெய்ஜிங்கின் கோடைக்காலமாகும். இதற்கிடையில் சாதாரண நாளில் வெப்பநிலை 18 திகிரி செல்சியஸ் முதல் 35 திகிரி செல்சியஸ் வரை இருக்கும். குறிப்பிட்ட நாட்களில் வெப்பநிலை 40 திகிரி செல்சியஸை எட்டக் கூடும். சென்னையில் கோடைக்காலம் எப்படி?

க்ளீட்டஸ் -- சென்னையில், ...

வாணி -- கோடைக்காலத்தில் ஐஸ் கிரீம் பெரிதும் வரவேற்கப்படும் உணவு வகையாகும். இன்று வீட்டில் ஒரு வகை பழம் ஐஸ் கிரீம் தயாரிப்பது பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.

க்ளீட்டஸ் -- ஆமாம், நேயர்களே,தங்களின் விருப்பத்தின் படி இதில் ஒரு வகை பழம் சேர்க்கலாம்.

வாணி -- தேவையான பொருட்களை முதலில் எடுத்து கூறுகின்றேன்.
kiwi பழம் 4
இதற்கு பதிலாக நீங்கள், பப்பாளிப் பழம் அல்லது மாம்பழத்தைப் பயன்படுத்தலாம்.
தயிர் 120 மில்லி லிட்டர்
பச்சை கரீம் 240 மில்லி லிட்டர்

வாணி -- முதலில் நீங்கள் kiwi பழங்களின் தோலை நீக்கி, சிறிய பொடிகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுத்து, பழப் பொடிகளை அரவை இயந்திரத்தில் போடுங்கள்.

க்ளீட்டஸ் -- எவ்வளவு நேரம் அரைக்க வேண்டும்?

வாணி -- 30 வினாடிகள் போதும். பிறகு, பழச் சாற்றிலிருந்து பழச்சக்கைகளை நீக்கவும். பிறகு, பழ ஜுஸ், தயிர், பச்சை கரீம் ஆகியவற்றைச் சேர்ந்து கலக்க வேண்டும். இவற்றை ஒன்றைக கலவை இயந்திரத்தில் ஊற்றி நன்றாக கலந்தால் நல்லது.

க்ளீட்டஸ் -- கலக்கப்பட்ட ஜுஸ் குளிர் சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். 2 மணிக்கு ஒரு முறை இதனை வெளியே எடுத்து கலக்க வேண்டும்.

வாணி -- ஆமாம். சுமார் 4 மணி நேரத்திற்குப் பின், நமது பழ ஐஸ் கிரீம் தயார்.

க்ளீட்டஸ் -- எப்படி எளிது தானே. நேயர்களே, நீங்கள் வீட்டில் பப்பாளிப்பழ ஐஸ் க்ரீம், மாம்பழ ஐஸ் க்ரீம் முதலியவற்றை இந்தச் செய்முறையை பின்பற்றி தயாரிக்கலாம்.

வாணி -- கோடைக்காலத்தில் வீட்டில் அமர்ந்து சொந்தமாக தயாரித்த ஐஸ் க்ரீம் ருசிப்பது இனிமையானது. அல்லவா? 

க்ளீட்டஸ் -- சரி, வாணி, அடுத்த வாரம் எந்த வகை சீன உணவு பற்றி நேயர்களுக்கு அறிமுகப்படுத்துவோம்?

வாணி – அடுத்த வாரம், உருளைக்கிழங்கு முக்கியமாகக் கொண்ட ஒரு வறுவலை அறிமுகப்படுத்துவோம். ஆர்வம் கொண்ட நேயர்கள், 2 உருளைக்கிழங்கு, கறுப்பு மிளகு தூள், வெங்காயம் முதலியவற்றை முன் கூட்டியே தயாராக வைக்கலாம். இது ஒரு வகை சைவ உணவாகும்.

க்ளீட்டஸ் – அப்படியா, சைவ உணவு பிடிக்கும் நேயர்கள் அடுத்த வாரம் எங்களுடன் சேர்ந்து இந்த வறுவலை தயாரிக்குமாறு அழைக்கின்றோம்.