
பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டு, விமானம் அல்லது தொடர்வண்டி மூலம், நிங்சியா குவே இனத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகர் யின் சுவான் நகரம் சென்றடையலாம். அதன் பிறகு, சுற்றுலா பேருந்து மூலம் உள்மங்கோலியத் தன்னாட்சி பிரதேசத்தின் அலசானை அடைந்த பின், உள்ளூரின் ஜிப் காரை மாற்றி, பாலைவனத்தின் மையப்பகுதிக்குச் செல்லலாம். இது, பாதான் ஜீலின் செல்லும் மிகவும் நல்ல சுற்றுலா நெறியாகும். ஆண்டின் ஆகஸ்டு திங்கள் முதல், அக்டோபர் திங்கள வரையான காலம், பாதான் ஜீலின் பாலைவனத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான மிக நல்ல காலமாகும். உள்ளூரின் சராசரி வெப்ப நிலை, 25 டிகிரி செல்சியஸ்.
|