• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-07 16:25:44    
பட்டுப்பாதை

cri
சீனப் பட்டின் தயாரிப்பு மற்றும் சீனத்து பட்டின் சிறப்புகளை பற்றி முந்தைய நிகழ்ச்சிகளில் கூறியிருந்தோம். கலை வடிவங்கள், ஆடைகள், மொழிகள், பழக்க வழக்கங்கள் இவையெல்லாம் ஒரு கலாச்சாரத்தின், பண்பாட்டின் அங்கமாக இருப்பது நாம் அறிவோம். ஆனால் ஒரு சாலை, பாதை கூட பண்பாட்டின் அங்கமாக அமையும் என்பதற்கு உதாரணம் தான் பட்டுப்பாதை. கூட்டுரோடு என்று சாலை சந்தியை அழைக்க கேட்டிருப்போம். மதுரையிலிருந்து சென்னைக்கு போகும் சாலையை மெட்ராஸ் ரோடு சென்னை நெஞ்சாலை என்று கூறவதும் நமக்கு பழக்கமானதே. ஆக சென்றடையும் இடத்தின் பெயரிலும், அதன் தன்மை அமைவைக் கொண்டும் சாலைக்கு பெயரிடப்படுவது இயல்பே. ஆனால் பட்டுப்பாதை என்ற பெயர் ஏன் வந்தது.


கிழக்கும் மேற்கும் இந்த பட்டுப்பாதையால் இணைக்கப்படுகின்றன. இந்தப் பெயரை முதலில் சூட்டியவர் ஜெர்மன் நாட்டு புவியியலாளர் வோன் ரிச்டோஃபன் சீனாவையும், தென் மேற்கு மற்றும் மத்திய ஆசியாவையும், இந்தியாவையும் இணைந்தபடி அமையும் இந்த பாதை, முக்கிய வர்த்தக நெறியாக அமைந்திருந்தது. கி.மு. 202-கி. பி. 220 பறையிலான Han வம்சக்காலத்தில் இந்த பாதை பல்வேறு பொருட்களை கொண்டு சென்று விற்க பயன்பட்ட ஒரு வர்த்தக வழித்தடமாக உருவானது. சீனாவின் உட்புறத்தில் ஆரம்பித்து வட மேற்குச் சீனாவினூடாக மேற்கு பகுதியில் நீண்டு ஆசியாவை குறுக்காக கடந்து செல்கிறது. ஊடே ஆப்பிரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் இணைப்புகளை ஏற்படுத்தும் சாலைகளாக பிரிந்து அக்காலத்தில் பல்வேறு பிரதேசங்களின், பல்வேறு இனங்களின் அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டு பரிமாற்றங்களுக்கு வழி கோலியது இந்த பட்டுப்பாதை.


பண்டைய உலகில் மல்பெர்ரி செடிகளை பயிரிட்டு, பட்டுப்புழுக்களை வளர்த்து, பட்டுப்பொருட்களை தயாரித்த முதல் நாடு சீனா தான். இன்றளவும் சீனா உலகுக்கு அளித்து வரும் விலை உயர்ந்த, பெருமதி கொண்ட பொருட்களில் பட்டும் முக்கிய இடம் வகிக்கிறது.
சீனாவின் இதர உற்பத்தி பொருட்கள்/ தயாரிப்பு பொருட்களை விட அதிகமான அளவில் பரந்து விரிந்து விற்பனையாவது சீனப் பட்டு தான்.
ரத்தினப் பாதை, ஜேட் பாதை, புத்த பாதை, பீங்கான் பாதை என பல்வேறு பாதைகள் ஊடாக சீனப் பொருட்கள் கொண்டுச் செல்லப்பட்டன. ஆனால், உண்மையில் இந்த பாதைகள் அனைத்துமே பட்டுப்பாதையின் தனிப்பட்ட கிளைகளாகவே அமைந்தன அல்லது தனிப்பட்ட ரீதியில் பட்டுப்பாதையை பிரதிநிதித்துவப்படுத்தன எனப்படுகிறது.
ஆக பல பொருட்கள் இந்த பாதையினூடாக கொண்டு செல்லப்பட்டன என்றாலும், முக்கியமான பொருளான பட்டின் பெயரிலேயே இப்பாதை அழைக்கப்பட்டது, அழைக்கப்படுகிறது, அழைக்கப்படும். இதுவே பட்டுப்பாதையின் பின்னணி. இனி, அதன் வரலாற்றை பற்றி சில தகவல்கள்.


பட்டுப்பாதையின் வரலாற்றிலும் சரி, அதன் தோற்றம் மற்றும் பயன்பாட்டிலும் சரி, யாரும் மறக்க முடியாத ஒரு நபர். Zhang Qian. இவர் புகழ் பெற்ற தூதாண்மை அதிகாரியாகவும், ஆய்வுப் பயணியாகவும் திகழ்ந்தார்.