• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-14 08:30:17    
தாத்தா உருளைக்கிழங்கு

cri

க்ளீட்டஸ் – வாணி, இன்று ஒரு வகை சைவ உணவு பற்றி எடுத்துக் கூறுவோம், அல்லவா?

வாணி – ஆமாம். உருளைக்கிழங்கு கொண்ட ஒரு உணவு வகையின் தயாரிப்பு பற்றி கூறுவோம். இது சீனாவின் யுனான் மாநிலத்தின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றாகும். இதற்கு நகைச்சுவையான ஒரு பெயர் உண்டு.

க்ளீட்டஸ் – என்ன பெயர்?

வாணி – தாத்தா உருளைக்கிழங்கு. பல் இல்லாத தாத்தா கூட இதனை ருசிப் பார்க்கலாம் என்பது இதற்கான காரணம் என்று நினைக்கிறேன்.

க்ளீட்டஸ் – அப்படியா, பற்கள் கொண்ட நாங்களும் கண்டிப்பாக ருசிப்பார்க்கலாம்.

 

வாணி – சரி. தேவையான பொருட்கள் பற்றி நான் கூறுவேன்.
உருளைக்கிழங்கு 2
கறுப்பு மிளகுத் தூள் 4 கிராம்
வெங்காயம் 1
உப்பு 5 கிராம்
சமையல் எண்ணெய் 30 மில்லி லிட்டர்

வாணி – முதலில் நாம் உருளைக்கிழங்குகளை நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு, இவற்றை நீரில் போட்டு நன்றாக வேகவிடுங்கள். க்ளீட்டஸ், உருளைக் கிழங்கு வெந்துவிட்டது என்பதை எப்படி உறுதிபடுத்துவது என்று உங்களுக்கு தெரியுமா?

க்ளீட்டஸ் – நீங்கள் சொல்லுங்கள்.

வாணி – நான் chopsticks பயன்படுத்துகின்றேன். ஒரு chopstick மூலம், உருளைக்கிழங்கை எளிதாக குத்து முடிந்தால், இந்த உருளைக்கிழங்கு முற்றிலும் வேகவைக்கப்பட்டது என்பதை உறுதிபடுத்தலாம்.

க்ளீட்டஸ் – சரி, எனக்கு புரிகிறது. வேகவைக்கப்பட்ட உருளைக்கிழங்குகளை குளிர் நீரில் சில நிமிடங்கள் வையுங்கள். சூடாக இல்லாத போது, நீங்கள் உருளைக்கிழங்குகளின் தோலை பிரிக்கலாம். பிறகு, இவற்றைச் சிறிய பொடிப்பொடியாக நறுக்கவும்.

வாணி – அடுத்து, இந்த உருளைக்கிழங்கு துண்டுகளை ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்து, இவற்றை மாவாக்க வேண்டும். இதைச் செய்யும் போது, கூடவே கறுப்பு மிளகு தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கலாம்.

க்ளீட்டஸ் – ஆமாம். இப்படி செய்தால் தான், இந்த உருளைக்கிழங்கு மாவு சுவையாக இருக்கும்.

வாணி – அடுத்து, வாணலியை அடுப்பின் மீது வைத்து, இதில் சமையல் எண்ணெயை ஊற்றவும். பிறகு, இதில் வெங்காய துண்டுகளை கொட்டவும். வெங்காயத்தின் மணம் வீசிய பிறகு, இவற்றை எண்ணெயிலிருந்து வெளியே எடுக்க வேண்டும்.

க்ளீட்டஸ் – இப்போது, நீங்கள் உருளைக்கிழங்கு மாவை எண்ணெயில் சேர்க்கலாம். வேகமாக வதக்கவும்.

வாணி – விரைவில், சுவையான உருளைக்கிழங்கு வறுவல் தயார்.

க்ளீட்டஸ் – இங்கே, ஒரு குறிப்பு. உங்களுக்கு வேறு சுவை பிடித்தால், இதில் மிளகாய் தூள் அல்லது, கறி மசாலா போன்றவற்றை இந்த வறுவலில் சேர்க்கலாம். 

வாணி – சரி, நேயர்களே, இன்று நாங்கள் அறிமுகப்படுத்திய உருளைக்கிழங்கு வறுவலை நீங்கள் வீட்டில் தயாரித்து ருசிப்பார்க்கவும்.

க்ளீட்டஸ் – வாணி, அடுத்த வாரம் எந்த உணவு வகை பற்றி நேயர்களுக்கு அறிமுகப்படுத்துவோம்?

வாணி – அடுத்த வாரம் கத்தரிர்காய் வறுவல் பற்றி அறிமுகபடுத்துவோம். இது ஒரு சைவ உணவாகும். நீங்கள் முன்கூட்டியே கத்தரிகாய், மிளகாய், பூண்டு, இஞ்சி, சோயா சாஸ் ஆகியவற்றை தயாரிக்கலாம்.