• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-16 19:01:59    
உள்மங்கோலியாவின் உலென்முச்சி

cri

உலென்முச்சி என்பது, வடக்கு சீன உள்மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுநிட் புல்வெளியில் இயங்கும் கலைக் குழுவாகும். அங்குள்ள ஆயர்கள் இக்குழுவுக்கு சூட்டிய இப்பெயர் சீன மொழியில் "சிறப்பு நிறத்துளிர்" என பொருட்படுகின்றது.

கடந்த நூற்றாண்டின் 50ம் ஆண்டுகளில் இக்கலைக்குழுவில் பணிபுரிந்த முதியவர் படூசுஹு, இக்குழுவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராவார். அவர் அது பற்றி நினைவுகூர்ந்து கூறியதாவது:

அப்போதைய 50ம் ஆண்டுகளின் இறுதியில், கால் நடை வளர்ப்பு பிரதேசம் பொருளாதாரம் பின்தங்கிய நிலையில் இருந்தது. விசாலமான நிலப்பரப்பில் ஆட்கள் குறைவு. போக்குவரத்து வசதியாயில்லை. ஆயர்கள், சூரியன் உதயமாகும் போது உழைக்கத் துவங்கி, சூரியன் மறையும் போது உழைப்பை முடித்துக் கொண்டு வீடு திரும்புவர். மனோ நிலை வாழ்க்கை மிகவும் வளமற்றது.

வறட்சியான புல்வெளிக்கு மழை தேவைப்படுவது போல், அவர்கள் மனோ நிலை பண்பாட்டு வாழ்க்கையை எதிர்பார்த்திருந்தனர். அப்போது, சுநிட் புல்வெளியில் செளக்படராப் என்னும் மங்கோலிய இன ஆண், மேய்ச்சல் பகுதியின் பண்பாட்டு வாழ்க்கையை வளமாக்கும் பொருட்டு, நடமாடும் கலைக்குழு ஒன்றை நிறுவுமாறு முன்மொழிந்தார்.

அப்போது நிதி பற்றாக்குறைவினால், தொழில் முறை கலைக்குழுவை நிறுவுவதற்கு ஆற்றல் இல்லை. எனவே, கலை பிரியர்களையும் கலை தனித்தன்மை உடையவர்களையும் அணி திரட்டி கலைக்குழுவை அமைத்தனர். இது தான், துவக்கத்திலான "உலென்முச்சி" ஆகும் என்று படூசுஹங் கூறினார்.