அண்மையில் எமது செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் தாம் வாழ்நாள் முழுதும் அழகை விரும்பி, அழகை உருவாக்கி, பரவச் செய்ய விரும்புவதாக சேங் மீன் மீன் கூறினார்.
சீனாவில், நல்ல அலங்காரப் பொருட்களில் சேங் மீன் மீன் என்ற பெயரிலான அலங்கார பொருட்கள் புகழ்பெற்றவை. கடந்த 80ம் ஆண்டுகளில், சீர்த்திருத்த மற்றும் வெளி நாட்டுத் திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட துவக்கக் காலத்தில், சீன மகளிர் தங்களை அழகுபடுத்திக் கொள்வதை கற்றுக் கொள்ள விரும்பினர், அலங்காரத்தை கற்றுக் கொண்ட போது, சேங் மீன் மீன் என்னும் அலங்கார பொருட்களை முதலில் அறிந்து கொண்டனர். ஒரு காலகட்டத்தில், சேங் மீன் மீன், நவநாகரீக அடையாளமாக மாறியுள்ளது. உலகில் புகழ்பெற்ற அலங்கார பொருட்கள், சீனாவில் பரவிய இன்று, சே மீன் மீன் என்பது பெண்மணிகளின் மனதில் ஆழமாக இடம் பெற்றுள்ளது. பல பத்து ஆண்டுகளில் அவருடைய புத்தாக்க அனுபவத்தை சே மீன்மீன் செய்தியாளரிடம் அறிமுகப்படுத்தினார்.
கடந்த 30ம் ஆண்டுகளின் இறுதியில், சே மீன் மீன், இந்தோனேசியாவிலுள்ள சீனர் ஒருவரின் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை, இளமைக் காலத்தில், ஷாங்காய் போக்குவரத்து பல்கலைகழகத்தில் பயின்றார். அந்நிய மொழிகள் சிலவற்றை நன்றாக அறிந்துக் கொண்டார். 1930ம் ஆண்டு, இந்தோனேசியாவிலுள்ள சீன தூதரகத்தில் பணிபுரிய அவர் அனுப்பப்பட்டார். அப்போது, இந்தோனேசியாவில் வாழ் சீனர்களிலிடையில் சே மீன் மீன்னின் தந்தை நல்ல மதிப்பு பெற்றார். நல்ல வசதி சூழலில் வளர்ந்த சே மீன் மீன் அருமையான வெளி தோற்றம் கொண்டுள்ளார். சிறிய வயதில், சே மீன் மீன் தன்னை அழகாக அணிந்தார். அவருக்கு அழகு சாதன பொருட்களின் மீதான உணர்வு அதிகமா. இந்தோனேசியாவின் சாலைகளில் நடந்த போது பாரம்பரிய ஆடைகளில் தலைசிறந்த அழகான படங்கலை கைவினைப்பாளர்கள் தட்டிய காட்சியை அவர் ஆழமாக ஈர்க்கப்பட்டார். அவர் கூறியதாவது
சிறிய வயது முதல், தலைமுடி அலங்காரம் எனக்கு மிக பிடிக்கும். தலைமுடி அழகுப்படுத்துவது ஒருவகை கலையாகும் என்று அவர் கூறினார்.
|