• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-31 15:54:28    
தேயிலைக் கடவுள் லுயு

cri

சீனத்துத் தேயிலை பற்றிப் பேசும் போது லு யு (Luyu) என்ற பெயரை மறந்து விட முடியாது. ஏனென்றால், லு யு தேனீர்க் கடவுள் என்று போற்றப்படுகிறான். Cha Jing (ச்சா சின்) என்ற தலைப்பில் தேயிலை பற்றி முழுமையாக ஆராய்ச்சி செய்து விரிவாக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். லு யு கதையும் சுவையானது.

 
தாங் வம்ச காலத்தில், ஹுபெய் மாகாணத்தில் தியன்மன் நகரின் தலைவாசலுக்கு அருகே ஒரு கோவில் இருந்தது. ஒரு முறை ஜி கோங் (Ji Gong) என்ற துறவி அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது, எங்கோ தொலைவில் ஒரு குழந்தை அழும்குரல் கேட்டது. அதைத் தேடி எடுத்து கோயிலுக்குக் கொண்டு வந்தார். அந்த ஆண் குழந்தைக்கு லு யு என்று பெயரிட்டார். அவன் பெரியவனாக வளர்ந்த போது துறவிக்குத் தேனீர் தயாரித்துக் கொடுக்கும் கடமையைச் செய்தான், காலப்போக்கில், தேனீர் தயாரிப்பதில் வல்லவனான். புத்தத் துறவியாவதில் விருப்பமின்றி, தேயிலை பற்றிய ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டான். நாடெங்கும் முப்பதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள புகழ் பெற்ற மலைகளில் சுற்றித் திரிந்து, அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் தேயிலை வகைகளையும்;மலை ஊற்று நீரையும் சேகரித்தான்.


ஒரு முறை ஹுசோ (Hu Zhou) நகர ஆட்சித் தலைவருடன் அவன் தேனீர் அருந்திக் கொண்டிருந்த போது, "எந்த வகையான நீரில் மிகச்சிறப்பான தேனீர் தயாரிக்கலாம்?" என்று அவர் வினவினார். "மலை ஊற்றுத் தண்ணீர் தான் தேனீருக்கு மிகச் சிறந்தது" என்றான். "எந்த மலை ஊற்றில் மிகச்சிறப்பான தண்ணீர் கிடைக்கிறது?" என்று கேட்ட போது யாங்ச்சி ஆற்றை ஒட்டிய நான்லிங் மலையின் ஊற்றில் கிடைக்கும் தண்ணீர் மிகச்சிறந்தது என்றான். உடனே தனது ஏவலரை அழைத்த ஆட்சித் தலைவர் நான்லிங் மலை ஊற்று நீரைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டார். துரதிர்ஷிடவசமாக, வேலைக்காரன் வரும் வழியில் தடுக்கி விழுந்து, வாளியில் இருந்து பாதி நீரைச் சிந்தி விட்டான். சிந்திய ஊற்று நீருக்குப் பதிலாக வேறு ஆற்று நீரை ஊற்றி வாளியை நிரப்பிக் கொண்டுவந்தான். வேலைக்காரன் கொண்டு வந்த அந்த நீரைப்பார்த்ததுமே, வாளியில் உள்ள நீர் முழுவதுமே நான்லிங் ஊற்று நீர் அல்ல, அருகிலுள்ள ஆற்று நீர் என்று லு யு கூறிவிட்டார். பிறகு வாளியில் மேல்பகுதியில் இருந்த பாதி நீரைக் கொட்டி விட்டு, "இப்போது மீதியுள்ள நீர் நான்லிங் ஊற்று நீர் போல இருக்கிறது," என்றார். கூடியிருந்தோர் அனைவரும் திகைத்துப்போய், லுயுவின் ஆற்றலைக் கண்டு வியந்தனர். "நிச்சயம் உங்களுக்குத் தெய்வீகச் சக்தி இருக்கிறது" என்று கூறி பாராட்டினர்.


லுயு பழைய ஏடுகளை எல்லாம் அலசி ஆராய்ந்து, தான் தேடிக்கண்டு பிடித்த தகவல்களையும் வைத்து 'ச்சா ஜிங்' என்ற தலைப்பில் விரிவான புத்தகம் எழுதினார். உலக வரலாற்றிலேயே தேயிலை பற்றிய முதல் நூல் அது என்று பாராட்டப்படுகிறது. மூன்று தொகுதிகளாக உள்ள இந்தப் புத்தகத்தில் தேயிலை மற்றும் தேனீருடன் தொடர்புடைய ஏராளமான தகவல்கள் உள்ளன. அதனாலேயே லுயுவை மக்கள் தேனீர்க் கடவுள் என்று போற்றி, சிலையெடுத்து வழிபடத் தொடங்கிவிட்டனர்.