• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-08 14:42:53    
லைபீரியாவிலுள்ள சீன அமைதிக் காப்புப் படைவீரர்கள்

cri

லைபீரியா

ஐ.நா. பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான சீனா, உலகின் பல்வேறு இடங்களிலான ஐ.நாவின் அமைதிக் காப்பு நடவடிக்கைகளை எப்போதுமே ஆதரித்து, ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து வருகிறது. 1992ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஜனவரி திங்கள் வரை, ஐ.நாவின் 15 அமைதிக் காப்பு நடவடிக்கைகளில் சீனா பங்கெடுத்து, 6000க்கு அதிகமான அமைதிக் காப்புப் படைவீரர்களை அனுப்பியுள்ளது.

திரு யூ சாங் ச்சுங், சீன பெய்ஜிங் ராணுவ மண்டல மருத்துவ மனையில் மருத்துவராக வேலை செய்கிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி திங்கள், லைபீரியாவிலுள்ள சீனப் படையின் ஐ.நா. அமைதிக் காப்பு நடவடிக்கையில் கலந்து கொள்ள, அவர் சேர்ந்த மருத்துவ மனை சிலரைத் தெரிவு செய்து அனுப்பியது. அவரும் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டார். ஐ.நா. அமைதிக் காப்பு நடவடிக்கையில் கலந்து கொள்ள தாம் வாய்ப்பு பெறுவதை தெரிந்து கொண்ட போது அவர் கூறியதாவது—

"அப்போது நான் ஓரளவு உணர்ச்சி வசப்பட்டேன். ஆனால் சில கவலைகள் இருந்தன" என்றார் அவர்.

லைபீரியாவின் பாதுகாப்பு நிலை, வெப்பமண்டல நோய் ஆகியவற்றை அவ்வளவு அறிந்து கொள்ளாமல் இருந்தமை, யூ சாங் ச்சுங் கவலைப்பட்டதற்கான காரணமாகும். தவிர, மொழியும் ஒரு தடையாகும்.

ஆனால், உடல் திறன், ஆங்கில மொழி, ராணுவம் முதலியவை தொடர்பான ஒரு திங்களுக்கு மேற்பட்ட பயிற்சிக்குப் பின், மருத்துவர் யூ மற்றும் இதர 42 சீன மருத்துவர்கள் அனைவரும் தகுதி பெற்றனர்.

2006ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள், யூ சாங் ச்சுங் மற்றும் அவரது 42 சக பணியாளர்கள் இடம்பெறும் சீன மருத்துவ சிகிச்சை அணி, அமைதிக் காப்பு கடமைக்காக லைபீரியாவுக்குச் சென்றது.

லைபீரியாவில் கடமையைச் செயல்படுத்திய போது, சீன மருத்துவர்கள் ஐ.நாவின் 2வது நிலை மருத்துவ மனையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஐ.நா. அமைதிக் காப்புப் படைவீரர்களுக்கு உகந்த மருத்துவ சிகிச்சை சேவைகளை வழங்கினர். தவிர, ஐ.நா. மருத்துவ மனையில் சிகிச்சை பெற பொது மக்கள் விரும்புகின்றனர். கடும் நோய்வாய்ப்பட்ட நோயாளி ஒருவரைக் காப்பாற்றியதில் மருத்துவர் யூ பங்கெடுத்தார். அப்போதைய அவசர நிலைமை பற்றி அவர் எமது செய்தியாளரிடம் கூறியதாவது—

"ஒரு நாள் காலையில் காலை உணவு சாப்பிட்டு கொண்டிருக்கையில், 18 வயதான கர்ப்பிணி கடும் ரத்தப் போக்குடன், எமது மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். வேறு வழி இல்லாத நிலையில், நோயாளியின் உயிரைக் காப்பாற்ற இயன்ற அளவில் முயற்சி மேற்கொள்ள வேண்டும். 8 மணி நேர முயற்சி மூலம், அந்த கர்ப்பிணியின் ரத்தப் போக்கு கட்டுப்படுத்தப்பட்டது. ஒரு ஆண் குழந்தை தடையின்றி பிறந்தது. இறுதியில் கர்ப்பிணி உயிர் பிழைத்தார்" என்றார் அவர்.

சிறந்த மருத்துவ நுட்பம் மற்றும் சீரான செயல் முறை மூலம், சீன மருத்துவ சிகிச்சை அணி லைபீரியா மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. மேலும், லைபீரியாவிலுள்ள ஐ.நாவின் சிறப்புக் குழு வழங்கிய ஐ.நா. அமைதிக் காப்புப் பதக்கத்தை சீன மருத்துவ சிகிச்சை அணி பெற்றுள்ளது.

லைபீரியாவில், சீன ராணுவ மருத்துவர்கள் ஐ.நா. அமைதிக் காப்பு கடமையைச் செயல்படுத்துவது மட்டுமல்ல, சீனப் பொறியியல் படைவீரர் அணியும் உள்ளூர் அமைதிக்காக பங்காற்றி வருகிறது.

சாலைக் கட்டுமானம் மற்றும் பழுது பார்ப்பு, லைபீரியாவிலுள்ள சீனப் பொறியியல் படைப் பிரிவின் முக்கிய கடமையாகும். பல ஆண்டுகால உள்நாட்டுப் போரினால், லைபீரியாவிலான சாலைகள் கடுமையாக நாசமடைந்துள்ளன. ஆகையால், பொறியியல் படை பிரிவின் பணி மிகவும் கடினமாகவும் அதிகமாகவும் உள்ளது.

அடிக்கடி சில திங்கள் காலம் தொடர்ந்து வெளியே பணி புரிய வேண்டியுள்ளது.
லைபீரியாவிலுள்ள சீன அமைதிக் காப்புப் படையின் போக்குவரத்து பிரிவு, லைபீரியாவிலுள்ள அனைத்து ஐ.நா. அமைதிக் காப்புப் படையின் போக்குவரத்து கடமைக்கும் பொறுப்பேற்கிறது. இந்தப் படைப் பிரிவு, லைபீரியாவிலுள்ள ஐ.நாவின் சிறப்பு குழுத் தலைமை தளபதி Obiakorஇன் பாராட்டைப் பெற்றுள்ளது.

"சீனப் படைவீரர்களின் பங்கு மகத்தானது. சீன போக்குவரத்து பிரிவின் பணி இல்லாவிட்டால், எமது படை சீராக இயங்க முடியாது என்று சக பணியாளர்களிடம் நான் அடிக்கடி கூறுகின்றேன்" என்றார் அவர்.

லைபீரியா மட்டுமல்ல, கின்சாசா காங்கோ, சூடான், லெபனான் முதலிய கொந்தளிப்பான நிலையிலுள்ள நாடுகள் மற்றும் பிரதேசங்களிலும் சீன அமைதிக் காப்புப் படைவீரர்கள் காணப்படுகின்றனர். தற்போது, 1500க்கும் அதிகமான சீன அமைதிக் காப்புப் படைவீரர்கள் ஐ.நாவின் 9 கடமைப் பிரதேசங்களில் அமைதிக் காப்புக் கடமையை செயல்படுத்தி வருகின்றனர்.