• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-22 17:12:58    
கடல் மீன்

cri

ஷுவாங் ஷாவ்வின் குடும்பம் வறுமையில் வாடியது. எனவே ஜியான் ஹவின் பிரபுவிடம் சென்று கொஞ்சம் உணவு தானியம் கடனாக பெற எண்ணினான். ஜியான் ஹவின் மாளிகைக்குச் சென்ற ஷுவாங் ஷாவ் பிரபுவிடம் தன் வறுமையை பற்றி கூறி தனக்கு கடனாக உணவு தானியம் தரவேண்டும் என்று கேட்டான். உடனே அந்த பிரபு, "நிச்சயமாக, என்னுடை ஆளுகைக்குட்பட்ட நிலங்களிலிருந்து விரைவில் எனக்கு வரி கிடைத்துவிடும். அதன் பின் உனக்கு நான் முன்னூறு தங்கக் காசுகள் கடன் தருவேன். அது போதும்தானே" என்று ஷுவாங் ஷாவ்வை பார்த்து கேட்டான்.

ஷுவாங் ஷாவ்வுக்கு கோபம் தலைக்கேறியது. என்னடா இது நாம் பசிக்கு உணவில்லையே என்று கேட்கிறோம், இந்த நபர் இப்படி நையாண்டி செய்கிறாரே என்று எண்ணியபடியே. பிரபு, நேற்று நான் வரும் வழியில் பாதையின் நடுவே திடீரென ஏதோ ஒரு ஒலி கேட்டது. திரும்பிப் பார்த்தேன் அங்கே ஒரு மீன் வண்டி ஓடிய பாதையில் படிந்த சுவட்டில் விழுந்து கிடந்தது. நான் அந்த மீனிடம், மீனே இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டேன்.

அதற்கு அந்த மீன் " நான் கிழக்கு கடலின் அரசனின் அமைச்சர் நான்" என்றது. மேலும், "அய்யா, என் உயிரைக் காப்பாற்ற கொஞ்சம் தண்ணீர் தர இயலுமா?" என்று கேட்டது.
நானும் "நிச்சயமாக. நான் இபோது தெற்கு நோக்கி பயணிக்கிறேன். வு மற்றும் யுவே நான்டின் அரசர்களை சந்தித்து அவர்களை சிஜியாங் ஆற்றின் நீரை இங்கே திசை திருப்புமாறு செய்கிறேன், அதற்கு அவர்களை இணங்கச் செய்கிறேன். அதன் பின் அந்த நீரிலேயே நீ கடலுக்குச் செல்லலாம். என்ன அது போதுமா? என்று கேட்டேன்.

அந்த மீன் கோபத்துடன் எனைப் பார்த்து, நான் என் உயிர்வழ்வுக்கு முக்கியமான நீர் இல்லாமல் இங்கே நிலத்தில் அதுவும் ஒரு பாதையின் நடுவே தத்தளித்துக்கொண்டிருக்கிறேன். புகலிடம் ஏதும் இல்லாத எனக்கு கொஞ்சம் தண்ணீர் இருந்தால் அதுவே என் உயிர் பிழைக்க வழி செய்யும் ஆனால் உமக்கு கண்டதையும் பேசி என்னை பழிக்கும் அளவுக்கு மூர்க்கத்தனம் உள்ளது. இதற்கு நீர் உம் வழியை பார்த்து போயிருக்கலாம். சில நாட்களில் என்னை கருவாட்டுச் சந்தையில் பார்த்திருப்பீர்" என்று மீன் கூறியது என்றான் ஷுவாங் ஷாவ்.

பிரபுவுக்கு தன் தவறு புரிந்தது. ஏழ்மை கண்டோ அல்லது மற்றவரின் இயலாமை கண்டோ நாம் நகையாடக் கூடாது.