• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-24 09:30:28    
கல்வியில் கவனம் செலுத்தும் குர்க்ஜி இனக்குடும்பம்

cri
குர்க்ஜி இனம், சீனாவின் 55 சிறுபான்மை தேசிய இனங்களில் குறைவான மக்கள் தொகையுடைய இனங்களில் ஒன்றாகும். வட மேற்கு சீனாவின் சிங்கியாங் உய்குர் தன்னாட்சிப் பிரதேசத்தின் கிஜிலேசு குர்க்ஜி தன்னாட்சி சோவில் அவர்கள் முக்கியமாக பரவி வாழ்கின்றனர். நவ சீனா நிறுவப்படுவதற்கு முன், அவர்கள் நாடோடி வாழ்க்கை முறையில் வாழ்ந்தனர். இதனால், இவ்வின மக்களில் 80 முதல் 90 விழுக்காட்டினர்கள் எழுத படிக்கத் தெரியதவர்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலான வளர்ச்சி மூலம், இப்போது, குர்க்ஜி இனம், நவீன தேசிய இனங்களின் வரிசையில் நின்றுள்ளது. கல்வி, இதில் இன்றியமையாத பங்காற்றியுள்ளது.


இதோ, எமது செய்தியாளர் சிங்கியாங்கின் குஜிலேசு குர்க்ஜி தன்னாட்சி சோவின் அடுஷ் நகரில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தினரை பேட்டி கண்டுள்ளார். இதன் மூலம், குர்க்ஜி இனத்தவர்கள் கல்வியில் எவ்வளவு கவனம் செலுத்துகின்றனர் என்பதை செய்தியாளர் உணர்ந்து கொண்டுள்ளார். இக்குடும்பத்தின் தலைவர் அப்டு. கார்டிர் தம்பதிகளுக்கு 4 பிள்ளைகள் இருக்கின்றனர். மூத்த மகள் அரிமா அண்மையில், சிங்கியாங் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழித்துறையின் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்துள்ளார். இரண்டாவது மகள் சாவியா, வூ ஹங் வாங் சுங் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தின் 4வது ஆண்டு மாணவர். பட்டதாரியாக இருக்கின்றார். மூன்றாவது மகள் குரிமிர் சிங்கியாங் பல்கலைக்கழகத்தின் தகவல் பொறியியல் துறையில் பயில்கின்றார். இளம் மகன் றேஸ்பெக் சிங்கியாங் ஷஹங்ஜி பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்லூரியின் முதல் ஆண்டு மாணவராகவிருக்கின்றார். ஒரு சாதாரண குர்க்ஜி குடும்பத்தில் 4 பல்கலைக்கழக மாணவர்கள் இருக்கின்றனர் என்பதற்குக் காரணம் என்ன? குடும்பத் தலைவர் அப்டு. கார்டிர் செய்தியாளரிடம் தம் கருத்தினைத் தெரிவிக்கின்றார்.  "குர்க்ஜி இனம், நாடோடி வாழ்க்கை நடத்தும் தேசிய இனம். முன்பு, இயற்கை நிலைமை மோசமாயிருப்பதாலும், வருமானம் குறைவாயிருப்பதாலும், பள்ளிக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தவர் மிகக் குறைவு. எனது பாட்டனார் படிக்கவில்லை. ஆனால், அவர் பலவித இன்னல்களைச் சமாளித்து, எனது தந்தையை பள்ளிக்கு அனுப்பி வைத்தார். அப்போதைய குர்க்ஜி சோவில் நெடுஞ்சாலை இல்லை. இடைநிலைப்பள்ளிக்குப் போக, எனது தந்தை, 88 முதல் 90 கிலோமீட்டர் தூரத்தை நடந்து கடக்க வேண்டும். எனவே, பள்ளியில் படிப்பது, எங்களைப் பொறுத்த வரை மிகவும் முக்கியமானது என்பதை சிறு வயதிலிருந்தே உணர்ந்து கொண்டுள்ளேன்" என்றார்.


எனவே, அப்டுவின் தந்தையும் கனத்த இன்னல்களைச் சமாளித்து அப்டு ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்து முடிப்பதற்கு ஆதரவளித்தார். ஒரு தேசிய இனத்தை அல்லது ஒரு நாட்டைப் பொறுத்த வரை, கல்வித்துறை மிகவும் முக்கியமானது. கல்வித்துறை வளராமல், வறுமையிலிருந்து மக்கள் விடுபட முடியாது என்று அப்டு. கார்டிர் கருதுகின்றார். இப்போது குர்க்ஜி இனத்தவர்கள் நாளுக்கு நாள் சீரான வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். எனவே, தமது குழந்தைகள் உயரிய கல்வியைக் கற்று, குர்க்ஜி இனத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு சேவை புரிய செய்திட வேண்டும் என்று அப்டு. கார்டிர் உறுதிபூண்டுள்ளார். ஒரு குடும்பத்தில் 4 பல்கலைக்கழக மாணவர்கள் இருப்பது, மகிழ்ச்சி தரும் விஷயம். ஆனால், குழந்தைகளுக்குத் தேவையான கல்வி கட்டணம் என்பது வருமானம் அதிகம் பெறாத அப்டு தம்பதிகளுக்கு ஒரு கனத்த சுமையாகும். குடும்பக் கல்வி நிதியத்தை நிறுவுவது, அவர்களின் ஒரு புத்தாக்கம் என்று கூறலாம். அவர் கூறியதாவது:  "1982ம் ஆண்டில், எனது மூத்த மகள் பிறந்தார். அப்போது எனது சம்பளம் 58 யுவான் மட்டுமே. திங்கள்தோறும் 30 யுவானை வங்கியில் சேமித்தோம். வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும் இந்த சேமிப்பை மட்டும் உறுதி செய்தோம். இப்போது என்னுடைய திங்கள் வருமானம், 2400 யுவான். எனவே, 150 யுவான் வங்கியில் சேமிக்கின்றோம்" என்றார். தாயாரும், இது பற்றி கூறியதாவது:


 "4 குழந்தைகளும் பள்ளியில் இருக்கும் போது, மிக இன்னலான நேரத்தில் வங்கியிலிருந்து கடன் வாங்கினோம். இருப்பினும், எப்படியாயினும் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று மன உறுதிபூண்டுள்ளோம். குர்க்ஜி இனத்தின் பெண் குழந்தைகள் விட்டு வேலை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக சித்திரத் தையல் முதலியவை. ஆனால் எமது மகள்களை இவற்றை செய்ய விடவில்லை. அவர்கள் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய பின், உணர்வுப்பூர்வமாக படிப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன்" என்றார், அவர். குடும்ப பாரம்பரியம், பிள்ளைகளின் நடையில் வெளிக்கொணரப்பட்டது. மூத்த மகள் அரிமா திருமணம் செய்த பின் தம் குழந்தைக்கு கல்வி வங்கி சேமிப்பு செய்துள்ளார். திங்கள்தோறும் 30 யுவான் சேமிப்புத்தொகை. இந்த 4 குழந்கைகளும் கற்றுக்கொள்ளும் சிறப்புப் பாடங்கள், சமூகத்துக்கு மிகவும் தேவையானவை. அப்டு செய்தியாளரிடம் பேசுகையில், குர்க்ஜி இனமும் முழு சீனாவும் வளர்ச்சியடைவதற்கு தேவையான சிறப்புப்பாடங்களை அவர்கள் தெரிவு செய்துள்ளனர். இதுவும் குழந்தைகள் மீதான தாய்தந்தையின் பாசம் ஆகும் என்றார். அப்டு, பிள்ளைகளுக்கு மேலும் உயர்ந்த கோரிக்கையை முன்வைத்தார். அவர் கூறியதாவது:  "இப்போது மூத்த மகள் ஆராய்ச்சி மாணவர். இதர பிள்ளைகளும் ஆராய்ச்சி மாணவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் பட்டதாரியாகிய பின், குர்க்ஜி சோவுக்குத் திரும்ப வேண்டும். எங்கள் குர்க்ஜி சோவில் 5 லட்சத்து 80 ஆயிரம் மக்களில், ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர், குர்க்ஜி இனத்தவர்களாவர். குர்க்ஜி இனக் கல்வியைப் பொறுத்த மட்டில், ஒவ்வொரு திறமைசாலியும் புது நம்பிக்கையை தருவார். எனது குடும்பத்தில் 4 திறமைசாலிகள் உள்ளனர். எங்கள் குர்க்ஜி இனம் மற்றும் குர்க்ஜி சோவின் வளர்ச்சிக்கும், குர்க்ஜி சோவின் பல்வேறு தேசிய இனத்தின் வளர்ச்சிக்கும் அவர் பங்காற்றுவார்கள்" என்றார், அவர். கல்வியில் கவனம் செலுத்தி வளர்ப்பதன் காரணமாக குர்க்ஜி இனம், நவீனமயமாக்க வளர்ச்சி பாதையில் நடைபொட்டுள்ளது. குர்க்ஜி சோவின் தலைவர் அக்பர் எமது செய்தியாளரிடம் கூறியதாவது:


"குறுகிய 50 ஆண்டுகளில் தேசிய இனத்தின் தலைவிதி மாறியுள்ளது. குர்க்ஜி இனம், எழுத படிக்கத் தெரியாத இனம் என்ற நிலையிலிருந்து விடுபட்டு, நவீனமயமாக்க தேசிய இனமாக மாறியுள்ளது. கல்வியில் கவனம் செலுத்தியதன் விளைவு, இது. கல்வி, எங்கள் மனதிலுள்ள ஆதாரம்" என்றார்.