• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-16 18:58:59    
உலென்முச்சி கலைக்குழு

cri

சொந்தமாக இயற்றி தயாரித்த கலை நிகழ்ச்சிகளைக் கொண்டு, இக்கலைக்குழு, மிகப் பரந்த மேய்ச்சல் பகுதிகளில் ஆயர்களுக்கு அரங்கேற்றியுள்ளது. இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், ஆயர்களை மகிழ்விக்கின்றன. துவக்கத்தில், சுநிட் உலென்முச்சி கலைக் குழுவில் 11 உறுப்பினர்கள் மட்டும் இருந்தனர். ஐந்து இசைக் கருவிகள் இருந்தன. அப்போதைய உறுப்பினர்கள் பல நிகழ்ச்சிகளை அரங்கேற்ற முடியும். அவர்கள் அரங்கேற்றும் நிகழ்ச்சிகள் சிறியவை. மேய்ச்சல் பகுதிகளில் நடமாடும் முறையில் அரங்கேற்றுவதற்கு அவை ஏற்புடையவை.

முதலாவது கலைக் குழுவின் தோற்றம், புல்வெளியில் ஆயர்களின் பண்பாட்டு வாழ்க்கையை செழிப்பாக்கியது. கடந்த நூற்றாண்டின் 50ம் ஆண்டுகளின் இறுதி முதல், உள்மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேச அரசின் தூண்டுதலில், சுநிட் உலென்முச்சி கலைக்குழு, விரைவில் உள்மங்கோலிய விசாலமான புல்வெளியில் வளர்ந்து அரங்கேற்றி வருகின்றது. 60 ஆண்டுகளில் உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உலென்முச்சி கலைக்குழுக்கள் நிறுவப்பட்டன. கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவது தவிர, ஆயர்களுக்கு நூல்களை படிக்க வழங்குவது, அறிவியல் தொழில் நுட்ப அறிவைப் பரவலாக்குவது, வேளாண் மற்றும் மேய்ச்சல் இயந்திரங்களைப் பழுதுபார்ப்பது ஆகியவற்றிலும் இக்குழு ஈடுபடுகின்றது. ஏன், ஆயர்களுக்கு சிகை அலங்காரம் கூடச்செய்தது. ஆயர் அராதங் கூறியதாவது:

உலென்முச்சி இங்கு அரங்கேற்றும் போதெல்லாம், ஆயர்கள் மிகவும் மகிழ்ந்தனர். கலை நிகழ்ச்சிகள் முடிந்தாலும், ஆயர்கள் இக்குழுவை விட்டுப் போக விரும்பவில்லை" என்றார்.

விசாலமான உள்மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தில், முதுகெலும்பு தேசிய இனமான மங்கோலிய இனம் தவிர, டவோர், எர்வென்க், எலுங்சுன், ஹுவை, மஞ்சு முதலிய சிறுபான்மைத் தேசிய இனங்களும் கூடிவாழ்கின்றன. உலென்முச்சி கலைக்குழு, கலை நிகழ்ச்சிகளை இயற்றி அரங்கேற்றும் போது, சிறுபான்மைத் தேசிய இனங்களின் தனித்தன்மையையும் விருப்பத்தையும் கருத்தில் கொண்டு வேறுபட்ட பாணியுடைய கலை நிகழ்ச்சிகளை இயற்றியுள்ளது. உலென்முச்சி கலைக்குழுவினால், உள்மங்கோலியாவின் தேசிய இனப் பண்பாட்டுக் கலை ஆக்கப்பூர்வமாக வளர்ச்சியடைந்துள்ளது. சீனாவிலும் இது செல்வாக்கு பெற்றுள்ளது.

கடந்த நூற்றாண்டின் 60ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில், உலென்முச்சி கலை குழுவைச் சேர்ந்த, 12 பேர் இடம்பெறும் பிரதிநிதிக்குழு பெய்சிங்கில் அரங்கேற்றியது. மேய்ச்சல் பிரதேசத்திலிருந்து வந்த, தனிச்சிறப்பியல்புடைய உள்மங்கோலியத் தேசிய இன ஆடல் பாடல் குழுவின் கலை நிகழ்ச்சிகள், பெய்சிங்கில் பரபரப்பை ஏற்படுத்தின. அதன் மூன்று பிரிவுகள் சீனாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றின. அவற்றின் தேசிய இன ஆடல் பாடல் கலையும் வளைந்து கொடுக்கும் அரங்கேற்ற வடிமுருக வெவ்வேறான இடங்களின் ரசிகர்களை மனருமுகச் செய்தன.

50 ஆண்டுகள் உருண்டோடின. உள்மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தில் தலைகீழான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆயர்க் குடும்பங்களில் வானொலி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் இருக்கின்றன. ஆயர்களின் பண்பாட்டு வாழ்க்கை மேலும் வளமடைந்துள்ளது. இருப்பினும், உலென்முச்சி கலைக்குழு மீதான மக்களின் வரவேற்பும் விருப்பமும் இன்னமும் குறையவில்லை.

அரங்கில் 40 ஆண்டுகாலமாக நடித்துள்ள முதிய கலைஞர் Ji Ri Mu Tu கூறியதாவது:

கடந்த 40 ஆண்டுகளில், நாங்கள் முழுமனதுடன் ஆயர்களுக்கு ஐயாயிரம் முறை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினோம். அன்றி, உலென்முச்சி நடிகர் நடிகைகளுடன் சேர்ந்து, நாடு முழுவதிலும் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினோம். ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் 20க்கும் அதிகமான நாடுகளுக்கும் சென்றோம். புல்வெளி மணம் கமழும் தேசிய இன ஆடல்பாடல்கள் அங்குள்ள ரசிகர்களைக் கவர்ந்தன என்றார், அவர்.

நீண்டகால கலை நடைமுறையில் உள்மங்கோலியாவின் பல்வேறு நிலை உலென்முச்சி கலைக்குழுக்கள், தேசிய இனத் தனித்தன்மை வாய்ந்த மற்றும் உள்ளூர் தனிச்சிறப்பியல்புடைய இசை, நடன நிகழ்ச்சிகளை இயற்றியுள்ளன. அன்றி, பல்வேறு தேசிய இனத்தவர்கள் விரும்பும் பாடகர் பாடகிகள், நாட்டியக் கலைஞர்கள் மற்றும் இசை படைப்பாளர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.