வாணி -- வணக்கம். நேயர்கள், சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்று வாணி, க்ளீட்டஸ் இருவரும் இன்னொரு சுவையான சீன உணவு வகையை அறிமுகப்படுத்துகின்றோம்.
க்ஸீட்டஸ் -- ஆமாம். நேயர்களே, இன்றைய வாழ்க்கையில் மக்கள் சுறுசுறுப்பாக பணி புரிய வேண்டியுள்ளது. ஓய்வு நேரம் குறைவாகிக் கொண்டிருக்கின்றது. பணியிலிருந்து வீட்டுக்குத் திரும்பும் போது, கலைப்பு அடைவது உறுதி. எனவே பசியுடன் இருப்பாதால், கூடிய விரைவில் சுவையான உணவைத் தயாரிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்.
வாணி – அது போன்ற நிலையில், இன்று அறிமுகப்படுத்தப்படும் பிரியாணியை நீங்கள் சமைக்கலாம். செய்முறை எளிதானது. ஆனால், ஊட்டச் சத்துணவு அதிகம்.
க்ளீட்டஸ் -- வாணி, நீங்கள் முதலில் தேவையான பொருட்களை தெரிவிக்கவும்.
வாணி -- சரி, நான் கூறுகின்றேன். அரிசி சோறு 150 கிராம் இறைச்சித் தூள் 50 கிராம் சிவப்பு முள்ளங்கி 50 கிராம் காய்ந்த சிறிய இறால் 20 கிராம் சமையல் மது 5 கிராம் இஞ்சி 5 கிராம் உப்பு போதிய அளவு வெள்ளை மிளகு சிறிதளவு
வாணி -- முதலில், இஞ்சியை வரைத்து மாவாக்க வேண்டும். பிறகு, இறைச்சி தூளை சமையல் மது, இஞ்சி மாவு ஆகியவற்றுடன் கலந்து 10 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். சிவப்பு முள்ளங்கியை நன்றாக சுத்தம் செய்து, மிகச் சிறிய தூண்டுகளாக நறுக்க வேண்டும். நான் வீட்டில் இதனை தயாரிக்கும் போது, celery என்னும் கீரை வகையை சேர்க்கின்றேன். இது பச்சை நிறமாகும். ஆகையால், தயாரிக்கப்பட்ட பின், பிரியாணி சிவப்பு, பச்சை ஆகிய நிறங்களுடன் பார்ப்பதற்கு, மேலும் அழகானது.சுவையும் நல்லது. நீங்கள் சந்தையில் இதனை வாங்க முடிந்தால், இதனையும் சிறிய பொடியாக நறுக்கவும்.
க்ளீட்டஸ் – இந்த கீரை தமிழில் சிவரிக்கீரை என்று சொல்கிறார்கள். ஆனால், நான் தமிழ் நாட்டில் இதை பார்த்ததில்லை. அடுத்து, வாணலியை அடுப்பின் மீது வைத்து, இதில் கொஞ்சம் உணவு எண்ணெயை ஊற்றவும். 10 நிமிடங்கள் கழித்து காயவைக்கப்பட்ட இறைச்சித் தூளை இதில் கொட்டி வதக்கவும். சுமார் அரை நிமிடத்துக்கு பின் இறைச்சியின் நிறம் மாறும். அதன் பின், இதனை தட்டில் வைக்கலாம்.
வாணி -- சுத்தம் செய்யப்பட்ட வாணலியில் மீண்டும் சிறிதளவு சமையல் எண்ணெய் ஊற்றி, சிவப்பு முள்ளங்கி மற்றும் கீரை வகையை நன்றாக வதக்க வேண்டும். அரை நிமிடத்துக்குப் பிறகு, அரிசி சோற்றை இவற்றுடன் கலந்து கிளறலாம்.
க்ளீட்டஸ் -- இப்போது, வாணலியில் உப்பு, காய்ந்த சிறிய இறால் ஆகியவற்றை கொட்டலாம். இறுதியில் வெள்ளை மிளகுத்துளை சேர்க்கலாம். சுவையான இன்னொரு வகை பிரியாணி தயார். ருசிப்பார்க்கவும்.
வாணி -- நிகழ்ச்சியின் இறுதியில், இன்று தயாரித்த பிரியாணியில் பயன்படுத்தப்பட்ட காய்ந்த சிறிய இறால் பற்றி விளக்கி கூறுகின்றேன். பார்ப்பதற்கு இதன் அளவு மிகவும் சிறிது. சீனாவில் இந்த வகை உணவுப் பொருள் எங்கும் பார்க்கலாம். மக்கள் சூப் தயாரிக்கும் போது இதனைப் பயன்படுத்துகின்றனர். இதில் calcium சத்து அதிகம். குழந்தை, முதியோர், கர்ப்பவதிகள் ஆகியோருக்கு மிகவும் நல்லது.
வாணி -- கோடைக்காலம் வந்துள்ளது. வானிலையும் படிப்படியாக வெப்பமாக மாறியுள்ளது. அடுத்த முறை, நாம் ஒரு வகை பழம் ஐஸ் கிரீம் அறிமுகப்படுத்துவோம். ஆர்வம் கொண்ட நேயர்கள், kiwi பழம், 4, தயிர் 120 மில்லி லிட்டர், பச்சை கிரீம் 240 மில்லி லிட்டர் ஆகியவற்றை தயாரிக்கவும். kiwi fruitக்குப் பதிலாக, நீங்கள், பப்பாளிப் பழம் அல்லது மாம்பழம் பயன்படுத்தலாம்.
க்ளீட்டஸ் -- சரி நேயர்களே, இத்துடன் இன்றைய சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி நிறைவடைகின்றது.
வாணி -- அன்புள்ள நேயர்களே, அடுத்த வாரம் சந்திப்போம்.
|