• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-07 16:18:34    
நேயர்களிடமிருந்து கிடைத்த கருத்துக்கள்

cri

கலை: வணக்கம் நேயர்களே. நேயர் நேரம் நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்ச்யடைகிறோம். தொடர்ந்து கடிதங்கள், மின்னஞ்சல்கள் மூலமாக எமக்கு ஆதரவளித்து ஊக்கமூட்டி வரும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.
க்ளீட்டஸ்: இனி நிகழ்ச்சியின் முதல் கடிதமாக, சொத்துக்கள் உடைமகளை பாதுகாக்க சீன் அரசு கொண்டு வரும் சட்டத்தை பற்றிய செய்திதொகுப்பு பற்றி முனுகப்பட்டு பி. கண்ணன் சேகர் எழுதிய கடிதம் இடம்பெறுகிறது.
சீனாவில் தனிநபர்களின் சொத்துக்கள் உடமைகளை பாதுகாக்க புதிய வரமுறைக் கொள்கையை சட்ட வடிவமாக்கும் திட்டம் பயனுள்ள. மக்கள் பணம் வங்கியில் பத்திரமாக இருக்கவும் இச்சட்டம் துணைபுரியும். விளிஅநிலப் பாதுகாப்பி, விவசாயிகள் செல்வம் பாதுகாப்பு மூலம் நீண்டகால வாழ்வுக்கு உத்தரவாதம் செய்யப்படுவது உறுதியாகிறது. எனவே பரிசீலிக்கப்படும் உரிமைச்சட்டம் தேவையானதே என்று எழுதியுள்ளார்.


கலை: வெண்ணந்தூர் எஸ். சுப்பிரமனியன் எழுதிய கடிதம். சீனாவுக்கு அப்பால் நிகழ்ச்சிக்கு பதிலாக சீன வரலாற்றுச் சுவடுகள் என்ற நிகழ்ச்சியை ஒலிபரப்பினீர்கள். நிகழ்ச்சி அருமையாக இருந்தது. இது போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது நன்றாக உள்ளது. நேயர் நேரம் நேயர் கடிதம் நிகழ்ச்சியையும் கொஞ்சம் புதுமையாக செய்யலாம் என்று எழுதியுள்ளார்.
க்ளீட்டஸ்: தொடர்ந்து மாவெளிப்பாளையம், சி. லாவண்யா எழுதிய கடிதம். சீன வானொலி நிகழ்ச்சிகளை சில மாதங்களாக கேட்டு வருகிறேன். எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சிகள் சீன மகளிர் நிகழ்ச்சி, சீன உணவு அரங்கம், சீனப் பண்பாடு, மலர்ச்சோலை, கேள்வியும் பதிலும். சீனத் தேசிய இனக் குடும்பம், உங்கள் குரல் ஆகியவை. இந்நிகழ்ச்சிகளை பற்றி நான் துணைத்தலைவியாவுள்ள மகளிர் சுய உதவிக்குழுவிலும் உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக்கொள்வதுண்டு. புதன் தோறும் நடைபெறும் எங்கள் கூட்டத்தில் சீன வானொலியை கேட்க வைத்து வருகிறேன் என்று எழுதியுள்ளார். மேலும் தங்கள் பகுதியில் மன்றம் அமைக்க தனது கணவருடன் இணைந்த்து முயற்சி செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கலை: அன்பினிய லாவண்யா அவர்களே, உங்கள் ஆர்வம் மற்றும் ஆதரவுக்கு நன்றிகள் பல. மன்றம் துவங்குவது தொடர்பான தகவல்களுக்கு அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தினர் உங்களுக்கு உதவி செய்வார்கள். நீங்கள் தொடர்ந்து நிகழ்ச்சிகளைக் கேட்டு கருத்துக்களை தெரிவிக்கவேண்டும் என்பதே எமது விருப்பமும், வேண்டுகோளும்.

 
இனி, நட்புப்பாலம் நிகழ்ச்சி பற்றி துரையூர் த. குறிஞ்சிக்குமரன் எழுதிய மடல். சீன மக்கள் அதிகம் காரம், இனிப்பு, கொழுப்பு ஆகிய உணவு வகைகளை சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை கலைவாணம் அவர்கள் எடுத்த பேட்டியின் மூலம் அறிந்தேன். குறிப்பா உணவில் காரம் அதிகம் சேர்ப்பதால்தான் கோபம் வருகிறது என்பதை அறிய முடிந்தது. சீன மக்கள் மிகவும் அன்பானவர்கள் என்றும், சீன மொழியை எளிதாக கற்க முடியும் என்றும் ஆனால் தமிழ் மொழியை கற்க சீனர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் என்றும் பேட்டியின் மூலம் அறிந்தேன். அடுத்த முறை சீனப்பயணம் மேற்கொள்ளும்போது சீன வானொலியின் தமிழ்ப்பிரிவுக்குச் சென்று கலையரசி அம்மையாரை சந்திக்க வேண்டும் என்று கலைவாணம் பேடியளித்தவரிடம் அன்பு கட்டளையிட்டார், நன்றிகள் என்று எழுதியுள்ளார்.
க்ளீட்டஸ்: அடுத்து இலங்கை கினிகத்தேனை எம். பி. மூர்த்தி எழுதிய கடிதம். மலர்ச்சோலை நிகழ்ச்சியில் உணவு சாப்பிடும் போது கரண்டி மூலம் நூடுல்ஸ் சாப்பிட போய் சந்தோஷக் களிப்பில் சிரித்து மகிழ்ந்தபோது 15 செ. மீ கரண்டியை விழுங்க, விழுங்கிய கரண்டியை எடுக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதை கேட்டபோது, விளையாட்டு இறுதியில் விபரீதமாக மாறியதை எண்ணி மனவேதனையுற்றேன். கரண்டியை விழுங்கி தொண்டையில் சிக்குண்டு வேதனையில் வாடிய பெண்ணின் நிலை அந்தோ பரிதாபம் என்று எழுதியுள்ளார்.
கலை: ஆமாம், சாப்பிடும் போது கவனமாக இருக்கவேண்டும். வேறு எந்த வேலையும் செய்யாமல் சாப்பிடும் உணவில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும்.
தொடர்ந்து ஆரணி பொன் தங்கவேலன் எழுதிய கடிதம். சீன தேசிய இனங்களை அறிவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஏவங்கு இனம் பற்றி கூறப்பட்ட சீனத் தேசிய இனம் நிகழ்ச்சியைக் கேட்டேன். உள் மங்கோலியாப்பிரதேசத்தில் காட்டுப்பகுதியில் வாழும் இவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்துக்கு உட்பட்டது. இவர்களின் வாழ்க்கையோடு இணைந்த தொழில் கலைமான்களை வளர்ப்பதாகும்.

வேட்டையாடுதல் பொழுதுபோக்கு. ஏவங்கு இனத்து மாருஷா, அழும்பு குடும்பத்தினர் மான் வளர்ப்பது குறித்து அறிந்தேன். மணியோசை கேட்டு வரும் மான்கள் பற்றியும் அன்றைய நிகழ்ச்சியில் அறிந்தேன் என்று எழுதியுள்ளார்.
கலை: அடுத்து இலங்கை காத்தான்குடி அ. அ. முகம்மது ஜுமானி எழுதிய கடிதம்.
சீன வானொலியின் நிகழ்ச்சிகளை கேட்டு வருகிறேன். நிகழ்ச்சியில் இடம்பெறும் செய்திகள் எனக்கு மிகவும் பயனாக அமைகின்றன. சீனாவின் புவியியல் சார் தகவல்களை அறிய எனக்கு அதிக ஆவல். நிகழ்ச்சிகள் அல்லது பத்திரிக்கை வாயிலாக அறியத்தந்தால் மகிழ்ச்சி என்று எழுதியுள்ளார். மேலும் ஒரு குட்டிக்கவிதை உடன் இணைத்து எழுதியுள்ளார்.
வான்வெளியில் தவழும் வெண்ணிலாவே உன் பணியை ஆதரித்து பல்லாயிரம் நேயர்கள் காற்றோடு காற்றாய், சுவாசத்தின் புகலிடமாய் திகழும் வெண்னிலாவே உன் பணி தொடரட்டும்.