• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-03 21:28:46    
நில நடுக்க மானி

cri
கி.பி.138ம் ஆண்டு மார்ச் முதல் நாள், சீனாவால் முதன்முதலாக நில நடுக்கத்தின் திசையை சரியாக அளவீடு செய்ய முடிந்தது. அவ்வாண்டு மார்ச் முதல் நாள், இன்றைய கான் சு மாநிலத்தைச் சேர்ந்த லான் சோ நகருக்கு வடமேற்கில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம், காற்று அளவீட்டு மானியையும் நில நடுக்க மானியையும் கொண்டு அளவீடு செய்யப்பட்டது.

மனித குல வரலாற்றில், சரியாகவும் உரிய காலத்திலும் நில நடுக்கம் அளவீடு செய்யப்பட்டது. இதுவே முதன்முறையாகும். இவ்விரண்டு மானிகள் சீனாவின் கிழக்கு ஹான் வம்சத்து சுவன் தி அரசர் காலத்து அதிகாரி ZHANG HENG ஆல் ஆராய்ந்து தயாரிக்கப்பட்டவையாகும். இவற்றில் காற்று அளவீட்டு மானி, காற்றை அளவீடு செய்வதற்கானது.

நில நடுக்க மானியானது, வெண்கலத்தால் ஒரு வகை மது பாத்திர வடிவத்தில் வார்க்கப்பட்டது. அதன் உச்சியில் அமைந்த வட்டமான மூடியின் சுற்றுப்புறங்களிலும் தலை கீழாகவும் வால் மேலாகவும் வடிவமைக்கப்பட்ட 8 டிராகன் தலைகள் காணப்படுகின்றன. நடுவில் மேலே தடிப்பாகவும் கீழ் மெல்லியமாகவும் காணப்படும் தூண் ஒன்றும் உண்டு. அவை, இயந்திரத்தால் இணைக்கப்படுகின்றன. கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, வடக்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு ஆகிய எட்டுத் திசைகளையும் நோக்கி, இந்த எட்டு திராகன்கள் அமைந்துள்ளன. அவ்வற்றின் வாய்கள் செயல்பட கூடியவை. வாய் ஒவ்வொன்றிலும் ஒரு வெண்கல பந்து உள்ளது. அவற்றின் வாய்களில் எட்டு வெண்கல தேரைகள் தலை நிமிர்ந்து தரையில் உடர்காந்துள்ளன. எங்கு நில நடுக்கம் ஏற்படுமோ, அங்கு அதாவது அந்த திசையை நோக்கும் டிராகன் வாயில் திறந்து அதில் உள்ள வெண்கல பந்து தேரை மீது வீழும். இதன் மூலம் நில நடுக்கம் ஏற்படும் திசை தெரிகிறது. சீனா தயாரித்து நில நடுக்க மானி, ஐரோப்பியர் தயாரித்த மானியை விட, 1700 ஆண்டுகள் முன்னதாக உள்ளது.