கடல் கரையில் அன்பு எனும் குழந்தைகள் காப்பகம் இங்கே அமைந்துள்ளது. நாற்பத்திரண்டு வயதான பான் து அம்மையார், சிறையிலுள்ள குற்றவாளிகளின் குழந்தைகளுக்காக இந்த காப்பகத்தை நிறுவியுள்ளார். இன்று பாங் து அம்மையார் மற்றும் அவரது குழந்தைகள் காப்பகத்தை அறிமுகப்படுத்துகிறோம்.
சூவான் தைய் கூ கிராமத்தில் உள்ள ஒரு இரண்டு மாடி கட்டிட வீட்டில் எமது செய்தியாளர், கடல் கரையில் அன்பு எனும் குழந்தைகள் காப்பகத்தின் தலைவர் பாங் துவை சந்தித்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன், சீனாவின் ஹாங்காங்கைச் சேர்ந்த தொண்டர்கள், இளம் குற்றவாளிகளுக்கு உதவி அளிப்பது பற்றிய செய்திப்படத்தை பான் து பார்த்தார். வீட்டுக்கு அருகில் இத்தகைய இளைஞர்களும் குழந்தைகளும் இருக்கின்றனரா என்று அவர் அறிய விரும்பினார். இதற்காக, அவர் லியௌனின் மாநிலத்தின் சில சிறைகளுக்குச் சென்று ஒரு சிறையின் தலைவர் அவரிடம் ஒரு நிகழ்ச்சியை விளக்கிக் கூறினார். இது அவரின் மனதில் ஆழமாக பதிவானது.
ஒரு தம்பதி தாம் பணிபுரிந்த இடத்தில் சில பொருட்களை திருடியுள்ளனர். அவர்கள் கைதுசெய்யப்பட்ட பின் அடுத்த நாள், சிறை வாயிலில் ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் அமர்ந்தவதை கண்டறிந்தோம். தொடர்புடைய வாரியம் இதற்கு உதவி அளிக்க வேண்டி ஏற்பட்டது. ஆகவே கல்வி பிரிவின் பணியாளர்கள் மாறிமாறி இவ்விரு குழந்தைகளை கவனிப்பார்கள் என்றார் அவர்.
இத்தகைய குழந்தைகள், மற்ற குழந்தைகளை போல, மகழ்ச்சியான குழந்தைகாலத்தை அனுபவிக்க வேண்டும் என்று பாங் து கருதுகிறார். அவர்களுக்கு ஒரு அன்புள்ள குடும்பம் தேவை. எனவே, ஒரு குழந்தைகள் காப்பகத்தை நிறுவி, குற்றவாளிகளின் குழந்தைகளை கவனிக்கலாம்எனும் எண்ணம் அவரது மனதில் தோன்றியது. 2003ம் ஆண்டு இலையுதிர்காலத்தில், பாங் து தனது பணியிலிருந்து விலகி, இரண்டு உற்ற நண்பர்களுடன் சேர்ந்து மொத்தம் 50 ஆயிரம் யுவான் ஒதுக்கி, தா லியே நகரின் lvshun கோ பிரதேசத்தில் உள்ள சூவான் தைய் கோ கிராமத்தில் மாடிகட்டிட வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்தார்.
|