• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-21 11:00:36    
நேயர்கள் நிகழ்ச்சிகளை கேட்டு தெரிவித்த விமர்சன கருத்துக்கள்

cri

கலை: வணக்கம் நேயர்களே. நேயர் நேரம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
க்ளீட்டஸ்: இன்றைய நிகழ்ச்சியின் முதல் கடிதம் திருநெல்வேலி கடையாலுருட்டி நேயர் எம். பிச்சைமணி எழுதிய கடிதம். தாய்நாட்டிற்குச் சேவை செய்வது என்ற செய்தித்தொகுப்பு குறித்து அவரது கருத்துக்கள் இதோ.


சீனர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்பது 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது என்பதைக் கேட்டேன். வெளிநாடுகளில் கல்வி கற்றவர்கள் தாய்நாட்டிற்குத் திரும்ப சீனா ஊக்கமளிக்கிறது என்பதாகக் கூறக் கேட்டு மகிழ்ந்தேன். சொந்த மண்ணுக்குத் திரும்ப சீனா ஊக்கமளிப்பது பாராட்டத்தக்கது.
கலை: அடுத்து ஒலிம்பிக் போட்டி பற்றி பெரிய காலாப்பட்டு பெ. சந்திரசேகரன் எழுதிய கடிதம்.
சீனாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி மிகச் சிறப்பாக இருக்கும் என்பதை நீங்கள் வழங்கும் ஒலிம்பிக் பற்றிய செய்திகளின் மூலம் மிக நன்றாகவே அறிந்துகொள்ள முடிகிறது. ஒலிம்பிக் போட்டிக்கு தேவையான அரங்குகள், வீரர் வீராங்கனைகள் தங்கும்இடங்கள் என பல கட்டுமான பணிகள் சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளதை அறியும்போது ஒரு குட்டி சீனா உருவாகி வருவதுபோல் தோன்றுகிறது. எத்தனை ஒலிம்பிக் போட்டியை அறிந்திருப்போம் ஆனால் சீனாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியைப் போல் இனி ஒரு ஒலிம்பிக் போட்டியை பார்க்க முடியாது என்பது எனது உறுதியான முடிவு என்று குறிப்பிட்டுள்ளார்.
க்ளீட்டஸ்: தொடர்ந்து சீனத் தமிழொலி மலர் 2 இதழ் 14 பற்றி பரசலூர் பி. எஸ். சேகர் எழுதிய கடிதம். சீனத் தமிழொலியை கண்ணுற்றேன். அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 18வது கருத்தரங்கில் இடம் பெற்ற நிழற்படக் காட்சிகள் மற்றும் கருத்துகள், கருத்தரங்கில் கலந்துகொள்ளாதவர்களுக்கு, நிகழ்ச்சியை பற்றி அறியும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது, இதழ அனுப்பியமைக்கு நன்றிகள் என்று எழுதியுள்ளார்.


கலை: அடுத்து சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சி பற்றி விழுப்புரம் எஸ். சேகர் எழுதிய கடிதம். தேவதாரு மரங்கள் வாங் சான் மலையில் காணப்படுவதையும், மலைகளின் அழகு மற்றும் தேவதாரு மரங்களின் சிறப்பு பற்றியும் கூறக் கேட்டேன். இயற்கைக் காட்சி மண்டலத்தின் பாதுகாப்பில் இவை பராமரிக்கப்படுகின்றன என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். உலக இயற்கை மரபுசார் செல்வமாக சேர்த்துக்கொள்ளப்பட்டதையும், இந்த மலையில் 54 தேவதாரு மரங்கள் ஆண்டு முழுதும் இரவு பகல் என தொடர்ந்து பாதுகாக்கப்படுவதையும் அறிந்து வியப்புற்றேன் என்று எழுதியுள்ளார்.
க்ளீட்டஸ்: அடுத்து பெரம்பலூர் கலைவாணன் ராதிகா எழுதிய கடிதம். மார்ச் கிங்கள் 20ம் நாள் இடம்பெற்ற நேயர் நேரம் நிகழ்ச்சியில் அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத் தலைவர், வளவனூர் புதுப்பாளையம் எஸ். செல்வம் அவர்களின் நேர்காணல் நிகழ்ச்சியின் 7வது பகுதியை கேட்டோம். நேயர்கள் என்பவர்கள் வானொலியை தினமும் கேட்க வேண்டும். எந்தவொரு வானொலியும் இலவச அஞ்சல் உரை அனுப்பாமல் சொந்தச் செலவிலேயே கடிதம் அனுப்ப வைக்கும். ஆனால் சீன வானொலி மட்டுமே இலவச அஞ்சல் உறை அனுப்பி கடிதம் எழுத வைக்கிறது என்று குறிப்பிட்டது சாலச் சிறந்தது என்று எழுதியுள்ளார்.
கலை: தொடர்ந்து காத்தான்குடி ஆர். பாத்திமா ரிஸ்னா எழுதிய கடிதம். சீன வானொலியை நான் நீண்ட காலமாக கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்பதில் எனக்கு மனவருத்தமுண்டு. முகவரி சரியாக கிடைத்தபின் இக்கடிதத்தை எழுதுகிறேன். தங்கள் நிகழ்ச்சிகளில் சீனப் பெருஞ்சுவர் பற்றிய தகவல் கேட்டு மகிழ்ந்தேன். இது எங்கள் வரலாற்று பாடத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது. என்னைப் போன்ற மாணவர்கள், சிறுவர், பெரியோர் அனைவருக்கும் உங்கல் நிகழ்ச்சிகள் உதவவேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று எழுதியுள்ளார். இக்கடிதத்தை தனது பிறந்த நாள் அன்று எழுதிய இவர், தன்னை நேயராக இணைத்துக்கொள்ளுமாறு கேட்டுள்ளார்.


அன்பினிய பாத்திமா ரிஸ்னா, உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தாமதமாக கூறினாலும், மனம் கனிந்த வாழ்த்துகளை கூறி மகிழ்கிறோம். உங்களை சீன வானொலிக் குடும்பம் அன்புடன் வரவேற்கிறது.
க்ளீட்டஸ்: தொடர்ந்து விளையாட்டுச் செய்திகள் குறித்து ராசிபுரம் எஸ். சுப்பு மணிகண்டன் எழுதிய கடிதம். நிதியாண்டில் புதுக்கணக்கு ஏப்ரல் திங்கள் முதல் நாளில் துவங்கும். அதைப் போல சீன வானொலி தமிழ்ப்பிரிவின் புதிய அறிவிப்பாளர்கள் ஏப்ரல் முதல் நாளில் தங்கள் பணியை துவங்கியுள்ளனர். விளையாட்டுச் செய்திகளில் கலைமணி தனது பணியை தொடங்கினார். புதிய அறிவிப்பாளர் கலைமணிக்கு என் வாழ்த்துக்கள். அவரது பணி தமிழ்ப்பிரிவுக்கு பெருமை சேர்க்கும் என்று எண்ணுகிறேன். வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.