• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-15 11:20:49    
சீனக் கதை ஒன்று

cri

கன்பூசியஸ் ஒரு தடவை தமது சீடர்களுடன் சென்று கொண்டிருந்த போது, அவருடைய குதிரை சாலையில் இருந்து விலகி, பக்கத்தில் இருந்த வயலில் விளைந்த பயிரை மேய்ந்து விட்டது. அந்த வயலின் விவசாயி குதிரையைப் பிடித்து வைத்துக் கொண்டு தர மறுத்து விட்டான்.

"என் பயிருக்கு நஷ்ட ஈடு கொடுத்துட்டு குதிரையை மீட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டான். உடனே கன்பூசியஸின் சீடர்களில் ஒருவனான ஸி கோங், "குருவே, எனக்கு அனுமதி கொடுங்கள். நான் போய் பேசி குதிரையை மீட்பேன்" என்றான்.

அவன் பேச்சுக் கலைஞன். "பெரியோர்களே! தாய்மார்களே! எனதருமை உடன்பிறப்புக்களே!" என்று பேசத் தொடங்கினஆல் மக்கள் கூட்டம் மெய்மறந்து கேட்கும். மகுடி இசைக்கு கட்டுண்டு கிடக்கும் நாகம் போல் மயங்கிக் கிடக்கும்.
கன்பூசியஸும் "சரி, போ, உன் திறமையைக்காட்டு" என்றார்.

அவன் விவசாயியிடம் போய் கன்பூசியஸ் பற்றியும், அவருடைய குதிரையின் அருமை பெருமைகள் பற்றியும் சாங்கோபாங்கமாகப் பேசத் தொடங்கினான். உடனே எரிச்சலடைந்த விவசாயி,
"சரிதான் போய்யா உன் சோலியைப் பார்த்துக் கிட்டு, பெரிசா பேச வந்துட்டான்" என்று விரட்டிவிட்டான்.

அப்போது கன்பூசியஸ் குழுவுடன் பாதிவழியில் சேர்ந்து கொண்டு முரட்டு இளைஞன் ஒருவன், "ஐயா, நான் போய் குதிரையை மீட்கட்டுமா?" என்று அனுமதி கோரிச் சென்றான்.

அவன் விவசாயி முன்னால் போய் நின்று கொண்டு,
"ஐயா, நாங்க கிழக்கு தேசத்துல இருந்து வர்றோம். அங்க உங்களுக்கு வயல் இலயே. இங்கே மேற்கு தேசத்துல எங்களுக்கு வயல் இல்லே. அப்புறம் எங்க குதிரைக்கு பசி எடுத்தா அது பாவம் என்ன செய்யும்? ஏதோ தெரியாம உங்க வயலிலே மேஞ்சிருச்சி" என்றான்.

இதைக் கேட்ட விவசாயி மகிழ்ச்சியடைந்து,
"தம்பி, நீங்க பேசுனது வெளிப்படையான பேச்சு. காரியம் சாதிக்கணும்னா இப்படித்தான் பேசணும். அந்தப் பயலும் இருக்கானே" என்று கூறியபடியே குதிரையை அவிழ்த்து விட்டான்.