• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-27 15:35:56    
24வது பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி

cri

உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்கும் விளையாட்டு போட்டி யூனிவெர்சியாட் என்றழைக்கப்படும் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியாகும். கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்கும் இந்த விளையாட்டுப் போட்டி கடந்த 8ம் நாள் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் சனிக்கிழமை 18ம் நாள் வரை நடைபெறும் இப்போட்டியில் 158 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 18 முதல் 28 வயது வரையான ஆண் பெண் மாணவ மாணவிகள், 15 வகை விளையாட்டுகளில் 326 தங்கப்பதக்கங்களுக்காக போட்டியிடுகின்றனர்.

சீனாவிலிருந்து 445 பேர் கொண்ட பிரதிநிதிக்குழு தாய்லாந்துக்குச் சென்றுள்ளது. கடந்த முறை துருக்கியின் இஸ்மீரில் நடந்த 23வது பல்கலைக்கழக மாணர்வர்களுக்கிடை விளையாட்டுப் போட்டியில் 21 தங்கங்களை வென்ற சீன அணி, இம்முறை அந்த எண்ணிக்கை கடந்து மேலதிக பதக்க்ங்கள் பெற முயன்றுகொண்டிருக்கிறது.
இந்த 24வது பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழாவின் போது சீன நாட்டு பிரதிநிதிக்குழு அணிவகுப்பில், ஆக்ஸ்ட் 8 2008 பெய்சிங் ஒலிம்பிக்கிற்கு வருக என்று வரவேறு பதாகையை தாங்கி நடந்தது. மேலும் 2009ம் ஆண்டு குளிர்கால பல்கலைக்கழகப் போட்டிகளும், 2011ம் ஆண்டு பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளும் முரையே சீனாவின் ஹார்பின் நகரிலும் ஷென்ஸன் நகரிலும் நடைபெறுவதை முன்னிட்டு அதற்கும் அழைப்பு விடுக்கும் பதாகைகள் அணிவகுப்பில் இடம்பெற்றன.