• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-28 15:05:24    
சீனாவில் மாணவர்களின் சுமையைக் குறைப்பது

cri

பெய்ஜிங்கில் கல்வி வசதிகள் பரவாயில்லை. ஆனால், தமது குழந்தைகள் உயர் தரமான பள்ளிகளில் சேர வேண்டும் என்று ஒவ்வொரு குடும்பமும் விரும்புகின்றது. ஆகையால், ஓய்வு நேர வகுப்புகளில் சேர குழந்தைகளை பெற்றோர்கள் வற்புறுத்துவதாக ஜுன்ஜுனின் தாதா கூறினார்.
இந்த நிலைமை குறித்து, சீன இளைஞர் ஆய்வகத்தின் துணைத் தலைவர் Sun yun xiao புரிந்துணர்வை வெளிப்படுத்தினார்.


பெற்றோர்களின் இத்தகைய விருப்பத்தில் உரிய அல்லது ஆக்கப்பூர்வப் பகுதி இடம்பெறுகின்றது. ஆனால், பல பெற்றோர்கள் குழந்தைகளின் மீது கூடுதலான விருப்பம் கொண்டு, அவர்களை வளர்ப்பதில் நிர்பந்தமாக செயல்படுத்துகின்றனர். பள்ளியில் சேர்வது, வேலை வாய்ப்பை பெறுவது ஆகிய பிரச்சினைகளைப் பார்த்தால், அவர்களின் இந்த செயல்கள் புரிந்து கொள்ளப்பட முடியும் என்றார் அவர்.
கடந்த சில ஆண்டுகளாக, கட்டாய கல்வி கட்டத்தில் தேர்வு இல்லாத நிலையில் வீட்டுக்கு அருகிலுள்ள பள்ளியில் குழந்தைகள் சேர்க்கப்படலாம் என்ற அமைப்புமுறை பெய்ஜிங்கில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஆனால், தமது குழந்தை கல்வி தரம் மேலும் சிறப்பான பள்ளிகளில் சேர பெற்றோர்கள் விரும்புகின்றனர். இதற்காக அவர்கள் பெரும் கட்டணம் செலுத்துகின்றனர். இந்தக் கட்டணம் தேர்ந்தெடுக்கும் கட்டணமாக அழைக்கப்படுகின்றது.

 
புள்ளிவிவரங்களின் படி, பெய்ஜிங்கில் ஒரு இடைநிலை பள்ளி மாணவரை வளர்ப்பதில் 2 இலட்சம் யுவான் தேவைப்படுகின்றது. துவக்கப் பள்ளி முதல் சீனியர் பள்ளி வரை பள்ளிகளைத் தேர்ந்தெடுக்க செய்ய வேண்டுமானால், மேலும் சில பத்து ஆயிரம் யுவான் தேவைப்படுகின்றது. 2 இலட்சம் யுவான் என்றால் ஜுன்ஜுன் அம்மாவின் 10 ஆண்டுகால வருமானத்துக்குச் சமம். பள்ளிகளைத் தேர்ந்தெடுவதென்ற பிரச்சினையைத் தீர்ப்பது மக்களின் கல்வி சமையைக் குறைக்கும் முக்கியப் பிரச்சினை என்பது தெளிவு.
இது குறித்து, கட்டாய கல்வி சட்டத்தை சீனத் தேசிய மக்கள் பேரவை திருத்தியுள்ளது. பள்ளிகளைத் தேர்தெடுக்கும் நடவடிக்கை தடைக்கப்படுகின்றது என்று சீனக் கல்வி துறை அமைச்சர் சோ ஜின் கூறினார்.
கடந்த ஆண்டு கட்டாயக் கல்வி சட்டத்தின் திருத்தத்தை அரசு வெளியிட்டது. கட்டாயக் கல்வி கட்டத்திலான மாணவர்கள் வீட்டுக்கு அருகிலுல்ள பள்ளியில் சேர வேண்டும் என்று தெளிவாக விதிக்கப்படுகின்றது. பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. கூடுதலான கல்வி கட்டணத்துக்கும்த் தடை விதிக்கப்பட்டது என்றார் அவர்.


அவர் மேலும் கூறியதாவது
நகரங்களில், ஒவ்வொரு பள்ளியும் ஒரு சிறந்த வரையறைக்கிணங்க, பள்ளியின் வசதி, ஆசிரியகளின் தரம் ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும். வசதி குன்றிய பள்ளிகளை பெரும் முயற்சியுடன் சீராக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியின் கல்வி தரம் அடிப்படையில் சம நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு செய்தால், பள்ளிகளைத் தேரந்தெடுக்கும் பிரச்சினை நன்றாக தீர்க்கப்படும் என்றார் அவர்.
ஜுன்ஜுன் தொடர்ந்து ER HU கற்றுக்கொள்கின்றார்.பல்வகையான உதவி வகுப்புகளும் நிறுத்தப்படவில்லை. ஏனென்றால், போட்டிகள் இன்னும் நிலவுகின்றன. அரசின் நடவடிக்கை பயன் பெறுவதற்கு இன்னும் நேரம் தேவைப்படுகின்றது.