• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-27 14:57:23    
தேசிய கூட்ட மையம்

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் பூங்காவில், 12 ஹெக்டேர் நிலப்பரப்பில் 5 லட்சம் சதுரமீட்டருக்கு மேற்பட்ட பரப்பில் கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. 2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான வாள் போட்டியின் விளையாட்டரங்கான தேசிய கூட்ட மையமே, இக்கட்டிடம்.

தேசிய கூட்ட மையம், ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான தற்காலிக விளையாட்டரங்கு ஆகும். முழு கட்டிடம், இரண்டு ஹோட்டல் மற்றும் இரண்டு அலுவல் கட்டிடங்களை உள்ளடக்கியது. மொத்த கட்டிடப்பரப்பளவு 5 லட்சத்து 34 ஆயிரம் சதுரமீட்டராகும். இது ஒலிம்பிக் கட்டிடத்திட்டப்பணிகளில் தனி கட்டிடப்பரப்பளவில் மிகப் பெரியது. இக்கூட்ட மையத்தின் கட்டுமானம், 2005ம் ஆண்டு ஏப்ரல் துவங்கி, இவ்வாண்டு பிற்பகுதியில் முடிவடையவுள்ளது.

2008ம் ஆண்டு, தேசிய கூட்ட மையத்தின் முக்கிய பகுதி, சில பகுதிகளாக பிரிக்கப்படும். தென் பகுதி, வாள் போட்டி விளையாட்டரங்காக, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் வாள் போட்டி மற்றும் நவீன பென்டத்லான் எனும் 5 வகை விளையாட்டுகள் இடம் பெறும் போட்டிக்குப் பயன்படுத்தப்படும். வடக்கு பகுதி, சர்வதேச ஒலிபரப்பு மையமாக, உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் செய்தியாளர்களுக்கு சேவையளிக்கும்.

வாள் போட்டிக்கான விளையாட்டரங்கின் நிலப்பரப்பு 56 ஆயிரம் சதுரமீட்டராகும். இவ்விளையாட்டரங்கில் 6000 இருக்கைகள் உண்டு. சர்வதேச ஒலிபரப்பு மையத்தின் நிலப்பரப்பு 47 ஆயிரம் சதுரமீட்டராகும்.