• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-02 11:52:40    
சீனாவில், புத்தாக்கத்திறன் பற்றிய குறியீட்டு எண்கள்

cri

சீனாவின் 31 மாநிலங்கள்、தன்னாட்சிப் பிரதேசங்கள் மற்றும் மாநகரங்களில், பெய்ஜிங்、சாங்காய் ஆகிய 2 மாநகரங்களின் புக்தாக்கக் திறன் சிறந்து விளங்குகின்றது.

புத்தாக்கத் திறன் தொடர்பான குறியீட்டு எண்களில் இவ்விரு நகரங்களும் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன்.

《சீனாவின் 31 மாநிலங்கள். தன்னாட்சிப் பிரதேசங்கள் மற்றும் மாநகரங்களின் புத்தாக்கக் குறியீட்டு எண்கள் தொடர்பான ஆய்வு அறிக்கை》, இத்தகவலை வெளியிட்டுள்ளது.

புத்தாக்க மூலவளம்、தொழில்நுட்ப நடைமுறையாக்கம்、உயர் அறிவியல் தொழில்நுட்ப பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல் ஆகியவற்நில் பெய்ஜிங், மிகவும் மேம்பட்டு விளங்குகிறது. இதில், மிகுதியான முதற்தரப் பல்கலைக்கழகங்களும் ஆய்வகங்களும் முக்கிய பங்கு ஆற்றியுள்ளன.

மதிப்பு நனவாக்கம்、தொடர்ச்சியான வளர்ச்சி、இணையதள ஆற்றல் ஆகியவற்றில் சாங்காய் சிறந்து விளங்குகிறது.

புத்தாக்கத் திறன்களின் படி, சீனாவின் 31 மாநிலங்கள்、தன்னாட்சிப் பிரதேசங்கள் மற்றும் மாநகரங்கள், 3 அணிகளாகப் பிரிக்கப்படலாம்.

பெய்ஜங்、சாங்காய்、ஜாங்சு、குவாங்துங் ஆகியன முதல் அணியில் இடம் பெறுகின்றன. சாந்துங்、செஜியாங்、லியோனிங்、ஹுபெய்、ஷான் சி、சிச்சுவான்、ஃபுஜியேன் ஆகிய 7 மாநிலங்களும் தியன்சின் மாநகரமும் 2 ஆம் அணியில் அடங்கும். ஏனையவை, 3வது அணியைச் சோ்ந்தவை. அவை, வலுவற்ற பிரதேசங்களாகும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

சீனாவில் ஹாரிபாட்டர்

ஹாரிபாட்டர் என்னும் கதாபாத்திரத்தை நாயகனாகக் கொண்டு ஜே•கே ரெளலிங் அம்மையார் எழுதிவரும் புதினங்களுக்கு உலகம் முழுதும் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சீனாவும் இதற்கு விதிவிலக்கல்ல. சூலை திங்கள் 21ஆம் நாள், பெய்ஜிங்、சாங்காய் உள்ளிட்ட நகரங்களில் ஹாரிபாட்டர் 7 என்ற இறுதி புதின நூல் வெளியிடப்படுவதற்கு முந்தைய நாள் நள்ளிரவே, புதினத்தை வாங்குவோர், கடைகளின் எதிரே காத்திருக்கத் துவங்கினர்"ஹாரிபாட்டரும் உயிர் பலிகொடுக்கும் புனிதத்தொண்டர்களும்" என்ற தலைப்பிலான இப்புதினம்,சூலை 21 ஆம் நாள்முதல் உலகம் முழுவதிலும் விற்பனைக்கு வந்துள்ளது. அதேநாள், சீனாவிலும் காலை 7மணிக்கு விற்பனை துவங்கியது. பெய்ஜிங்கிலுள்ள வாங்ஃபுஜிங் புத்தகக் கடைக்கு வெளியே காலை 7 மணிக்கு முன்னதாகவே சுமார் 300 பேர் குழுமியிருந்தனர். விற்பனை துவங்கிய 40 நிமிடங்களிலேயே 200 புதின நூல்கள் விற்கப்பட்டன. இதற்கு முன்னர், உலகின் இதர பகுதிகளில் ஹாரிபாட்டர் 7 விற்கப் படும் அதே நாளில், சீனாவில் கிடைக்காது எனவும், தற்போது உலக வாசகர்கள் படிக்கும் அதே நாளில் தாமும் ஹாரிபாட்டர் புதினத்தைப் படிக்க முடியும் எனவும் 19 வயதான 2HU SHENGTAO என்பவர் மகிழ்ச்சியுடன் கூறினார். சீனாவில் விற்பனை செய்யப் படும் வகையில், சூலை 15 ஆம் நாள் 38 ஆயிரம் புத்தகங்கள், பெய்ஜிங், சாங்காய் மற்றும் இதர நகரங்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ரௌலிங் அம்மையார் எழுதிய இப்புதின நூல், விற்பனையில் ஒரு புதிய சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்நூலின் சீன மொழிப் புதிப்பு, எதிர்வரும் அக்டோபர் திங்கள் 28 ஆம் நாள் வெளியிடப் படும் என்று தெரிய வருகிறது.

இதற்கிடையே, ஹாரிபாட்டரின் உருவத்துடன் கூடிய அஞ்சல் தலை, சூலை திங்கள் 15 ஆம் நாள் முதல், பிரிட்டனில் வெளியிடப்பட்டுள்ளது. பிரேசில்、பெல்ஜியம் உள்ளிட்ட சில நாடுகள் இந்த அஞ்சல் தலைகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன.

உலகின் மிக உயரமான கட்டடம்

ஐக்கிய அரபு எமிரகத்தின் துபாய் நகரில், உலகின் மிக உயரமான கட்டடம் கட்டியமைக்கப் பட்டு வருகின்றது. சூலை 20 ஆம் நாள் வரை, அதன் உயரம் 512 மீட்டரை எட்டியுள்ளது. இதற்கு துபாய் கோபுரம் என்று பெயர்.

முந்தைய சாதனையான சீன தைவான் மாநிலத்தைச் சேர்ந்த தைபெய் நகர 101 கட்டடத்தின் உயரம், 508 மீட்டராகும். ஆகவே, "துபாய் கோபுரம்", உலகின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. 2008ஆம் ஆண்டு இறுதிக்குள் கட்டிமுடிக்கப் படவுள்ள இக்கட்டடத்தின் உயரம் 700 மீட்டரைத் தாண்டும்;இதற்கு 160 க்கு அதிகமான மாடி அடுக்குகள் இருக்கும் என்று கட்டுமானப பணிக்குப பொறு்ப்பான எமார் நிறுவனத்தின் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

"துபாய் கோபுரத்தை" கட்டியமைக்க, 100 கோடி அமெரிக்க டாலர் தொனக செலவிடப படும் என்று தெரிய வருகிறது.