ஆண்டகளை தோற்கடித்த பெண்கள் ஆண்களை
எந்த விஷயத்தில் தோற்கடிதக்க முடிகிறதோ இல்லையோ நீண்ட காலம் வாழ்வதில் அவர்கள் ஆண்களைத் தோற்கடித்து உள்ளனர். ஜப்பானிய பெண்கள் ஆண்களை விட நீண்ட காலம் உயிருடன் வாழ்கின்றார்கள். ஜப்பானிய ஆண்களின் சராசரி ஆயுள் காலம் எழுபத்தெட்டு ஆண்டுகள். பெண்களின் ஆயுள் காலம் என்பத்தைந்து ஆண்டுகள். இதனால் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஐந்தில் ஒரு ஜப்பானியர் அறுப்பதைந்து வயது மற்றும் அதற்கும் அதிகமானவராக இருக்கின்றார். இது அடுத்த 10 ஆண்டுகளில் நான்கில் ஒருவர் வயதானவராக இருப்பார். ஜப்பானில் இப்போது வயதானவர்களின் எண்ணிக்கை பன்னிரண்டு கோடியே எழுப்பது லட்சம் ஆகும். ஈராயிரத்து ஏழாம் ஆண்டு முதல் மக்கள் தொகை சரியத் தொடங்கும். ஜப்பானிய ஆண்களும், பெண்களஉம் திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழவே விரும்புகின்றார்கள். திருமணம் செய்து கொண்டாலும், குழந்தை பெற்றுக்கொள்ள பெண்கள் தயங்குகின்றார்கள். இதனால் குழந்தை பிறப்பு விகிதம் அங்கு குறைந்து வருகின்றது.
குண்டுப் பெண் என்று மாணவியை கேலி செய்த போராசிரியர்க்கு அபராதம்
பிரேசில் நாட்டில் ரியோடி ஜானெய்ரோ நகரிலுள்ள எஸ்டாசியோ டி.சா.பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் டயஸ் அகியாசியன் வகுப்பு எடுத்தார். அப்போது குண்டான ஒரு மாணவி அனுமதி கேட்டு டாய்லெட் சென்றார். அப்படிப் போவதற்கு முன்பு பேராசிரியர் பாடம் நடத்துவதை ஒலிப்பதிவு செய்வதற்காக டேப் ரேக்கார்டரை ஓட விட்டுச் சென்றார். டாய்பெட் போய் விட்டு வந்ததும், பேப்ரெக்கார்டரை ஓட விட்டு கேட்டார். அப்போது பேராசிரியர் அவளை செம குண்டு என்றும் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளாவிட்டால் மேலும் குண்டாகிவிடுவாள் என்றும் கேலி செய்து இருப்பது தெரிய வந்தது. இதனால் கோபம் கொண்ட அவள் பேராசிரியல் மீது வழக்குத் தொடர்ந்தாள் இந்த வழக்கில் அவளுக்கு வெற்றி கிடைத்தது. கோர்ட்டு அவருக்கு நாற்பதைந்து ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.
வங்கிகளில் இரு கோடி ரூபாய் கொள்ளை அடித்த வக்கீல்
ஜெர்மனி நாட்டில் மியூனிஸ்டர் நகரில் புகழ்பெற்ற வக்கீல் ஒருவர் போலீசில் சரண அடைந்தார். தன் வாடிக்கையாளர்கள் வங்கிகளில் டெபாசிட் செய்து இருந்த இரண்டு கோடி ரூபாயை கொள்ளைபடித்ததாக ஒப்புக் கொண்டார். 1986ம் ஆண்டு முதல் செய்த கிரிமினல் வேலைகளை எல்லாம் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் ஏன் சரண அடைந்தார் என்பது போலீசாருக்குப் புரியாத புதிராக உள்ளது.
|