• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-23 11:32:02    
மெக்கா புனி தயாத்திரை

cri

வணக்கம் நேயர்களே. இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் நேயர்கள் கேட்ட சில வினாகளுக்கு விடை அளிக்கின்றேன்.
முஸ்லிம்கள் சிரமப்பட்டு மெக்கா யாத்திரை சென்று தொழுகை செய்வது ஏன் என்று சில நேயர்கள் கேட்கின்றனர்.


தொழுகை நடத்துவது இஸ்லாமிய மதத்தின் அடிப்படைச் சடங்காகும். ஆரோக்கியமான பொருளாதார வசதி கொண்ட முஸ்லிம்கள் ஆண் என்றாலும் பெண் என்றாலும் அவருடைய வாழ்வில் குறைந்தது ஒரு முறையாவது சௌதிஅரேபியாவில் இஸ்லாமிய புனித தலமான மெக்காவுக்கு யாத்திரை சென்று தொழுகை நடத்த வேண்டும் என்று இஸ்லாமிய மத விதியில் கூறப்பட்டுள்ளது. இஸ்லாமிய மதத்தை தோற்றுவித்த நபிகள் நாயகம் முகமது 630ம் ஆண்டில் மெக்க நகரின் அதிகாரத்தை பெற்ற பின் அவர் தலைமையில் இந்த விதியின் படி முதல் தொழுகை நடந்தது.
வழிபாடு என்பது கூம்பிடுவதாகும். இஸ்லாமிய மத அறிஞர்களின் கூற்றைப் பார்த்தால் தொழுகை நடத்துவது மகத்தான லட்சியத்தை நோக்கி முன்னேறி அல்லா பிறப்பித்த கட்டளையை பின்பற்றி அல்லாவின் மகிழ்ச்சியை கண்டறிவதாகும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட முறையில் அனைவரும் மண்பியிட்டு தொழுகை செய்வதாகும். தொழுகை செய்வதற்கு 2 இடங்கள் உள்ளந. ஒன்று மெக்கா. அதாவது இறைத்தூதர் முகமது பிறந்த ஊர். இன்னொன்று மதினா அதாவது நபிகள் நாயகம் மரணமடைந்த இடம். மெக்கா கோயிலின் கர்பாலா தொழுகை நடத்த உரிய மையமாகும். இது மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் குர்பான் விழா நடைபெறுவது மகத்தான தொழுகையாகத் திகழ்கின்றது. மெக்கா யாத்திரை செய்த முஸ்லிம்கள் ஹாஜி என்று அழைக்கபடுகின்றனர். மற்ற இடத்தில் தொழுகை செய்வர் ஹாஜி என அழைக்கப்பட முடியாது. ஆகவே உலகில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அனைவரும் தன்னால் இயன்றதனைதையும் செய்து குர்பான் விழாவில் சௌதிஅரேபியாவின் மெக்கா சென்று தொவுவதற்கு ஆசைபடுகின்றனர். தொவுகை செய்வோர் மத விதியின் படி "வான் அறையை"சுற்றி வலம் வர வேண்டும்.

 
முதலில் சீனப் பெருநில பகுதிக்கும் தைவானுக்குமிடையிலான உறவில் சுறுசுறுப்பான முன்முயற்சி காணப்பட்டுள்ளது. தைவான் கோமின்தான் கட்சித் தலைவர்களும் சீனப் பெருநில பகுதித் தலைவர்களும் தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளனர். செய்தியில் அடிக்கடி தைவான் நீரிணையின் இரு கரை உறவு சங்கம், தைவான் நீரிணை உறவின் நிதியம் பற்றி கேட்டோம். இது பற்றி விளக்கம் கூறலாமா என்று சில நேயர்கள் கேட்கின்றனர்.
தைவான் நீரிணை நிதியத்தின் முழு பெயர் தைவான் நீரிணை பரிமாற்ற நிதியமாகும். 1990ம் ஆண்டு நவெம்பர் திங்கள் 21ம் நாள் தைபேய் நகரில் இது நிறுவப்பட்டது. 1991ம் ஆண்டு மார்ச் திங்கள் 9ம் நாள் அதிகாரப்பூர்வமாக விவகாரத்தை கையாள துவங்கியது. இது இரு கரை உறவின் வளர்ச்சிக்கும், சீனப் பெருநிலப் பகுதி மீதான கட்டுப்பாட்டு கொள்கையை நடைமுறைபடுத்துவதும் மேற்கொள்ளப்பட்ட ஒரு வரலாற்று முயற்சியாகும். உடன்பிறப்புகளை பார்க்க சீனப் பெருநில பகுதி திரும்புவதற்காக 1987ம் ஆண்டு சேவையிலிருந்து ஓய்வு பெற்ற தைவான் படைவீரர்களுக்கு தைவான் அதிகார வட்டாரம் அனுமதி வழங்கியது. இதற்கிடையில் தொடர்பின்மை, விட்டுகொடுக்காமை, பேச்சுவார்த்தை நடத்தாமை என்ற கொள்கையை தைவான் அதிகார வட்டாரம் படிப்படியாக சரிபடுத்தியது.

அத்துடன் அதிகாரம் படைத்த அரசு சாரா அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது. சட்டபூர்வ பொறுப்பாளர் என்ற முறையில் நிதியத்தை அது நிறுவியது. அதிகார வட்டாரம் மக்கள் நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் நன்கொடை மூலம் நிதி திரட்டப்படும். தைவான் அதிகாரத்தின் சீனப் பெருப் நிலக் கமிட்டியின் அனுமதி பெற்று இரு கரைகளின் பரிமாற்றத்துடன் தொடர்புடைய விவகாரங்களை கையாள்வது அதன் முக்கிய கடமையாகும். தைவான் நீரிணை சங்கத்தின் முதல் தலைவராக குச்சன்பூ இருந்தார்.
"சீனாவுக்குச் சேவை"என்ற நோக்கத்துடன் தைவான் நீரிணை பரிமாற்ற நிதியத்தின் குறிக்கோளாகும். ஆகையில் தொடர்புகளை வளர்த்து இரு கரைகளின் உடன்பிறப்புகளின் நியாயமான உரிமைகளையும் நலனையும் பேணிகாத்து தைவானுடன் விவகாரங்களைப் பற்றி கலந்தாய்வு செய்ய சீன பெருநிலப் பகுதி உடன்பட்டுள்ளது. அத்துடன் 1991ம் ஆண்டு டிசெம்பர் திங்கள் 16ம் நாள் நீரிணை இரு கரை உறவு சங்கம் நிறுவப்பட்டது.
தைவான் நீரிணையின் இருகரை உறவு சங்கத்தின் பணியில் 4 முக்கிய நிகழ்ச்சிகள் உள்ளன. ஒன்று தைவான் தீவிலுள்ள அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பிரமுகர்களுடனும் வெளிநாடுகளில் வாழ்கின்ற அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பிரமுகர்களுடனும் தொடர்பு கொண்டு ஒத்துழைத்து அரசு சாரா ஆற்றலை வெளிக் கொணர்ந்து இரு கரைகளின் மூன்று நேரடிச் சேவைகளையும் விரைவுப்படுத்துவது. இரண்டு தைவான் நீரிணை கடல் பரப்பில் கள்ள கடத்தல் செய்வது கொள்ளையடித்தல் போன்றவற்றை ஒன்றுபட்டு கூட்டாக முறியடிப்பது பற்றி தைவான் நீரிணை நிதியத்துடன் விவாதிப்பது, மூன்று சங்கம் மூன்றாவது தரப்பின் கோரிக்கையை ஏற்று தைவான் நீரிணை கடல் பரப்பில் மீன் பிடிப்பு தொடர்பான சர்ச்சை, எதிரெதிர் தரப்பின் கட்டுப்பாட்டு இடங்களில் வசிப்பது மற்றும் இதர தொடர்புடைய பிரச்சினைகளை கையாள்வது குறித்து தொடர்புடைய தரப்புடன் இணைந்து தைவான் நிறுவனங்கள் அல்லது பிரமுகர்களுடன் கலந்தாலோசித்து தீர்வு காண்பது. நான்கு தாய்நாட்டில் முதலீடு, வர்த்தகம் மற்ற பரிமாற்ற அலுவல் பற்றிய கொள்கை, சட்ட விதிகள் பற்றி தைவான் தீவிலுள்ள நிறுவனங்களுக்கும் பல்வேறு வட்டார பிரமுகர்களுக்கும் தகவல் வழங்கி சேவை புரிவது.

அதேவேளையில் நீரிணை இருகரை உறவு சங்கம் தைவானில் பண்பாடு, கல்வியியல், விளையாட்டு, அறிவியல் தொழில் நுட்பப் பரிமாற்றம் முதலிய தகவல்களை சீனப் பெருநிலப் பகுதிக்கு வழங்குகின்றது. தைவான் நீரிணையின் இருகரை உறவு சங்கத்தின் தலைவர் வுவாங் தோ ஹென்.