• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-14 09:00:25    
சீனப் பட்டுப்பாதை

cri

கி. மு. 140-87 வரையிலான Han Wu Di என்ற பேரரசர், மேற்குலகில் தூதாண்மை உறவை நிறுவ இந்த Zhang Qianயே அனுப்பி வைத்தார்.


இரு முறை இத்தகைய பயணத்தை மேற்கொண்ட Zhang Qian-தொலை மேற்கு வரையிலான பிரதேசங்களுடன் வர்த்தக உறவுகளை நிறுவக்கூடிய ஒரு பாதையை கண்டுபிடிந்தார். அதுவே இந்த பட்டுப்பாதை. வரலாறு முழுவதும், இந்த பாதை பல்வேறு மாற்றங்கள், அதன் தோற்றங்களால், அமைவால் ஏற்றது. புவியியல், அரசியல் மற்றும் சமயங்களின் பரிணாம வளர்ச்சிக்கேற்ப இந்தப் பட்டுப்பாதையின் தன்மையும், உருவமும் மாறிக்கொண்டே இருந்தன. தற்போதுள்ள பட்டுப்பாதை Han வம்சக் காலத்தில் அதாவது கி. மு. 206-கி. பி. 260க்குப்பட்ட காலத்தில் தான் உருவெடுத்தது, தோற்றம் பெற்றது. தற்போது Xian என்றறியப்படும் அப்போதைய Han பேரரசின் மேற்கு தலை நகரான Chang An கிழக்கு தலைநகரான Luo Yang இவற்றில்தான் பட்டுப்பாதையின் துவக்கப்புள்ளி அமைந்தது. தற்போதைய Gan Su மாநிலத்தின் மேற்குத் தலைநகரான Lan Zhou அக்காலத்தில் Jin Cheng என்று அறியப்பட்டது. இந்த Jin Cheng, Wu Wei, Zhang Ye, Jiuquan மற்றும் Dun Huang ஆகிய பண்டை நகரங்களின் வழியாக, மேற்கு பகுதியில் நீண்டு, பண்டைய Lou Lanஐ அடைந்தது. பின் மேலும் மேற்கு நோக்கி நீண்டு, இன்றைய சின்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் வழியாக, ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் பண்டைய ரோமப் பேரரசின் கிழக்கு பகுதி வரை நீடித்தது இந்த பட்டுப்பாதை. இது நிலத்தின் வழியாக அமைந்தது. நீரினூடாகவும் பட்டுப்பாதை இருந்ததை அறிவீர்களா?


புவியின் நான்கு மூலைகளையும் கடற்பரப்பே சூழ்ந்திருக்கிறது. கப்பல் கட்டுமானம், கடற்பயணத் தொழில் நுட்பம் இவற்றின் துணையால் மனிதன் கடற்பயணித்தினூடாகவும் வர்த்தகம் செய்யத் துவங்கினான். "திரை கடலோடியும் திரவியம் தேடு" என்று தமிழில் சொல்வார்கள். அவ்வாறே மனிதன் நிலம், நீர் இரண்டிலும் வர்த்தக வழிகளைக் கண்டறிந்து, பொருள் சேர்த்தனர். பண்பாட்டு பரிமாற்றமும் இதனூடாக ஏற்பட்டது.
Han வம்சக் காலத்தில் பட்டுப்பாதையின் அதாவது நிலத்தின் ஊடாக கச்சா பட்டும், பதப்படுத்தப்பட்ட பட்டும் கொண்டு செல்லப்பட்டன. இவை சீனாவின் வூன் கடலோரப் பகுதி மற்றும் Wa, Wei, Qi, La ஆகியவற்றின் கடலோரப்பகுதிகளிலிருந்து உற்பத்தி யானவை. இப்பகுதிகள் பட்டு உற்பத்திக்கு மட்டுமல்லாது, கப்பல் கட்டுமானத்திற்கும் புகழ் பெற்றவை. ஆக இப்பகுதிகள் பட்டு உற்பத்தியோடு, அதை கொண்டு செல்ல போக்குவரத்து சாதனமாக கப்பலையும் தயாரித்து கொடுத்தன.


இந்த ஒரு ஒருங்கிணைந்த மேம்பாடுதான் Han வம்சக்காலத்தில் சமூக மற்றும் பொருள் சார் வசதிகளை அளித்தது. கி. மு. 140 முதல் 870 ஆண்டு வரையிலான பேரரசர் Han Wu Di அரம்பித்து வைத்த கடற்பயண நெறி இந்தியா வழியாக ரோம பேரரசுக்குச் செல்ல உதவியது. ஆக இதுவே கடற்பகுதி பட்டுப்பாதையை அல்லது கடல் வழி பட்டுப்பாதையை உருவாக்க அடிப்படையிட்டது என்று கூறலாம். Tang வம்சக்காலத்தில் அதாவது கி. பி. 618-907 வரையான காலத்தில், Guang Zhouவிலிருந்து புறப்பட்ட சீனக் கப்பல்கள் தென் சீனக் கடலினூடாக கடல் வழி பட்டுப்பாதையின் வழித்தடங்களை உருவாக்கின. பட்டை கொண்டு செல்ல மட்டுமல்லாது. பொருள்சார் மற்றும் பண்பாட்டு பரிமாற்றங்களுக்கான தூண்டுதலாகவும் இந்தப் பட்டுப்பாதை அமைந்தது.