• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-09 22:01:36    
உள்மங்கோலியாவின் ஓ பேள விழா

cri

ஜுன் 25ம் நாள், ஓ பேளவுக்கு வழிபாடு செய்யும் நல்ல நாளாகும். பல ஆயிரப் பொது மக்கள், நூற்றுக்கணக்கான டவோர் இயல் சங்கத்தின் உறுப்பினர்கள், மாவட்டத்தின் பல்வேறு துறைகளின் தலைவர்கள், பயணிகள் முதலியோர், தேசிய இன ஆடை அணிந்து, சீனாவின் உள்மங்கோலியத் தன்னாட்சி பிரதேசத்தின் மொரிடாவா மாவட்டத்திலுள்ள ஓ பேள மலையில், மகிழ்ச்சியுடன் ஒன்று திரண்டனர். சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலிருந்து வந்த முதியோர் ஒருவர், எமது செய்தியாளரிடம் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டிலும் நான் இங்கு வருகின்றேன். நான் டவோர் இனத்தைச் சேர்ந்தவர். என்னுடைய வீடு, இங்கிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலுள்ள TENG KE என்னும் இடத்தில் அமைந்துள்ளது. குடும்பத்தினர் அனைவரும் இங்கு வந்துள்ளனர். பொது மக்கள் அமைதியாக வாழ்ந்து, வளமடைந்து, வேலையில் முன்னேற்றம் பெறுவதற்காக நாங்கள் ஓ பேளவை வழிபாடு செய்கின்றோம் என்றார் அவர்.

இந்த முதியோரின் பெயர் E ZHONG RONG, கல்வி பணி புரிந்தவர். தற்போது, அவர் ஓய்வு பெற்று, வீட்டில் குடும்பத்தினருடன் இணைந்து இன்பமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றார்.

ஓ பேள வழிபாட்டு விழாவில் கலந்துகொண்டவர்களில், டவோர் இனத்தவர் மட்டுமல்ல, ஹான் இன நண்பர்கள் பலரும் உள்ளனர். சில குழந்தைகளுடன் இக்கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரு பெண்மனி, எமது செய்தியாளரிடம் கூறியதாவது:

நான் டவோர் இனத்தவர் அல்ல. கடந்த மூன்று ஆண்டுகளில், இந்த ஓ பேள வழிபாட்டு விழா, இங்கு தொடர்ந்து நடைபெற்றுள்ளது. இவ்வாண்டு மிகவும் கோலாகலமாக இருக்கிறது. டவோர் இனத்தவர், ஒரு கல் கொண்டு, ஓ பேளவில் வைத்து, வான் கடவுள் நலன்களை வழங்க வேண்டுமென வேண்டினர் என்றார் அவர்.

காலை 9 மணிக்கு, ஓ பேள வழிபாட்டு விழா துவங்கியது. டவோர் இயல் சங்கத்தின் தலைமை செயலாளர் YUE ZHI DE, இவ்வழிபாட்டு விழாவுக்குத் தலைமை தாங்கினார். NA SHUN DA உள்ளிட்ட 10 முதியோர்கள், வண்ணமான தேசிய இன ஆடை அணிந்து, வழிபாட்டு மேசைக்கு முன், முழங்காலிட்டு வணங்கினர். முதியோர் NA SHUN DA, டவோர் மொழியில் வழிபாட்டுக் வாசகம் படித்தார்.

அன்று, பழக்கவழக்கத்தின் படி, ஒரு மாடு, மூன்று ஆடுகள், 40 கோழிகள், 150 கிலோகிராம் பன்றி இறைச்சி, பல்வேறு வகை மதுக்கள், சிற்றுண்டி, பழங்கள் முதலியவை, ஓ பேளவுக்கு முன்னால் வழிபாட்டுப் பொருட்களாக வைக்கப்பட்டுள்ளன.

வழிபாட்டுக் வாசகம் படித்த பிறகு, இந்த பத்து முதியோர்கள், மது போத்தலைக் கையில் கொண்டு, ஓ பேளவைச் சுற்றி, மூன்று வட்டங்களாக நடந்ததோடு, மரியாதை செய்யும் வகையில், ஓ பேளவின் கல்லில் மதுவைத் தூவினர். பிறகு, இச்சங்கத்தின் வேறு உறுப்பினர்களும், பொது மக்களும், அதே போல், செய்தனர். வழிபாட்டு விழா நிறைவடைந்த பிறகு, கலை நிகழ்ச்சி அரங்கேற்றம் தொடங்கியது.

உள்மங்கோலியத் தன்னாட்சி பிரதேசத்தின் மொலிடாவா மாவட்டத்தின் சிறப்பான நடிகைகள் வழங்கிய இந்த தலைச்சிறந்த நிகழ்ச்சிகள், பார்வையாளர்களால் வரவேற்கப்பட்டன. அதே வேளை, பாரம்பரிய விளையாட்டு அரங்கேற்றங்கள் நடைபெற்றன. இதில், முதியோர் ஹாக்கி போட்டி குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில், மூத்தவரின் வயது, 81. அவர்கள் பயன்படுத்திய ஹாக்கி மட்டையும் பந்தும், மரத்தை அடிப்படையாகக் கொண்டு, தயாரிக்கப்பட்டவை.

மகிழ்ச்சியான விழாச் சூழ்நிலையில், மாவட்டத்தின் தலைவர்கள், விருந்தினர்கள், சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோர், அரங்கேற்ற இடத்தில் நுழைந்து, கூட்டாக ஆடிப்பாடி, மகிழ்ந்தனர்.

பண்டைய பாரம்பரிய வடிவில், ஓ பேளவுக்கு வழிபாடு செய்வது, இத்தேசிய இனத்துக்கு புதிய உள்ளடக்கத்தை வளர்த்து வருகிறது. ஓ பேள விழாவில், டவோர் இனத்தவர்கள், தங்கள் தேசிய இன மதிப்பையும் பெருமையையும் போதியளவில் எடுத்துக்காட்டியுள்ளனர். இந்தத் தேசிய இன விழா கூட்டம், மொலிடாவா மாவட்டத்தின் முழுமையான சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஆக்கப்பூர்வமாக விரைவுபடுத்தும்.