• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-28 14:56:30    
நிகழ்ச்சிகளை கேட்டு தெரிவித்த கருத்துக்கள்

cri
கலை: வணக்கம் நேயர்களே. இன்றைய நேயர் நேரம் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. நிகழ்ச்சிகள் பற்றிய உங்கள் கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் ஆகியவை கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் உங்கள் சொந்தக் குரல் மூலமும் அரங்கேறும் ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக நேயர் நேரம் நிகழ்ச்சி அமைகிறது. சரி, இன்றைய நிகழ்ச்சியின் இடம்பெறும் முதல் கடிதம் யாருடையது க்ளீட்டஸ்.


க்ளீட்டஸ்: நிகழ்ச்சியின் முதல் கடிதமாக பாத்திக்காரன்பட்டி பி. எஸ். ஆனந்தி ஸ்ரீதர் எழுதிய கடிதம் இடம்பெறுகிறது. சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் 100 ஆண்டுகாலம் பழமையான பண்டைய சீன நாடகம் பற்றிய தகவலும், 30 புகழ்பெற்ற நாடகங்கள் பற்றியும் கேட்டோம். 6 பகுதிகள் கொண்ட தேனீர் விடுதி என்ற நாடகம் பற்றி கேட்டபோது, தமிழகத்தில் புகழ்பெற்ற பாரதக்கதையின் தெருக்கூத்துதான் நினைவுக்கு வந்தது. கிராமப்புறங்களில் பெரிதும் வரவேற்கப்படும் இத்தெருக்கூத்து நாடகம் சுமார் 50 பகுதிகளைக் கொண்டது. இன்றும் பல பகுதிகளில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது என்று எழுதியுள்ளார்.
கலை: அடுத்து தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி குறித்து விழுப்புரம் எஸ். சேகரின் கருத்து. திருச்சி நேயர் மன்றம் வழங்கிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியை ஏப்ரல் 11ம் நாளன்று கேட்டேன். தமிழக வானொலிகள் புத்தாண்டு நிகழ்ச்சியை 14ம் நாளன்றே ஒலிபரப்பும். ஆனால் சீன வானொலி முன் கூட்டியே, 11ம் நாள் முதலே புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியதோடு, நேயர்கள் தயாரித்து அனுப்பிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளையும் ஒலிபரப்பி தமிழ் மக்களுடன் மகிழ்ச்சியை முன்கூட்டியே பகிர்ந்துகொண்டது. பாராட்டுக்கள் என்று எழுதியுள்ளார்.


க்ளீட்டஸ்: அடுத்து இலங்கை காத்தான்குடி மு. பா. முஸ்பிறா எழுதிய கடிதம். சீன வானொலியின் நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்டு வருகிறேன். நான் மட்டுமல்லாது என் குடும்பத்தினரும் நிகழ்ச்சிகளை கேட்டு வருகின்றனர். உங்கள் நிகழ்ச்சிகளில் எனக்கு மிகவும் பிடித்தமானது, மலர்ச்சோலை நிகழ்ச்சியாகும். மலர்ச்சோலை நிகழ்ச்சியில் இடம்பெறும் தகவல்கள் எனக்கும் என்னைப் போன்ற மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிரது. நல்ல நிகழ்ச்சிகளை வழங்கும் வானொலிக்கும் நன்றிகள் என்று எழுதியுள்ளார்.
 
கலை: அடுத்து மணமேடு எம். தேவராஜா எழுதிய கடிதம். சீன அந்நிய தொடர்பில் பண்பாட்டின் பங்கினை வெளிக்கொணர வேண்டும் என்ற சீன மக்கள் அரசியல் கலந்தாலோசனை மாநாட்டின் பிரதிநிதிகள் பலரது விருப்பம் பற்றி செய்தித்தொகுப்பில் கேட்டேன். நாடுகள் பரஸ்பரம் பண்பாட்டை புரிந்துகொள்வது நட்புறவு வளரவும், ஒத்துழைப்பு அதிகரிக்கவும் வழிவகுக்கும் என்பது உண்மையே. இது தொடர்பாக சீன அரசு நீண்டகாலமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்று எழுதியுள்ளார்.
 
க்ளீட்டஸ்: அடுத்து ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் பற்றி பாத்திக்காரன்பட்டி சைனா தீபிகா எழுதிய கடிதம். ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் பற்றிய விபரம் கேட்டேன். ஒலிம்பிக் போட்டியை நடத்த உரிமை பெற்றது முதல் வெற்றி. அதை சீரும் சிறப்புமாக நடத்திட அயரா முயற்சி இரண்டாவது வெற்றி. திறமையுடன் நடத்தும் வெற்றி இலக்கை எட்டிவிட்டோம் என்பதற்கு அறிகுறியான ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் மூன்றாவது வெற்றி. இம்மூன்றிலும் வெற்றிபெற்ற சீனாவுக்கு , இறுதிப்போட்டியில் மகத்தான வெற்றி பரிசினை அதன் வீரர்கள் பெற்றுத்தந்து, ஈடிணையில்லா பெரும் மதிப்பை அளித்து விளையாட்டு உலகில் முதலிடம் தேடி தரவேண்டும் என்று மனதார பாராட்டுகிறேன் என்று எழுதியுள்ளார்.


……
கலை: அடுத்து இலங்கை, தொண்டைமானாறு நேயர் அற்புதவேல் சசிக்குமார் எழுதிய கடிதம். சீன வானொலியின் நிகழ்ச்சிகள் யாவும் மிகவும் நன்றாக உள்ளன. சீன வானொலியின் நேயராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். நீங்கள் ஒலிபரப்பும் பாடல்களும் இனிமை. என் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் கூட சீன வானொலி மீது மிகவும் விருப்பம் என்று குறிப்பிட்டுள்ளார்.
க்ளீட்டஸ்: அடுத்து தா. பழூர் லயன் எஸ். கனகசபை எழுதிய கடிதம். தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி வானொலியில் கேட்கும்போது நன்றாக புரிகிறது. தமிழ் உச்சரிப்பில் இல்லாதவற்றை கேட்க இதமாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இந்நிகழ்ச்சியின் சீன மொழி எழுத்துக்கள் மற்றும் தமிழ் உச்சரிப்பு ஆகியவற்றை அச்சடித்து அனுப்பினார் பயன் பெறலாம் என்று எழுதியுள்ளார்.
 கலை: கனகசபை அவர்களே, சீன மொழியை கற்கும் உங்கள் ஆர்வம் வரவேற்கத்தக்கது. ஏற்கனவே தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியின் பாடங்கள் தொகுத்து அச்சடிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன என்பதை நினைவு படுத்த விரும்புகிறோம்.