• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-10 21:41:50    
புகழ்பெற்ற ஓவியர் சாங் தா சியான்

cri
மே திங்கள் 10ம் நாள், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் புகழ்பெற்ற பாரம்பரிய சீன ஓவியர் திரு சாங் தா சியான் அவர்களின் பிறந்த நாளாகும். 1899ல், சிசுவான் மாநிலத்தின் NEI JIANG மாவட்டத்தில் பிறந்த அவர், தமது வாழ் நாள் முழுவதும் ஓவியக்கலையில் ஈடுபட்டார்.

கண்டிப்பான முறையில் தலைசிறந்த நுட்பத்துடன் அவர் ஓவியம் வரைந்தார். சீனப் பாரம்பரிய ஓவியம், நபர்கள், பூக்கள், சீனக் கையெழுத்து கலை ஆகிய துறைகளில், அவர் தேர்ச்சி பெற்றவராவார். அவர் உலகெங்கும் சென்று ஓவியக்கலை நடவடிக்கைகளில், ஈடுபட்டு பெரும் செல்வாக்கைப் பெற்றார்.

1957ம் ஆண்டு அமெரிக்காவின் நியுயார்க் நகரில் உள்ள உலக நுண்கலைச் சங்கம், அவரை சமகாலத்தின் முதன்மை ஓவியராகப் பரிந்துரை செய்ததுடன், அவருக்கு தங்க பதக்கத்தையும் வழங்கிச் சிறப்பித்தது. 1983ம் ஆண்டு ஏப்ரல் 2ம் நாளன்று சாங் தா சியான், தமது 84வது வயதில் தைபெய் நகரில் காலமானார்.