• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-21 11:00:36    
மாணவர் ஜுன்ஜுனின் கல்வி வாழ்க்கை

cri

பொது மக்களின் கல்வி தரத்தை உயர்த்தச் சீன அரசு பாடுபட்டு வருகின்றது. இந்தப் பணியில் ஒரு பிரச்சினை மக்களின் கவனத்தை மென்மேலும் ஈர்த்துள்ளது. அதாவது, நகரங்களில் குறிப்பாக பெரிய நகரங்களில் மாணவர்களின் சுமை அளவுக்கு மீறி அதிகமானதாகும். சாதாரண வகுப்புகளைத் தவிர, பல்வகை உதவி வகுப்புகளில் சேர பல பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்றைய நிகழ்ச்சியில் ஜுன்ஜுன் என்ற சிறுமியின் வாழ்க்கை பற்றி கூறுகின்றோம்.


சனிக்கிழமையின் காலையில், ஜுன்ஜுன் ER HU என்ற இசை கருவியை இசைக்கத் துவங்கினார். ER HU சீனாவின் ஒரு வகை நரம்பு இசை கருவியாகும். சீனாவின் தனி வயலின் என இது அழைக்கப்படுகி்றது. ஜுன்ஜுன் துவக்கப்பள்ளியில் 2வது வகுப்பில் சேர்ந்தார். அவளுடைய தந்தை taxi ஓட்டுநராவார். தாய் கடையில் பணி புரிகின்றார். தாதாவும் தாட்டியும் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர். ஓய்வு நாட்களில் ஜுன்ஜுன் தாதா வீட்டில் வசிக்கின்றார். ஆனால், ஜுன்ஜுனைப் பொறுத்த வரை ஓய்வு நாள் கிடைக்க முடியாது. ஏனென்றால், ஆசிரியரின் வீட்டுக்குச் சென்று, ER HU இசைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். காலை உணவுக்குப் பின், பயிற்சிக்காக வீட்டில் சில முறை இசைத்தப் பிறகு, ஜுன்ஜுன் தாதாவுடன் ஆசிரியரின் வீட்டுக்குச் செல்ல புறப்பட வேண்டும்.


துவக்கக் காலத்தில், அவளை நிர்பந்திக்க வேண்டும். பிறகு, இந்த வகுப்பு குழந்தையின் அறிவு திறமைக்கு நன்மை பயக்கும் என்பதைக் கண்டுபிடித்துள்ளோம். தற்போது, அவள் பாடத்தையும் நன்றாக மனப்பாடம் செய்யலாம் என்றார் ஜுன்ஜுனின் தாதா.
ஆனால், இது மிக முக்கியமானதல்ல. பல பெற்றோர்களின் கருத்தில், இதர குழந்தைகளை விட தனது குழந்தை மேலும் அதிகமான திறன் கைப்பற்றினால், நல்ல ஆசிரியர்கள், நல்ல கல்வி வசதிகள் படைத்த இடை நிலை பள்ளி ஏன் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு முன்னுரிமை பெறலாம். இது தான் மிக முக்கியமானது.
சீனாவில், இடை நிலை பள்ளிகள் அல்லது பல்கலைக்கழகங்களின் நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ளும் போது, மாணவர்களுக்கு ஒரு சிறப்பு திறன் இருந்தால், அவர்களுடைய மதிப்பெண் அதிகரிக்கப்படலாம். ER HU என்ற இசை கருவி இசைப்பென்ற மட்டத் தேர்வில் வெற்றி பெற்றால், மதிப்பெண் அதிகரிக்கப்படலாம். ER HU தவிர, நேர்த்தியான கை எழுத்து, கணிதவியல், ஆங்கிலம், சீன மொழிகட்டுரை முதலிய வகுப்புகளில் ஜுன்ஜுன் கலந்து கொள்ள வேண்டும்.
ஜுன்ஜுனின் குடும்பத்தினர்கள் அவளுடைய கல்வியில் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால், இத்தகைய வழிமுறை அவளுக்கு களைப்பு ஏற்படுத்தியுள்ளது.


கசப்பு. ER HU கற்றுக்கொள்வது எனக்கு அதிக சுமை கொண்டு வருகின்றது. ஓர் வாரத்தில் ஒரு நாள் கூட ஓய்வு பெற முடியாது என்றார் அவள்.
உண்மையில், ஜுன்ஜுன் போன்ற மாணவர்கள் சீனாவின் நகரங்களில் மிக அதிகமானவர். புள்ளிவிவரங்களின் படி, நகரங்களில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான மாணவர்கள் இசை கருவியை இசைக்கக் கற்றுக்கொள்கின்றனர் அல்லது இசைக் கற்கும் அனுபவம் கொண்வராவர். விடுமுறையில், குறைந்தது 50 விழுக்காட்டு குழந்தைகள் உதவி வகுப்புகளில் சேர்கின்றனர். அவர்களில் சிலர் 3 வகைகளுக்கு அதிகமான வகுப்புகளில் சேர்கின்றனர். பெய்ஜிங் மாநகரில், 10 மாணவர்களில் 9 பேர், குடும்ப ஆசிரியர்களை வரவழைக்கின்றனர். அல்லது பள்ளி வகுப்புகளைத் தவிரந்த வகுப்பில் சேர்கின்றனர்.