• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-31 15:42:50    
திறமைசாலிகளை உட்புகுத்தும் புதிய நடவடிக்கை

cri

கடந்த ஆண்டு அக்டோபர் திங்களின் இறுதியில், பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்தி ஊடகங்களின் மூலம், திறமைசாலிகளைச் சேர்க்கும் அறிக்கை வெளியிடப்பட்டது என்று Nan kai பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு Rao zi he கூறினார். இது பரந்தளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது. 2 திங்கள் கால விண்ணப்பம் காலத்தில், 14 நாடுகளிலிருந்து 140க்கு அதிகமான விண்ணப்பங்களைப் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. விண்ணப்பம் செய்தவர்களில் பெரும்பாலோர், ஹார்வர்ட், ஆக்ஸ்பெர்ட், யேல் உள்ளிட்ட உலகில் மிகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர் அல்லது கற்பிக்கும் அனுப்பவம் கொண்டவர்களாவர். சராசரி வயது 45 ஆகும். திரு Rao zi he கூறியதாவது

 
விண்ணப்பம் செய்தவர்களில், தலைசிறந்த கல்வியியல் பின்னணி, கல்வியியல் வெற்றி அல்லது நிர்வாக அனுபவம் கொண்டவர்கள் அதிகம். இத்தகைய தேர்வு முறையைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவோம். தலைசிறந்த திறமைசாலிகளுக்கும் 35 வயதுக்குப்பட்ட ஆற்றல் மிக்க இளைஞர்களுக்கும் முக்கியமாக வாய்ப்புகளை வழங்குவோம் என்றார் அவர்.
கழகத் தலைவருக்கான 73விண்ணப்பங்களில் 34 வெளிநாடுகளிலிருந்து வந்தன. திரு Xiang Rong அவர்களில் ஒருவராவார். அவர் கூறியதாவது
முன்முயற்சியுடன் பணியை செவ்வனே செய்வேன். மருத்துவ துறையிலான தலைமை பிரமுகர்களை வளர்ப்பது எமது நோக்கமாகும். அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைப் போல, அதிக மாணவர்களை சேர்க்கப் போவதில்லை. ஆனால், பட்டம் பெற்றவர்களில் அதிகமானவர்கள் மருத்துவத்துறையில் அல்லது உயிரின துறையில் தலைமை பிரமுகர்களாவர். இந்த முறையை செயல்படுத்த விரும்புகின்றேன். வெளிநாட்டில் கற்றுக்கொண்டதை Nan kai பல்கலைக்கழகத்தில் பயன்படுத்தி, சீனாவின் மருத்துவயியல் வளர்ச்சிக்கு பங்கு ஆற்ற வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார் அவர்.


உயிர் அறிவியல் கழகத்தின் தலைவரும் யேல் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியருமான திரு yin zhi nan கூறியதாவது
வரும் 5 ஆண்டுகளில் தியேன் சின் மாநகரின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றோம். உயிரி மருந்து தயாரிப்பு தொழிலின் தளம் தியேன் சின் மாநகரில் அமைந்துள்ளது. இத்தகைய வாய்ப்புகள் எங்களுக்கு மிக முக்கியமானது என்றார் அவர்.
ஆஸ்திரியாவின் புகழ்பெற்ற வியன்னா பல்கலைக்கழகத்தின் ஆய்வு இயற்பியல் ஆய்வகத்தின் பேராசிரியர் Romano A. Rupp, Nan kai பல்கலைக்கழகம் நியமித்த முதலாவது வெளிநாட்டு கழகத் தலைவராவார். தற்போது அவர் Nan kai பல்கலைக்கழகத்தின் தைதா பயன்பாட்டு இயற்பியல் கல்லூரியின் தலைவராகப் பணி புரிகின்றார். தியேன் சின்னில் மேலும் சிறப்பாக வெற்றி பெற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.


அவர்களின் பார்வையில், வேகமாக வளர்ந்து வரும் தியேன் சின் மாநகரம் திறமைசாலிகளுக்கு சீரான வளர்ச்சி சூழ்நிலையை வழங்கலாம். Nan kai பல்கலைக்கழகத்தில் அவர்கள் சீன உயர் நிலை கல்வி துறையின் வளர்ச்சியை உணர்ந்துள்ளனர். இது அவர்களுக்கும் வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்.