• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-10 15:02:52    
தேசிய இனத்தின் தனித்தன்மையுடைய கலைக்கான பாதுகாப்பு

cri

சீனாவில், 55 சிறுபான்மைத் தேசிய இனங்கள் இருக்கின்றன. அவற்றின் மக்கள் தொகை, நாட்டின் மக்கள் தொகையில் 8 விழுக்காடாகும். சீனாவின் சிறுபான்மைத் தேசிய இனங்கள், ஆடல் பாடல் மற்றும் கதைப்பாடல் மூலம் தமது வாழ்க்கையை வர்ணிக்கின்றன. கடந்த நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் இது, தனித்தன்மை வாய்ந்த கலைப் பாணியாகியுள்ளது. சீனாவின் சிறுபான்மைத் தேசிய இனங்களின் இத்தனித்தன்மைமிக்க கலையில் வெளிநாட்டு ரசிகர்கள் பலர் நிறைய அக்கறை கொண்டுள்ளனர். தவிரவும், அதன் கையேற்றம், பாதுகாப்பு ஆகியவற்றிலும் மிகுதியும் கவனம் செலுத்துகின்றனர்.


உலகில் பல நாடுகளின் சிறுபான்மைத் தேசிய இனங்களின் கலை போல், சீனாவின் சிறுபான்மைத் தேசிய இனக் கலையும், நவீன நாகரீகம் மற்றும் நவீன கலைவடிவத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. இக்கலை நலிந்து போகும் நிலையில் உள்ளது. ஒழிந்து மறையும் அபாயத்தில் இருக்கின்றது. அதற்காக மதிப்புமிக்க இச்சிறுபான்மைத் தேசிய இனப் பண்பாட்டு மரபுச் செல்வத்தைக் காப்பாற்ற, சீன அரசு, செயலாக்க முறையில் நடவடிக்கைகளைக் கடைப்பிடித்துள்ளது.
இப்போது நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, திபெத் இனப் பாடகர் Zongyong Zhuoma பாடுகின்ற "மே ரி உறைபனி மலையின் மகள்" என்ற பாடலாகும். யுன்னான் மாநிலத்தின் டி சிங் திபெத் இனத் தன்னாட்சி சோவைச் சேர்ந்த அவர், புகழ் பெற்ற திபெத் இனப் பாடகராவார். சிறுபான்மைத் தேசிய இனத்தின் தனித்தன்மை வாய்ந்த கலை அரசால் கவனிக்கப்படுவதையும், சமூகத்தின் பரந்த ஆதரவுடன் வளர்ச்சிக்கான வாய்ப்பினை பெற்றிருப்பதையும் கண்டு தாம் மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவித்தார். எடுத்துக்காட்டாக, சிறுபான்மைத் தேசிய இன பாடல்கள் பெரிய ரக அரங்கேற்றத்தில் அடிக்கடி முக்கிய நிகழ்ச்சியாக இடம்பெற்றுள்ளன. ஒலிப்பதிவு நாடாக்கள் அல்லது குறுவட்டுக்கள் ஒலி மற்றும் ஒளி நாடா விற்பனை கடைகளில் குறிப்பிட்ட இடத்தில் வைக்கப்பட்டு, விற்கப்படுகின்றன. விற்பனை அளவும் அதிகம் என்றும் அவர் கூறினார்.
சிறுபான்மைத் தேசிய இனங்களின் தனித்தன்மை வாய்ந்த கலையைப் பாதுகாப்பது, மேம்பாடு மற்றும் உயர்வுடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார். பாடகர்கள், அறிவியல் முறையில் முறைப்படி கற்றுத் தேர வேண்டும். இவ்வாறு அவர்கள் இக்கலையின் உயிரை நீட்டிக்கலாம். இத்தனித்தன்மையுடைய கலை, தலைமுறை தலைமுறையாக கையேற்றப்பட முடியும். இல்லாவிடில், இக்கலையின் உயிர் நெடியதாகாது. வளமடையாது என்று அவர் கருதுகின்றார்.
இப்போது, நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, திபெத் இனத்தின் பிரபலமான காவியமான "கெசர்" கதைப்பாடலாகும். "கெசர்", திபெத் இன மக்கள் இயற்றிய, உலகில் மிக நீளமான வீரஞ்செறிந்த காவியமாகும். திபெத் இனத்தவரான வீரர், மன்னர் கெசரின் வாழ்க்கை முழுதுமான அருஞ்செயல்கள் இக்காவியத்தில் இடம்பெறுகின்றன. "உலக காவிய மன்னர்" என்று கெசர் காவியம் பாராட்டப்படுகின்றது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் இக்காவியம் திபெத் பிரதேசத்தில் கதைப்பாடல் மூலம் பரவி வருகின்றது. கலை இலக்கியத்துறையில் இக்காவியம் மிக்க மதிப்புடையது. இது மட்டுமின்றி, வரலாறு, புவிநிலையியல், மக்களின் பழக்க வழக்கங்கள், தொல் பொருள் ஆய்வு முதலியவற்றிலும் தலைமுறைக்கு ஆராயத்தக்க பலவற்றை இக்காவியம் விட்டுச்சென்றுள்ளது. திபெத் இன வழக்க பாரம்பரியத்தின் கருவூலமாக இது பொதுவாகக் கருதப்படுகின்றது.


வட மேற்குச் சீனாவின் சிங்ஹேய் மாநிலம், திபெத் இனத்தவர்கள் முக்கியமாக கூடிவாழும் மாநிலங்களில் ஒன்றாகும். அந்நாளில், மன்னர் கெசர் முக்கியமாக செயல்பட்ட மண்டலமும் ஆகும். "கெசர்" காவியத்தைக் கதையாக பாட வல்ல முதிய கலைஞர்கள், சிங்ஹேய் மாநிலத்தில் வசித்துள்ளனர். ஆனால், இம்முதிய கலைஞர்கள் ஒருவருக்கு பின் ஒருவராக மரணமடைந்த பின்னர், இதனைக் கையேற்றுவோர் இல்லை. எனவே, "கெசர்" காவியம், இழக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்குகின்றது.
திபெத் இனத்தின் மதிப்புமிக்க நாட்டுப்புறக் கலையைப் பேணிக்காக்கும் வகையில், சிங்ஹேய் மாநிலத்தின் Guo Luo திபெத் இனத் தன்னாட்சி சோவில் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வ ஆய்வு தளம் நிறுவப்பட்டது. சிங்ஹேய் மாநிலத்திலுள்ள திபெத் இன நாட்டுப்புறப் பண்பாட்டைத் திரட்டி சரிப்படுத்துவது அதன் பணியாகும். சிங்ஹேய் மாநிலத்தைச் சேர்ந்த Dong Nuo Er De "கெசர்" காவியம் பற்றிய கலை ஆய்வு மையத்தின் தலைவர். இது பற்றி அவர் கூறியதாவது:
(ஒலிப்பதிவு 7)
"'கெசர்' தொடர்பான 50க்கும் அதிகமான நாட்டுப்புற கலைஞர்களை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். அவர்களில் 30க்கும் மேலானோர், 'கெசர்' காவியத்தை கதை மூலம் பாடுவதில் புகழ் பெற்றவர்கள். அவர்களின் வாய்மொழி கதைப்பாடல் படைப்புகளை காப்பாற்றியுள்ளோம். அன்றி, மரச்செதுக்கு படிவங்கள் மற்றும் கையெழுத்துப் படிவங்கள் போன்ற 'கெசர்' படிவத்தைத் திரட்டி சரிப்படுத்தியுள்ளோம்" என்றார் அவர்.
ஏற்கனவே பெறப்பட்டுள்ள சாதனை பற்றி அவர் மேலும் கூறியதாவது:
(ஒலிப்பதிவு 8)
"தேசிய இனப் பண்பாட்டிற்கான பாதுகாப்பு, காப்பாற்றுதல், திரட்டல், சரிப்படுத்தல், கையேற்றம் மற்றும் வெளிக்கொணர்தல் ஆகியவற்றில் அரசு மிகுதியும் கவனம் செலுத்தி, அதிக நிதி ஒதுக்கி வைத்துள்ளது. கெசர் காவியம், சீனாவின் பொருள் சாராத பண்பாட்டு மரபுச் செல்வத்தின் பெயர்ப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில், உலகளாவிய நிலையில் பொருள் சாராத பண்பாட்டு மரபுச் செல்வங்களுக்கான பாதுகாப்பு பெயர்ப்பட்டியலில் கெசர் காவியம் சேர்க்கப்படுமாறு விண்ணப்பித்துள்ளோம்" என்றும் அவர் கூறினார்.


கவ்வி மூலம் சிறுபான்மைத் தேசிய இனங்களின் தனித்தன்மை வாய்ந்த கலையை கையேற்ற வேண்டும் என்று தென் மேற்குச் சீனாவின் யுன்னான் மாநிலத்து யுன்னான் தேசிய இனப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் Wang Si Dai கருத்து தெரிவித்துள்ளார். யுன்னான், சிறுபான்மைத் தேசிய இனங்கள் அதிகமாக உள்ள மாநிலமாகும். நாட்டின் 56 தேசிய இனங்களில் 25 இனங்கள் அங்கு வாழ்கின்றன. 1994ம் ஆண்டு முதல், சிறுபான்மைத் தேசிய இனப் பண்பாட்டுக்கென, அவர் பெரும் எண்ணிக்கையிலான புதிய தலைமுறை கலை திறமைசாலிகளை பயிற்றுவித்துள்ளார்.
நேயர்கள் இது வரை "தேசிய இனத்தின் தனித்தன்மையுடைய கலைக்கான பாதுகாப்பு" பற்றி கேட்டீர்கள்.