• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-31 16:00:28    
தண்ணீர் மூல வள பாதுகாப்பு

cri

க்ளீட்டஸ்: அறிவியல் உலகம் நிகழ்ச்சி பற்றி சேந்தமங்கலம் எஸ். ராஜநரசிம்மன் எழுதிய கடிதம். தூங்காதே தம்பி தூங்காதே என்ற பாடலை சொல்லி நிகழ்ச்சியை ஆரம்பிப்பது வழக்கம். ஆனால் புதிதாக தூங்கு தம்பி தூங்கு என்று அரம்பித்து தூக்கத்தின் சிறப்பை கூறினீர்கள். மதிய வேளை குட்டித்தூக்கம் உடலுக்கு நல்லது, மாஅரடைப்பு வருவதை தவிர்க்கும், மன உளைச்சலை கட்டுப்படுத்துமென்று அறிந்து கொண்டோம் என்று எழுதியுள்ளார்.


கலை: அடுத்து பாண்டிச்சேரி பெரியகாலாப்பட்டு நேயர் பி. சந்திரசேகரன் எழுதிய கடிதம். சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் முட்டையுடன் மீன் இறைச்சி கலந்த உணவு வகையை பற்றி அறியத் தந்தீர்கள். புதிய புதிய சீன உணவு வகைகள் நிகழ்ச்சியை அலங்கரித்து வருகின்றன. இது மகிழ்ச்சியானது. முட்டையில் மீன் இறைச்சி கலந்த உணவை ஆவியில் வேகவைத்து செய்யும் முறையை சிறப்பாக கற்றுக்கொடுத்தீர்கள். உடலில் அதிகம் கொழுப்புச் சத்து சேராத இது போன்ற உணவு வகைகள் மிகவும் சிறப்பானவை என்று குறிப்பிட்டுள்ளார்.
க்ளீட்டஸ்: அடுத்து உத்திரக்குடு கலைவாணன் ராதிகா மலர்ச்சோலை நிகழ்ச்சி குறித்து எழுதிய கடிதம். மலர்ச்சோலை நிகழ்ச்சியில் சுந்தரன் அவர்கள் வழங்கிய செய்திகள் அனைத்தும் வியப்பாக இருந்தததோடு புதுமையான ஒரு செய்தியும் தெரிந்துகொள்ள முடிந்தது. அதாவது உலகில் திருமண விழா, காதணி விழா, ஊர் திருவிழா இப்படி பல்வேறு விழாக்கள் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் நெருப்பு விழா என்பதை புதிதாக கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்தோம். மரவீடு பற்ரிய செய்தியும் அற்புதமாய் இருந்தது, பாராட்டுக்கள் என்று எழுதியுள்ளார்.
கலை: அதே நிகழ்ச்சி பற்ரி சென்னை பி. குமரேசன் எழுதிய கடிதம். மலர்சோலையில் உலகில் மிக உயரமான மரவீடு பற்றி கேட்டேன். 45.9 மீட்டர் உயரத்தில் இந்த மரவீடு அமைந்திருப்பதை அறிந்துகொண்டேன். மேலும் மிகவும் வயதானாவர் பற்ரிய தகவலையும் கேட்டேன். வியப்பான தகவல்களை அளித்த சுந்தரன் அவர்கலுக்கு நன்றிகள் என்று எழுதியுள்ளார்.


க்ளீட்டஸ்: அடுத்து சீன இசை நிகழ்ச்சி குறித்து துரையூர் த. குறிஞ்சிக்குமரன் எழுதிய கடிதம். சீனாவில் 56 தேசிய இனங்கள் உள்ளன என்று சீன இசை நிகழ்ச்சியின் மூலம் அறிந்தேன். நிகழ்ச்சியில் முதலில் முன்னோர்களை நினைத்து பாடிய பாடல் மிக அருமை. சீனர்கள் முனோர்களுக்கு தரும் மரியாதை இதிலிருந்து தெரிகிறது. அற்றின் எதிர்பக்கத்தில் உள்ள பசுமையை ரசித்து பாடிய பாடல் சீன மக்கள் இயற்கையை நேசிப்பதை காட்டியது. வேலை செய்யும் இடத்தில் பாடும் அடுத்த பாடல், ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது என்ற தமிழ்ப்பாடலை நினைவூட்டியது என்று எழுதியுள்ளார்.
கலை: அடுத்து சீனக் கடல் பொருளாதாரத்தின் வளர்ச்சி பற்றிய செய்தித் தொகுப்பு குறித்து கவுந்தப்பாடி பி. குழந்தைவேல் எழுதிய கடிதம். சீனக் கடல் பொருளாதாரம் 10 விழுக்காடு அதிகரித்துள்ளமை நன்று. உலக அளவில் பார்க்கையில் சீன நாட்டின் கடல் பொருளாதாரத்தின் வளர்ச்சி நடுநிலையில் உள்ளதை உணர முடிந்தது. வருகின்ற ஆண்டுகளில் உலக அளவில் சீனக் கடல் பொருளாதாரம் முன்னணியில் வளர இன்றே திட்டமிட்டு சரியான முறையில் செயல்படுத்தவேண்டும் என்று எழுதியுள்ளார்.
க்ளீட்டஸ்: அடுத்து சீனப் பண்பாடு நிகழ்ச்சி பற்றி சேந்தமங்கலம் கே. சுந்தரம் எழுதிய கடிதம். வசந்த விழாவின் போது சீனர்கள் சில கவிதை வரிகளை எழுதி தங்கள் கதவில் ஒட்டி வைப்பார்கள் என்று கலையரசி அவர்கள் பண்பாடு நிகழ்ச்சியில் கூறக்கேட்டோம். கி. பி. 640 ஆண்டு வாக்கில் இந்த் அகவிதை எழுதி ஒட்டும் பழக்கம் இருந்ததாம். மின் வம்ச காலத்தில் இந்த பழக்கம் மேலும் வலுப்பெற்று ஒவ்வொருவரும் கட்டாயமாக செய்யவேண்டும் என திட்டம் கொண்டுவரப்பட்டது. இப்படியெல்லாம் சீன மரபுக்கவிதைகள் மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்ததை பண்பாடு நிகழ்ச்சியின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது என்று எழுதியுள்ளார்.
கலை: அழகான பாராட்டுக் கவிதை. நண்பர் தாண்டவனின் கவிதையில் தமிழ் தாண்டவமாடியுள்ளது, பாராட்டுக்கள் அவருக்கு.


அடுத்து நீலகிரி கீழ்குந்தா கே. கே. போஜன் எழுதிய கடிதம். சீன கிராமப்புற மக்களின் குடிநீர் பிரச்சனை பற்றிய செய்தித் தொகுப்பு குறித்து அவரது கருத்து இதோ. புவியில் வாழும் எல்லா உயிர்களுக்கும் இன்றியமையாத நீரை பெறுவதற்ஜ்ய் ஒரே ஆதாரம், பெய்யும் மழைதான். அந்த் அமழையும் காலத்திலும் இடத்திலும் மாறி வருவதால், மழையினால் பெருகும் நீர்வளமும் வேறுபட்டே காணப்படும். நீரின்றி அமையாது உலகு என்று 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இன்றைய தண்ணீர் பற்றாக்குறையை அறிந்துதான் வள்ளுவர் பெருமான் நீரின் மதிப்பை எழுதியுள்ளார். ஆனால் இன்று நீரின் தேவை அதிகரித்து, நீரின் வளம் குறைந்துவிட்டது. மார்ச் 22ம் நாள் உலக நீர்வள நாள் ஆனதால் சீன கிராமங்களில் தண்னீர் நிமை எவ்வாறு உள்ளது என்று கூறியதைக் கேட்டோம் என்று எழுதியுள்ளார். மட்டுமல்லாது உலக நீர் வளம் மற்றும் பயன்பாடு பற்றிய விபரங்களையும் பட்டியலிட்டுள்ளார்.