• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-07 17:26:03    
ஒலிம்பிக் பிரதிநிதிக்குழுத் தலைவர் கூட்டம்

cri

2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பிரதிநிதிக்குழுத் தலைவர் கூட்டம், இன்று பெய்ஜிங்கில் துவங்கியது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அமைப்புக்குழுத் தலைவர் லீயு ச்சி உரை நிகழ்த்துக்கையில், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அமைப்புக்குழு, இக்கூட்டத்தைப் போதியளவில் பயன்படுத்தி, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேச ஒலிம்பிக் குழுவைக்களைச் சேர்ந்த பிரதிநிதிக்குழுக்களின் தேவையை அறிந்துகொண்டு, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சேவைப் பணியை செவ்வனே செயல்படுத்தும் என்று தெரிவித்தார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சேவைப்பணியில், மூன்று கோட்பாடுகள் பின்பற்றப்படும். சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விதிகளையும் வழக்கங்களையும் பின்பற்றுவது, ஒரே வரையறையுடன் சமத்துவ முறையில் செயல்படுத்துவது, தனிச்சிறப்பியல்புக்கு மதிப்பளித்து, அம்சங்களில் கவனம் செலுத்துவது ஆகியவை இதில் இடம்பெறுகின்றன என்றும் லீயு ச்சி தெரிவித்தார்.