சீனா பெரும் மக்கள் தொகை கொண்ட நாடாகும். சீனாவில் 60 விழுக்காட்டினர் கிராமப்புறத்தில் வசிக்கின்றனர். பல்வேறு காரணங்களால், சில கிராமப்புறங்களில் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி நிலைமை இன்னும் பின்தங்கியுள்ளது. மருத்துவ சிகிச்சை வசதியும் தாழ்ந்த நிலையில் உள்ளது. ஆனால், மோசமான இயற்கை நிலைமை, குறைவான மருத்துவ வசதி முதலிய இன்னல்களைச் சமாளித்து, கிராம மருத்துவர்கள் முழூ மூச்சுடன் விவசாயிகளுக்குச் சேவை புரிந்து, அவர்களின் நல வாழ்வுக்கு முக்கிய பங்கு ஆற்றுகின்றனர்.

Ma yu peng என்பவர், வடமேற்கு சீனாவில் நின் சியா குய் இன தன்னாட்சி பிரதேசத்தின் ஒரு சிற்றூரில் மருத்துவராகப் பணி புரிகின்றார். இந்த ஊரின் பெயர் Dong Tang. இங்கே காலநிலை மோசமாக இருக்கின்றது. வறட்சி, பெரிய காற்று ஆகியவை அடிக்கடி ஏற்படுகின்றன. நிலம் பாலைவன மயமாக்க நிலைமை கடுமையாக இருக்கின்றது. வசந்த காலத்திலிருந்து குளிர்காலம் வரை காற்று வீசுகின்றது. காற்று வீசும் போது மணல் இல்லா இடங்களிலும் காணப்படுகின்றது. இத்தகைய வாக்கியங்களின் மூலம் உள்ளூர் மக்கள் காலநிலையை வர்ணிக்கின்றனர். மருத்துவராகப் பணி புரிவதற்கான காரணம் பற்றி, 35 வயதான Ma yu peng கூறியதாவது, சிறு வயதின் போது, இங்கே மருத்துவ சிகிச்சை நிலைமை மோசமாக இருந்தது. எனது ஒரு குடும்பத்தினரின் குழந்தை, நுரையீரல் அழற்சி நோய்வாய்பட்டது. வீட்டில் 3 நாள் ஓய்வு எடுத்தும். பயன் ஒன்றுமில்லை. Yan Chi மாவட்டத்திலுள்ள பெரிய மருத்துவமனைக்கு அனுப்பிய வழியில், இந்த சிறுவன் உயிர் இழந்தார். நுரையீரல் அழற்சியின் சிகிச்சை அவ்வளவு கடினமானதல்ல. கிராமத்தில் ஒரு நல்ல மருத்துவர் இருந்தால், இந்த சிறுவன் உயிர் பிரிந்திருக்காது. அப்போது முதல், மருத்துவ நுட்பத்தைக் கற்றுக் கொண்டு, ஒரு மருத்துவராகப் பணி புரிவது பற்றிய கருத்து எனக்கு உண்டு என்றார் அவர்.

Ma yup eng இன் தந்தை, Dong tang ஊரில் ஒரு புகழ்பெற்ற மூத்த மருத்துவராவார். Ma yup eng தந்தையிடமிருந்து மருத்துவ நுட்பத்தைக் கற்றுக் கொண்டிருந்தார். வாய்ப்பு கிடைத்த போது, மருத்துவம் பற்றிய சில நூல்களைப் படித்தார். ஆனால், இடைநிலைப்பள்ளியில் தேர்ச்சி பெற்ற பின், அவர் மருத்துவராகப் பணி புரியவில்லை. ஊரில், வேளாண் தொழிலில் ஈடுபட்டிருந்தார். 1998ம் ஆண்டு, அவர் ஒரு வாய்ப்பை பெற்றார். 1998ம் ஆண்டில், Amity நிதியம் கிராம மருத்துவர்களை வளர்க்கும் ஒரு வகுப்பை நடத்தியது. வகுப்பின் தேர்வில் வெற்றி பெற்ற பின், கு யுவான் நகரிலுள்ள மருத்துவப் பள்ளியில் பயிற்சி பெறத் துவங்கினேன். 2004ம் ஆண்டு, Amity நிதியம் 5000 யுவான் மதிப்புள்ள நிதியுதவி அளித்தது. தன்னிடமிருந்த 6000 யுவானுடன் அதைச் சேர்த்து தமது ஊரில் மருத்துவ நிலையம் கட்டியமைக்கப்பட்டது என்றார் அவர். Amity நிதியம் சீனாவின் திறித்தவர்கள் ஆரம்பித்த, பல்வேறு சமூக வட்டாரத்தினர்கள் பங்கெடுக்கும் அரசு சாரா அமைப்பாகும். சீனாவின் மருத்துவ மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு, கல்வி முதலியவற்றின் வளர்ச்சியை முன்னேற்றுவிப்பது இதன் இலக்காகும்.

கு யுவான் நகரிலுள்ள மருத்துவப் பள்ளியிலான பயிற்சிசை முடித்த பிறகு, ma yup eng dong tang ஊருக்குத் திரும்பி, ஒரு கிராம மருத்துவராக மாறினார். தற்போது dong tang மற்றும் அதற்கு அருகிலுள்ள சில ஊர்களைச் சேர்ந்த 3000க்கும் அதிகமான விவசாயிகளுக்கு அவர் சேவை புரிகின்றார். மருத்துவ நிலையத்திற்கும் மிக தூரத்தில் அமைந்துள்ள ஊருக்கும் இடையில் 15 கிலோமீட்டர் உள்ளது. ஆகையால், அவர் சொந்த செலவில் வாங்கிய மோட்டர் சைக்கிள் மூலம் இந்த ஊர்களுக்குச் சென்று, நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கின்றார்.
|