• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-20 14:05:10    
உடல் பருமனும் உறவினர்களும்

cri

அதனால் தான் பருமன் இல்லை என்று அவர் நினைக்க வாய்ப்புண்டு. மூன்றாமவர் 85 கிலோ எடையுடன் இருப்பவர். ஆனால், கட்டான உடல் இல்லை. கிட்டத்தட்ட மாமிச மலை போல். அவரும் எனக்கும் 85 கிலோ தானே முதலாமவரை போல. எனவே நான் பருமனில்லை என நினைக்கக்கூடும். இதைத்தான் உடல் பருமன் கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இன்னொருவரின் உடல் எடை அளவின் கருத்தை மாற்ற முடியும் என்கின்றனர். ஆனால்; உடல் பருமன் கொண்ட உறவினர்களையோ நண்பர்களையோ துண்டித்து விட வேண்டும் என ஆய்வாளர்கள்; கூறவில்லை.

உடல் பருமன் இன்று முக்கியமான உடல் நலக்குறைவு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. உலகம் முழுவதும் வயதுக்கு வந்தோரில் 1.5 பில்லியன் பேர் அதிக எடை கொண்டவர்களாகவும் அதில் 40 மில்லியன் பேர் உடல் பருமன் உடையவர்களாகவும் உள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள் அதிக எடைவுள்ளவர்களாகவோ அல்லது உடல் பருமன் உடையவர்களாகவோ உள்ளனர்.

இதுவரை நடத்தப்பட்டுள்ள பல ஆய்வுகள் உடல் பருமனுக்கும், மரபணுக்களுக்கும் இடையிலான தொடர்பு அல்லது கலோரி பயன்பாடு என்பதை பற்றியே இருந்து வந்துள்ளது. கட்டுபாடான நல்ல உணவு பழக்கம் மற்றும் உடல்பயிற்சிகள் மூலம் உடலைக்; கட்டுக்கோப்பாக வைத்திருத்தல் ஆகியவையே தனிப்பட்ட முறையில் ஒவ்வொருக்கும் சிகிச்சையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவ்வாய்வின் முடிவுகள் உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சை முறையில் புதிய பாதையை காட்டியுள்ளது எனலாம். உடல் பருமன் கொண்டவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அல்லாமல் குழுவாக சிகிச்சை அளிப்பதே சாலச் சிறந்தது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்புடையவர்களாக இருப்பதால் அவர்களின் ஆரோக்கியமும் தொடர்புடையது என ஹவார்டு சமூகவியலாளர் முனைவர் நிக்கோலாஸ் கிறிஸ்டாகிஸ் கூறுகிறார்.

ஆய்வுகள் பலவாக இருந்தாலும் உடல் பருமனைப் பற்றிய இவ்வாய்வு புதிய பார்வையை நமக்கு தருகிறது என்றே சொல்லாம். உடல் பருமனுக்கு பல காரணங்கள் இருந்தாலும் தொலைவில் உள்ள நண்பர்களும், உறவினர்களும் அடுத்த வீட்டு நபர்களை போன்று பாதிப்பு ஏற்படுத்துகிறார்கள் என்பது நமக்கு தெரிவிக்கப்படும் புதிய கருத்தாகும்.

உடல் பருமனை கொண்ட நண்பர்களையும், உறவினர்களையும் விட்டுவிடக்கூடாது என இயம்பும் இவ்வாய்வு பலரும் இணைந்து பெற்றுக்கொள்ளும் சிகிச்சை முறையை பரிந்துரைப்பதன்மூலம் பல பேர் உதவி பெறும் முயற்சியாகவும் பார்க்கலாம்.

இன்னும் ... அடிவயிற்றில் ஏற்படுகின்ற பருமன் நீரிழிவு மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களோடு தொடர்புடையது என்றால் நம்பமுடிகிறதா? ஆனால் இது உண்மை என்பதை 2005 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சர்வதேச ஆய்வு ஒன்று எண்பித்துள்ளது.
மருத்துவ சிகிச்சைப்பெற்ற உள்ளுர்வாசிகள்40 விழுக்காடு ஆண் நோயாளிகளும், 42 விழுக்காடு பெண் நோயாளிகளும் அடிவயிற்றில்; பருமன் கொண்டவர்களாக உள்ளனர் என அறிவியல்பூர்வமான இவ்வாய்வு தெரிவித்துள்ளது.

அடிவயிற்றுப் பகுதி உறுப்புகளை சுற்றியுள்ள கொழுப்பு, உடல் நலத்தை பாதிக்கக்கூடும் என ஹாங்காங் பல்கலைக்கழக மருத்துவத்துறை தலைமை பேராசிரியர் லாவ் ச்சூ பாக் (Lau Chu Pak) கூறுகிறார்.

இவ்வகை கொழுப்பு, இன்சுலின் தடுப்பு, இரத்தக்குழாய் வீக்கம், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு மற்றும் இரத்தம் கட்டுதல் ஆகியவற்றை உருவாக்குகின்ற, சைற்றோகினிஸ் (Cytokines) மற்றும் கொழுப்பு அமிலங்களை வெளியிடுகிறது. இவை அனைத்தும் நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கு இட்டுச்செல்லும் உயர் ஆபத்துக்களை கொண்டுள்ளது என லாவ் ச்சூ பாக் (Lau Chu Pak) கூறியுள்ளார்.

90 சென்டி மீட்டர் (35.4 inch) இடுப்பளவு கொண்ட சீன ஆண்களும், 80 சென்டி மீட்டர் (31.5 inch) இடுப்பளவுடைய சீன பெண்களும் உடல் பருமன் கொண்டவர்களாக கருதப்படுகின்றனர். உடல் பருமன் கொண்ட பெண்கள் பருமன் இல்லாதவர்களை விட 3.3 முறை அதிகமாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படவும்;, 4 முறைக்கு அதிகமாக நீரிழிவு நோய் ஏற்படவும் வாய்ப்புகளை கொண்டுள்ளனர்.

இன்று உடல் பருமன் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் அதிகம் ஏற்பட்டுள்ளது. பெருகி வரும் விiயாட்டுக்கூடங்கள், காலை மற்றும் மாலை வேளையில் உடல் பயிற்சியில் மக்கள் காட்டும் அக்கறை அனைத்தும் உடலை கட்டுப்கோப்புக்குள் வைத்துக் கொள்ள எடுத்துக் கொள்ளப்படும் முயற்சிகளாகும்.

அன்பான நேயர்களே! நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். உடல் பருமன் இன்று பல்வேறு உடல் சிக்கல்களுக்கு காரணமாக அமைகிறது என்றால் அதனை களைவது தானே நமக்கு நல்லது.

வயதுக்கேற்ற கட்டுபாடான உடல் அமைப்பையும், எடையையும் நீங்கள் கொண்டுள்ளீர்களா? பருமன் என உங்களை ஒதுக்க ஆளில்லை. கண்ணாடி முன்நின்று உங்களையே பார்த்து உங்கள் சட்டையின் கழுத்துப்பட்டையை அதாவது காலரை துக்கிவிட்டுக் கொள்ளுங்கள்.


1 2