• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-06 20:51:04    
துறவி சுவான் சுவாங்

cri

கி.பி.645ம் ஆண்டு பிப்ரவரி 25ம் நாள், துறவி சுவான் சுவாங், இந்தியாவில் புத்த மறையைக் கற்றுக்கொண்டு அக்காலத்து தலைநகரான சி ஆன் வந்தடைந்தார். சிறு வயதிலேயே தன் அறிவுக்கூர்மையைக் காட்டி, அவர் பல்வகை கல்விகளைக் கற்றுக்கொண்டவுடன் அவற்றை விரைவில் கிரகித்துக்கொண்டார். புத்த மறையின் மீது அவர் பேரக்கறைக் காட்டினார்.

புத்த மறையைப் பெரிதும் விரும்பிய அவர், 22வது வயதில் துறவியானார். கி.பி.627ம் ஆண்டு, அதாவது, தமது 28 வயதில் புத்த மறையைக் கற்றுக்கொள்ள, அவர் இந்தியாவுக்குச் சென்றார். வழியில் எண்ணற்ற இன்னல்களையும் ஆபத்துக்களையும் சமாளித்து, 4 ஆண்டுகால நீண்ட பயணத்துக்குப் பின், இறுதியில் கி.பி.631ம் ஆண்டு இந்தியாவின் புகழ்பெற்ற நரந்தா கோயிலை அடைந்தார்.

அக்கோயில் துறவிகள், சுவான் சுவாங்கை உற்சாகமாக வரவேற்றனர். சுவான் சுவாங், இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிரமப்பட்டு, புத்த மறை கற்றுக்கொண்டார். இதனால், இந்திய புத்த மத வட்டாரத்தினரும், பல்வேறு மதக் குழுக்களின் தலைவர்களும் அவர் மீது அன்பும் மதிப்பும் காட்டினர்.

நாடு திரும்பிய பின், அவர் 75 புத்த மறைகளை மொழியாக்கம் செய்தார். இவை, 1335 தொகுதிகளைக் கொண்டவை. மொத்தம் 13 லட்சத்து 30 ஆயிரம் எழுத்துக்கள் உண்டு. இது, தாங் வம்சக்காலத்தில் இருந்த புத்த மறையில் 50 விழுக்காடாகும்.