• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-27 15:45:56    
சர்வதேச ஹாக்கி போட்டி

cri

பெய்ஜிங்கிற்கு நல்வாழ்த்து என்ற தலைப்பில் அண்மையில் 6 நாடுகளைச் சேர்ந்த 8 அணிகள் பங்கேற்ற ஆண், பெண் ஹாக்கி போட்டி பெய்ஜிங்கில் நடைபெற்றது. 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் போது ஹாக்கி விளையாட்டுக்கென பயன்படுத்தப்படும் ஒலிம்பிக் பசுமை ஹாக்கி திடலில் 8ம் நாள் முதல் 13ம் நாள் வரை இந்த சர்வதேச ஹாக்கி போட்டி நடைபெற்றது. ஆடவர் பிரிவில் 4 அணி, பெண்கள் பிரிவில் 4 அணி என சீனா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், மலேசியா, அர்ஜென்டினா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 8 அணிகள் இந்த போட்டியில் மோதின. ஆடவர் பிரிவில் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டியில் சீன அணியை 9 - 0 என்ற கோல் கணக்கில் வென்று தங்கப்பதக்கம் பெற்றது. பாகிஸ்தான் அணி மலேசிய அணியை 4 - 1 என்ற கோல்கணக்கில் வென்று வெண்கலப் பதக்கம் பெற்றது.


பெண்கள் பிரிவில் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டியில் சீன அணியை 5 - 3 என்ற கோல்கணக்கில் வென்றது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அர்ஜென்டினா அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்க அணியை வென்றது.