• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-14 10:30:51    
நேயர்களின் கருத்துக்கள்

cri

க்ளீட்டஸ்: இலங்கை காத்தான்குடியைச் சேர்ந்த ஆர். ஹாவ்ளா எழுதிய கடிதம். சீன வானொலியின் தமிழ்ப்பிரிவிலிருந்து வந்த கடிதத்தை பிரித்ததும் நானும் எனது குடும்பத்தவரும் மகிழ்ச்சியடைந்தோம். என்னையும் நேயராக இணைத்துக் கொண்டமைக்கு நன்றி. இதில் நான் பெருமை அடைகிறேன் என்று எழுதியுள்ளதோடு, இரவு பகல் கதிருக்கில்லை, வரவும் செலவும் காற்றுக்கில்லை துறவும் துய்ப்பும் மரங்களுக்கில்லை, இறப்பும் பிறப்பும் கவிஞர்க்கில்லை. சுவையெனப்படுவது நாவரை தவறெனப்படுவது தெரிகின்ற வரை என்று ஒரு கவிதைச் சரத்தையும் இணைத்து அனுப்பியுள்ளார்.


கலை: நானும் வாசித்தேன். நல்ல கவிதை, இளம் பருவத்தில் இலக்கிய ஆர்வம் என்பது நலமான செய்தியே. அடுத்து தார்வழி பி. லட்சுமி மக்கள் சீனம் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். நடுத்தர மற்றும் சிறிய ரக வீடுகளை கட்ட சீன அரசு ஊக்குவிப்பது குறித்து மக்கள் சீனம் நிகழ்ச்சியில் கூறக் கேட்டேன். பெருகி வரும் மக்கள் தொகைக்கு தகுந்தார் போல், இத்திட்டம் பலன் அளிக்கும் என்பது உண்மை என்று குறிப்பிட்டுள்ளார்.
க்ளீட்டஸ்: அடுத்து வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சி குறித்து புதுகை ஜி. வரதராஜன் எழுதிய கடிதம். கலைமகள் தொகுத்து வழங்கிய சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சியில் விண்வெளி ஆய்வுப்பணி, செயற்கைக் கோள்களை சீனா செலுத்திய விபரங்கள், தென் துர்வ ஆய்வுப்பனிக்காக சீனா அமைத்த நிலையம் ஆகியவற்றைக் கேட்டு மகிந்தேன். அன்றைய அறிவியலர்களின் அயரா உழைப்பும், விடா முயற்சியும் இன்று நல்ல பயன்களை இன்றைய தலைமுறையினருக்கு அளித்து வழிகாட்டியுள்ளது. அவர்களுக்கு தகுந்த மரியாதை செலுத்த வேண்டியது கடமையாகும் என்று எழுதியுள்ளார்.
கலை: அடுத்து மாவெளிப்பாளையம் எம் சிவக்குமார் எழுதிய கடிதம். சீனாவில் விவசாயத் தொழிலாளர்களுக்கு உதவும் சட்டங்கள் உள்ளன. சீன விவசாயத் தொழிலாளர்கள் பல கோடி பேர் உள்ளனர் என்று அறியப்படுகிறது. இலவச சட்ட உதவிகள்இந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு பயனுள்ளதாக அமைகின்றன. அவர்கள் வாழ்க்கைத்தரம் உயரவும், அவர்கள் செம்மையடையவும் சட்டரீதியிலான உத்திரவாதம் தரப்பட்டுள்ளது. இது வரவேற்கப்படவேண்டியதாகும் என்று எழுதியுள்ளார்.
க்ளீட்டஸ்: அடுத்து காத்தான்குடி ஏ. எம். ஃபயாஸ் எழுதிய கடிதம். பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து எம்மை வந்தடையும் சீன வானொலிச் சேவையின் நிகழ்ச்சிகள் அனைத்து சிறப்பாக உள்ளன. கூறப்படும் அனைத்தும் உண்மையானவையாக நம்பகமான தகவல்களாக உள்ளன. எமக்கிடையில் இடம்பெறும் தொடர்பு என்றென்றும் நிலையானதாக, உறுதியானதாக இருக்கவேண்டும் என்பது என் லட்சியம் என்று கூறியுள்ளார்.


கலை: அன்பர் ஃபயாஸ் அவர்களே, தங்களின் அன்புக்கும் ஈடுபாட்டுக்கும் நன்றிகள் பல. தொடர்ந்து எமது நிகழ்ச்சிகளை கேட்டு கருத்துக்களை எழுதி அனுப்புங்கள்.
அடுத்து மக்கள் சீனம் நிகழ்ச்சி பற்றி சானார்பாளையாம் இரா சின்னப்பன் எழுதிய கடிதம். உண்மையான தோல் என்ற ஆங்கில அடையாளத்துடன் தரமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பதை நிகழ்ச்சியின் மூலம் அறிந்தேன். சீனத்துணிகளின் ஏற்றுமதித்தரம் பற்றி அறிய ஆவலாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
க்ளீட்டஸ்: அடுத்து மலர்ச்சோலை நிகழ்ச்சி குறித்து பாத்திகாரன்பட்டி கார்த்திகேயன் எழுதிய கடிதம். மலர்சோலையில் பூத்த மலர்களை பறித்து எஸ். சுந்தரன் அவர்கள் அளித்த மலர்ச்செண்டு மணம் வீசியது. பாராட்டுக்கள். 102 வயதில் நீண்டகால கடன் வழங்கப்பட்ட நபரையும், 25 ஆண்டுகளில் அவர் இதை திரும்பச் செலுத்த வேண்டும் என்பதையும் கேட்டேன். 102 வயதில் அவர் மீது நம்பிக்கை வைத்து கடன் வழங்கிய வங்கியை பாராட்டவேண்டும் என்று எழுதியுள்ளார். முதியோர் என்றால் ஒரு வித தாழ்வான எண்ணம் நிறைய பேர்களிடம் உள்ளது. காலம் கடந்து வாழ்வில் தேய்ந்து ஓடானவர்கள் சாதனை படைத்தவர்கள். தங்கள் திறமைதனை குடத்தில் இட்ட விளக்கை போல மூடி வைத்துள்ள அவர்கள் பாராட்டத்தக்கவர்கள்.
கலை: அடுத்து சீனச் சமூக வாழ்வு நிகழ்ச்சி பற்றி மதுரை என். ராமசாமியின் கருத்து. 130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் முதியோரின் எண்ணிக்கை 14 கோடியே, 46 லட்சமாகும். முதியோர்களின் உடல் மற்றும் உள நலத்தை பேணிக்காப்பது சீன அரசுக்கு பெரும் பிரச்சனையாகவே உள்ளது என்பதை அறிய முடிகிறது. குடும்பப் பிரச்சனை காரணமாக முதியோர்கள் சிலர் தனிமையில் தள்ளப்படுகின்றனர். முதியோர் இல்லத்தை நாடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் முதியோர்கலுக்கானா இல்லம் 40 ஆயிரம் உள்ளன. இது போன்ற பிரச்சனை இந்தியாவிலும் உள்ளது என்று எழுதியுள்ளார்.
க்ளீட்டஸ்: அடுத்து கரிவலம் வந்த நல்லூரைச் சேர்ந்த நேயர் ஜி. கிருஷ்ணமூர்த்தி எழுதிய கடிதம். சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் வாழைப்பழ வறுவல், சீன வகை பிரியாணி ஆகியவற்றின் செய்முறைகள் நன்றாக கூறப்பட்டன. விவசாயத் தொழிலாளர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி என்பது பற்றிய செய்தித்தொகுப்பில் சீன விவசாயிகள் மற்றும் சீன விவசாயிகளுக்கான தொழில்நுட்பப்பயிற்சிகள் ஆகியவற்றை பற்றி விரிவாக அறிந்துகொண்டேன் என்று எழுதியுள்ளார்.


கலை: அடுத்து தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி பற்றி காங்கேயம் நந்தகுமார் எழுதிய கடிதம். தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியில் பெரம்பலூர் சோழன் சீன வானொலி நேயர் மன்ற உறுப்பினர் ஆசிரியர் செல்லதுரை வழங்கிய கவிதை கேட்டேன். மிக நன்றாக இருந்தது. மார்ச் 8ம் நாள் உலக மகளிர் தினமாக கொண்டாடப்படுவதற்கான காரணம் உணர்ந்தேன். அற்புதமான நிகழ்ச்சி. படைத்து வழங்கிய சோழன் சீன வானொலி நேயர்மன்றத்தினருக்கும், வழங்கிய சீன வானொலிக்கும் நன்றிகள் என்று எழுதியுள்ளார்.